Modakams/Kozhukattais: FAQs

So far, we have learnt about the different methods of preparing the outer dough for Kozhukattais and the choices of Pooranams/Fillings to be kept inside the Kozhukattais.

Skip to read in Tamil

But still it would be inconvenient for some of you to shape the outer dough and the steaming them. Let us dive into the tips and tricks involved in it through a FAQ session.

Prepare the outer dough in anyone of the four methods and let it cool. Cooling doesn’t mean chilling the dough. It should be in bearable temperature, or in short, warm to touch. While it is cooling, cover the dough with a damp cloth. Meanwhile prepare any filling to be stuffed into the Modakam.

Grease your hands with a little Gingelly Oil and take a gooseberry sized ball of the dough. Knead well to make it smooth and soft. It is better to grease your hands before every modakam.

Take a small piece of Banana leaf or a Polythene sheet.

Wipe it clean and apply some oil on the surface.

Place the ball of dough on the greased surface and pat into a small disc with your fingers. The disc should be about as thick as a chapathi. The modakams prepared in this way will be semi circle in shape.

 

 

If using Polythene sheet, cover with another greased sheet on top and press using a flat bottomed vessel as shown in the picture. This will make the discs round and even in thickness. Place a small ball of filling in the center, fold with the polythene sheet, along the middle and press the edges of the Modakam from top to prevent the filling coming out.

If using a banana leaf, pat the dough into a disc, place a small ball of filling in the center and fold the banana leaf to enable the Modakam to close. Open the leaf, press the edges of the Modakam using your fingers to seal it.

 

Once all modakams are done, arrange on an Idly Plate or a Steamer, leaving enough gap between two Modakams. Keeping one over another will damage the shape of the Modakams. You can probably only keep one plate at a time or else the stacked plates would damage the modakams below it. So, while you steam the first plate, start shaping the modakams for the second plate.

 

How long should I steam the Modakam?

It is enough to steam the Modakams for 10 minutes. If it looks glossy on top and is not sticking to the fingers when touched, we can learn that the Modakams are cooked properly.

 

Why do my Modakams break when I try to remove them using a Ladle or Spoon or a Pair of Tongs?

If you try to remove it soon after it is taken out of the steamer, it will break. After removing the first plate, place the second plate inside the steamer and continue to shape the modakams for the third plate. After the second plate is steamed perfectly and the third plate is placed inside, the first plate (after nearly 10 minutes of standing time) will be ready to be cleared. Do remember that you should steam only one plate of modakams at a time.

 

How do I find out the filling inside the modakam, when all look similar?

If you prepare two kinds of fillings, differentiate them through their shapes. For example, spicy filling can be done in semi circular shapes and sweet ones in a ball shape with a tuft (kudumi) on top.

 

I do not know how to shape them like a coconut with tuft on top….

No worries! Some find it difficult to shape them in a uniform size and others cannot shape them like mini coconuts. Here are a few pointers:

 

Take a small soup ladle or a measuring spoon that is deep (as shown in the picture).

Grease with oil inside the spoon. Take a small ball of the dough, place it inside the greased spoon and pat to line along the inside of the spoon.

Tap upside down on the counter and you will have a cup shaped dough cover as seen in the picture.

Pick up the modakam shell, cup it in your hand and proceed to stuff with the filling.

Now, bring together the edges like a tuft and voila you got your own DIY Modakam mould.

 

Are there any other shapes than these two?

Continue to shape the outer dough using a spoon as above. Place the filling and close the edges and roll into the shape of Laddus. (All the Pictures of Lord Ganesha have this shape only, I wonder why)

 

Whatever be the tips and tricks, I do not feel comfortable shaping them….

Don’t worry. Modakam moulds in different shapes and sizes are available in the market. Grease inside the mould, press the dough on all sides, stuff with the fillings and close using a small ball of the dough at the bottom. Open the mould to get your Modakam in a perfect shape.

 

I like this idea. But is there any chance of making Modakams without preparing outer dough and filling separately and assembling them into one shape?

Why not? Visit here for hazzle free ways to prepare modakams.

 



 

கொழுக்கட்டை செய்வது பற்றி  சில சந்தேகங்கள்:

 

மேல் மாவு தயார் பண்ணியாச்சு. உள்ளே வைக்க பூரணமும் தயார். ஆனால் மேல் மாவை சொப்பு செய்யத் தெரியலையேன்னு கவலையா? வாங்க, அதுக்கும் சில டிப்ஸ் பார்க்கலாம்.

மேல் மாவு தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டீர்களா? அதில் சொன்ன ஏதாவது ஒரு முறையில் மாவு தயாரித்து ஆற வைக்கவும்.

ஆற வைப்பது என்றால் குளிர வைப்பது அல்ல. கையால் தொடக்கூடிய அளவு வெதுவெதுப்பாக ஆகும்வரை ஈரத் துணியில் சுற்றி வைப்பது.

பூரணமும் தயார் செய்து கொண்ட பின் கையில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து அழுந்த உருட்டவும். மாவில் கட்டிகள் இல்லாமல் ஸ்மூத்தாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் எண்ணெய் தொட்டுக்கொண்டு செய்தால் ஒட்டாமல் வரும்.

ஒரு சிறிய வாழையிலை அல்லது பாலிதீன் ஷீட்டில் எண்ணெய் தடவி, உருட்டின மாவை வைக்கவும். கையால் வட்டமாகத் தட்டி வைக்கவும். மாவு மிகவும் தடியாகவும் இருக்கக் கூடாது, கிழியும் அளவு மெலிதாகவும் இருக்கக் கூடாது.

 

 

பாலிதீன் ஷீட் என்றால் உருட்டின மாவின் மேலே எண்ணெய் தடவின இன்னொரு பாலிதீன் ஷீட்டை வைத்து படத்தில் காட்டியபடி ஒரு டபராவால் அழுத்திவிட்டால் வட்டமாக வந்துவிடும். ஒவ்வொரு முறையும் ஷீட்டிலும் எண்ணெய் தடவ மறக்க வேண்டாம். நடுவில் பூரணம் வைத்து ஷீட்டை மடித்துவிட்டு ஓரங்களை பூரணம் வெளியில் வராதபடி அழுத்திவிட்டு ஷீட்டை திறந்தால் அரைச்சந்திரன் வடிவில் கொழுக்கட்டை தயார்.

வாழை இலையில் செய்வது என்றால் கையால் தட்டிய பின் நடுவில் பூரணம் வைத்து இலையை பாதியாக மடித்தால் போதும். தட்டி வைத்த மேல் மாவின் முனைகளை பூரணம் வெளியில் வராதபடி விரல்களால் அழுத்திவிட்டால் அரைச் சந்திரன் வடிவில் கொழுக்கட்டை தயார்.

இட்லித் தட்டில் வைக்கும் அளவு எண்ணிக்கையில் செய்து வைத்துக்கொண்டு ஆவியில் வைத்து எடுக்கலாம். கொழுக்கட்டைகளை ஒன்றன் மேல் ஒன்று இடிக்காமல் வைத்தால் ஷேப் ஒழுங்காக வரும். ஒரு தட்டு தயார் செய்து ஆவியில் வைத்த பின் அடுத்ததை தயார் செய்யலாம்.

 

ஆவியில் எத்தனை நேரம் வைக்கலாம்?

சுமார் பத்து நிமிடங்கள் அல்லது திறந்து பார்த்தால் கொழுக்கட்டைகள் கண்ணாடி போல வெந்திருக்கும், கையால் தொட்டால் ஒட்டாமல் வரவேண்டும். அதுதான் வெந்ததன் அடையாளம்.

 

கரண்டி, ஸ்பூன், tongs போன்றவற்றால் எடுக்கும்போது கொழுக்கட்டைகள் பிளந்து போகின்றதே?

ஒரு தட்டில் கொழுக்கட்டைகளை இடம் விட்டு அடுக்கி ஆவியில் வைத்து எடுத்ததும் இறக்கி உடனேயே தட்டை விட்டு நீக்கினால் பிளக்கத்தான் செய்யும். அடுத்த செட் தயாரானதும் இன்னொரு இட்லி தட்டில் வைத்து அதை ஆவியில் வைத்து மூன்றாம் தட்டுக்கு தயார் செய்யும்போது முதல் தட்டில் உள்ள கொழுக்கட்டைகள் ஓரளவுக்கு ஆறியிருக்கும். அப்போது அவற்றை நீக்கலாம். அப்போது கிழியாது.

 

எந்த கொழுக்கட்டை உள்ளே எந்த பூரணம் இருக்கு? சஸ்பென்சா இருக்கே?

ஒவ்வொரு வித பூரணத்துக்கும் ஒரு ஷேப் என்று வைத்துக்கொண்டால் சுலபமாக அடையாளம் காணலாம்.

உதாரணமாக கார பூரணம் என்றால் அரைச்சந்திரன் வடிவில் என்றும் குடுமி தேங்காய் போல என்றால் அதில் இனிப்பு என்றும் செய்யலாம்.

 

குடுமித் தேங்காய் ஷேப்பில் செய்ய வரவில்லையே?

 

இதற்கும் டிப்ஸ் உண்டு. சிலருக்கு ஒரேயளவில் வராது, சிலருக்கு குடுமி போலப் பிடிக்க வராது. அவர்கள் படத்தில் கண்டபடி, ஒரு குழிக்கரண்டியின் உள்புறம் எண்ணெய் தடவிக்கொண்டு அதன் உள்ளே மாவை மெலிதாக தட்டி கரண்டியை லேசாகத் தட்டினால் படத்தில் உள்ளதுபோல மாவு அரைப் பந்து வடிவில் விழும். அதனுள் சிறிய உருண்டை பூரணத்தை வைத்து ஓரங்களில் உள்ள மாவை குடுமி போலப் பிடித்து வைக்கலாம்.

 

வேறு எந்த வடிவில் கொழுக்கட்டைகள் செய்ய முடியும்?

மாவை வட்டமாகத் தட்டி நடுவில் பூரணம் வைத்து லட்டு போல அப்படியே உருட்டி வேகவிட்டாலும் கொழுக்கட்டைதான். (பெரும்பாலான பிள்ளையார் படங்களில் இப்படித்தானே கொழுக்கட்டை இருக்கும்?)

 

எப்படிப் பண்ணாலும் எனக்கு கொழுக்கட்டை செய்ய வருவதேயில்லையே…

கவலையே வேண்டாம். கடைகளில் கொழுக்கட்டை அச்சுகள் விதவிதமாகக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உள்ளே எண்ணெய் தடவி மாவை எல்லாப் புறங்களிலும் படும்படி அழுத்திவிட்டு நடுவில் ஒரு உருண்டை பூரணம் வைத்து அடிப் பகுதியையும் சிறு உருண்டை மேல் மாவால் மூடி அச்சைப் பிரித்தால் அழகாக வந்துவிடும். ஆவியில் வேகவைத்து Professional போலக் காட்டிக் கொள்ளலாம்.

 

இது நல்ல ஐடியாவா இருக்கே….எனக்கு மேல் மாவு, பூரணம்ன்னு தனித்தனியா செய்யாம சுலபமா செய்யக் கூடிய கொழுக்கட்டை செய்யணுமே…ஏதாவது ஐடியா ப்ளீஸ்….

 

இனி சுலப முறையில் மோதகம் செய்யும் முறையை பார்க்கலாம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *