Modakams/Kozhukattais: Hassle free ways

Preparing the outer dough and fillings for Modakams/Kozhukattais and shaping them before steaming are all time consuming processes and they require more patience, time and effort which is not possible for many of us today.

Skip to read in Tamil

I have some tips to those category of people which help them give a satisfaction of preparing modakams in varieties, that too easily. It is advisable to have a Modakam mould (kozhukattai achu) for a perfect shape.

 

Kesari Modakam:

  1. Prepare Kesari bath in your own way.
  2. Let it come to warm temperature.
  3. Grease a Modak mould with ghee.
  4. Press a ball of kesari into the mould, open and arrange on a plate.
  5. You can name it as kesari modak.

 

Khoya Modakam:

  1. Sugar less Khoya is readily available in the market.
  2. Get a packet of Khoya and make Pal gova if you know the process. It is simple.  
  3. Grate the Khoya in a grater to make the process easier.  
  4. Measure 2 cups of Khoya and add ¼ cup powdered sugar to it and saute till they mix well and lose all the moisture contents.  
  5. Remove and spread on a plate till it cools.
  6. Dust the Modak mould with powdered sugar. (do not forget to dust sugar powder every time)
  7. Knead well and press into the Modak mould.

Open and arrange on a plate.  This is really yummy kozhukattai.  Stays for a longer period of time.

Variations:

Add a few spoons of cocoa powder to the khoya + sugar mixture before removing from heat for a variation of Chocolate Mawa Modak.

 

Spicy Rawa Modakam:

It is simple.  Prepare Rawa Uppuma without onion and garlic.  Press into the mould for a spicy version.  Do not forget to add a few broken cashews for a rich taste.

Variations:

Instead of using Suji alone, take equal amount of Suji + Vermicelli for a variation.

 

Undralu:

Undralu is the Telugu term for Kozhukattai.  Prepare Arisi Upma and roll into perfect balls like making Laddu.  

 

Dates and Nuts Kozhukattai:

Toast on a tawa a handful of nuts like Almonds, Pistachios and Cashews and powder coarsely.  Add deseeded Dates or Dried Figs till they blend together.  

Press into the mould and arrange on a plate.

 

Idiyappam (Sevai) Kozhukattai:

This dish is more or less similar to the Sri Lankan Delicacy called Lavaria.  Prepare Idiyappam dough  and fill into an Idiyappam Press.  Prepare any of the filling mentioned here to stuff between the Kozhukattais.

Squeeze the dough into each slot of an Idly plate upto ½ inch thickness.  Place the filling on top and squeeze again over it to cover the filling.  Steam and enjoy.  This kozhukattai is bigger in size as the outer cover is made out of Idiyappams.  

Pour coconut milk on each kozhukattai and serve.

 

Ammini kozhukattai / Manikozhukkattai:

In olden days it was a tradition to prepare this Ammini Kozhukattai and distribute to the neighbouring children when the new born babies grow and try to crawl across the doorstep.  It is so simple.  Prepare the outer dough alone in any one of the 4 ways mentioned here.

Roll them into small marble sized balls and steam for 10 minutes.  Cool them and spread on a larger plate.

In the meanwhile grind coarsely  a cup of freshly grated coconut along with 2 to 3 red chilies and half a cup of fried grams or Pottukalalai.  Do not add more water, it should be like Chutney in thick consistency.  Add salt to taste.  Add a pinch of Asafetida for a nice flavour.

Once the marble sized balls cool completely, add the ground chutney to it and mix gently to enable the chutney coat every ball.  This step is similar to marinating the balls.

Heat a pan add a generous spoon of oil, add mustard seeds and curry leaves to it.  When the mustard crackles add the coated balls of kozhukattai to it and stir without breaking the ball.  

Remove from stove and serve when warm.

Notes:

This can be prepared to use the left over excess outer dough of kozhukkattai too.

 

Pal kozhukattai:

This comes under Payasam category.  

Prepare the outer dough for kozhukattai  using 1 cup of rice flour.  Make slightly bigger than marble sized balls of it and steam on a plate.  Cool.

Take 2 cups of powdered jaggery in a pan and add 4 cups of water to it.  The water can be double the quantity of Jaggery.  (for a cup of flour used, use 2 cups of powdered jaggery).  

Once the jaggery dissolves in water, filter the dirt and again heat the jaggery water on high flames.  

When it starts to boil reduce the heat, add the steamed kozhukattais slowly, and let the balls get infused with the sweetness.  

Once they start floating on the sweet syrup, add coconut milk and cardamom powder.  Switch off the stove and serve hot or chilled.

Notes:  

Using Cow’s milk in place of Coconut Milk is another variation.  Or a mixture of cow’s milk and coconut milk can also be used.

 

Pillaiyarpatti style Modakam:

Toast 1 cup raw rice till they pop up and turn pure white in color.  Please be careful not to blacken the rice.  

Similarly, toast 3 teaspoons of Mung dal (pasiparuppu) in the same pan.  

Powder everything together in a Mixie.  It is not required to powder it finely.  At the same time, it need not be coarsely ground.  See to that it is similar to Suji / Semolina in texture.

Grate 2 cups of Jaggery and add 1 cup water to it.  Let the jaggery dissolve in water.  

Filter the impurities and bring to a boil.  When it starts to boil, add the fine rice rava to it and stir without lumps.  Add 2 more cups of water to it.  

Add cardamom powder and ½ cup freshly grated coconut to the mixture.  

Transfer this mixture to a Pressure cooker and cook for 3 whistles.  When the pressure settles down saute the sweetened rava in a Pan, using a few teaspoons of ghee, till it leaves the sides of the pan.  Cool and roll into even sized balls.

Variations:

Three cups of water for 1 cup of rawa is normally required  to cook rice.   Reduce the water to 2 ½ cups and add  half cup coconut milk instead.  In that case, freshly grated coconut can be omitted.

 



 

குழப்பமில்லாக் கொழுக்கட்டைகள்:

 

 

கொழுக்கட்டைக்கு மேல் மாவு தயாரிப்பது, உள்ளே வைக்க பூரணம் செய்வது எல்லாமே , நேரத்துடன் வேலையையும்  வாங்கும் விஷயங்கள் என்பது சிலர் எண்ணம்.  சரிதானே? அவர்களும் கூட சுலபமாக கொழுக்கட்டைகள் செய்யும்படி, சில ஐடியாக்கள் கைவசம் உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.  ஆனால் கடையில் கிடைக்கும் ஒரு கொழுக்கட்டை அச்சு வாங்கி வைத்துக்கொண்டால் இன்னும் அழகாக இருக்கும்.

 

கேசரி கொழுக்கட்டை:

உங்களுக்கு விருப்பமான முறையில் ரவா கேசரி செய்து கொள்ளுங்கள்.

கை பொறுக்கும் சூட்டுக்கு வரும் வரை ஆற வைத்து நெய் தடவின கொழுக்கட்டை அச்சில் ஒரு உருண்டை கேசரியை அடைத்து, அச்சைத் திறந்தால் ஒரேயளவில் அழகாகக் கொழுக்கட்டைகள் நிமிடத்தில் தயார்.  கேசரி கொழுக்கட்டை என்று சொல்லிக்கொள்ளலாம்.

 

கோவா கொழுக்கட்டை:

எல்லோரும் விரும்பும் கொழுக்கட்டை இது.  கடையில் ரெடிமேடாகக் கிடைக்கும் சர்க்கரை இல்லாத கோவாவை வாங்கினால் போதும், வேலை ஆய்டும்.

சர்க்கரை இல்லா கோவாவை காரட் துருவியில் துருவிக்கொள்ளவும். (சூப்பர் மார்கெட்டுகளில் கிடைப்பது கூல் செய்யப்பட்டு கட்டியாக இருக்கும் என்பதால் துருவுவது வேலையை சுலபமாக்கும்)

2 cups  கோவா என்றால் ¼ cup  சர்க்கரை போதும்.  துருவின கோவாவுடன் சர்க்கரையும் சேர்த்து இரண்டும் நன்றாகக் கலந்து கொண்டு ஓரங்களை விட்டு வரும்வரை வாணலியில் கிளறவும். அடுப்பு குறைந்த தீயில் இருப்பது நல்லது.  சர்க்கரையை பொடித்துச் சேர்ப்பது இன்னும் நல்லது.

கிளறின கோவாவை ஆறவைத்துக் கொள்ளவும்.

பொடித்த சர்க்கரையை அச்சில் உள்ளே தடவிக்கொண்டு கோவாவை உள்ளே அடைக்கவும். ஒட்டாமல் வர, ஒவ்வொரு முறையும் அச்சில் சர்க்கரைப் பொடியைத் தடவிக்கொண்டு அடைக்க மறக்க வேண்டாம்.

செய்தவர்களுக்கு கூட மிஞ்சாமல் பறக்கக் கூடிய சுவையான கோவா கொழுக்கட்டை தயார்.

மாற்று முறை:

கோவாவைக் கிளறும்போது கோகோ பவுடர் சேர்த்துக் கிளறினால் சாக்லேட் கோவா மோதகம் கிடைக்கும்.

 

ரவை கார கொழுக்கட்டை:

வெங்காயம் பூண்டு இல்லாமல் ப்ளைனாக ரவா உப்புமா செய்துகொண்டு சூடு ஆறினதும் அச்சில் அடைத்தால் சுலபமான ரவை காரக் கொழுக்கட்டை.  ரவையில் தாளிப்புடன் முந்திரியும் சேர்க்க மறக்கவேண்டாம்.

மாற்றுமுறை:

ரவையுடன் சேமியாவும் சேர்த்துச் செய்வது கண்ணுக்கு அழகாக இருக்கும்.

 

உண்ட்ராலு:

பேரைப் பார்த்து பயந்துவிடாதீர்கள்!  தெலுங்கில் கொழுக்கட்டையை இப்படித்தான் சொல்கிறார்கள்.  

ரவைக்கு பதில் அரிசி ரவையில் உப்புமா செய்து உருண்டையாகப் பிடித்து வைத்தால் உண்ட்ராலு என்று சொல்லிக்கொள்ளலாம்.

 

Dates n Nuts கொழுக்கட்டை:

முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகள் தலா ஒரு கைப்பிடி எடுத்து வாணலியில் கிரிஸ்பாக வறுத்து வைக்கவும்.  மிக்ஸியில் ரவை போலப் பொடித்துக் கொண்டு கெட்டிப் படும் அளவுக்கு கொட்டை நீக்கின பேரீச்சம்பழம் அல்லது உலர் அத்திப்பழம் சேர்த்து அரைத்து அச்சில் அடைத்து எடுத்தால் சுவையான, ஆரோக்கியமான Dates n Nuts கொழுக்கட்டை தயார்.

 

இடியாப்பக் கொழுக்கட்டை:

இது ஸ்ரீலங்கன் ஸ்பெஷலான லவாரியாவை ஒத்த ஒரு கொழுக்கட்டை.

அவரவர் விருப்பப்படி இடியாப்பம் மாவு தயாரித்துக் கொள்ளவும்.

இங்கே சொன்ன ஏதோ ஒரு முறையில் பூரணமும் தயாரித்துக் கொள்ளவும்.

ஒரு இட்லித்தட்டில் ஒவ்வொரு குழியிலும் அரை இன்ச் அளவுக்கு இடியாப்பம் பிழிந்துகொண்டு மேலே பூரணம் வைத்து அதன் மேலே மறுபடி இடியாப்பம் பிழிந்து ஆவியில் வைத்து எடுக்கவும்.

அளவில் சற்றே பெரிய இந்தக் கொழுக்கட்டை சூடாக இருக்கும்போதே மேலே தேங்காய் பாலை ஊற்றி பரிமாறலாம்.

 

அம்மிணிக் கொழுக்கட்டை அல்லது மணிக்கொழுக்கட்டை:

வீட்டில் உள்ள குழந்தைகள் தவழ்ந்து சென்று முதல்முறையாக வாசல்படியைக் கடந்தால் இதைச் செய்து அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு விநியோகிப்பது பழைய வழக்கம்.  கொழுக்கட்டை மேல் மாவு மிஞ்சினாலும் செய்யலாம்.

இங்கே சொன்ன நாலு முறைகளில் ஏதாவது ஒரு முறையில் கொழுக்கட்டை மேல் மாவு தயாரித்துக் கொள்ளவும்.  கோலிகுண்டு அளவுக்கு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி பத்து நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்து ஆற வைக்கவும்.

அதற்குள் ஒரு கப் தேங்காய் துருவலுடன் காரத்துக்கு 2 அல்லது 3 வர மிளகாய்கள், அரை கப் பொட்டுக்கடலை சேர்த்து மிகவும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டிச் சட்னியாக அரைக்கவும்.  உப்பு, பெருங்காயம் சேர்த்து கலக்கி வைக்கவும்.  

ஆறின மணிக் கொழுக்கட்டைகள் மீது அரைத்த சட்னியைப் போட்டு உருண்டைகள் நசுங்கி விடாமல் ஒவ்வொரு உருண்டையிலும் படும்படி

பிசிறி வைக்கவும்.   மாவு உருண்டைக்குள் உப்பு காரம் இறங்கும் வரை சிறிது நேரம் வைக்கவும்.  

வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து பிசிறி வைத்த மணிக் கொழுக்கட்டைகளையும் சேர்த்து உடையாதபடி கிளறி இறக்கவும்.  சுவையான காரமான மணிக் கொழுக்கட்டை தயார்.

 

பால் கொழுக்கட்டை:

இது பாயச வகைகளில் வருகிறது என்றாலும் கொழுக்கட்டையிலும் சேரும்.

ஒரு கப் அரிசிமாவில் கொழுக்கட்டை மேல் மாவு தயாரித்துக் கொள்ளவும்.  

மாவு ஆறியதும் கோலிகுண்டை விட சற்றே பெரிதாக உருட்டி ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும்.

ஒரு அகன்ற வாணலியில் ரெண்டு கப் பொடித்த வெல்லத்தை போட்டு (ஒரு கப் மாவுக்கு ரெண்டு கப் வெல்லம் என்பது கணக்கு) நாலு  கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.  

(கொழுக்கட்டை வேக அதிகம் நீர் தேவை என்பதால் வெல்லம் எடுத்த அளவுக்கு இரண்டு  பங்கு வரை  நீர் சேர்க்கலாம்)

வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றி வெந்த கொழுக்கட்டைகளை சேர்த்து உருண்டைகள் உடையாதபடி வேக விடவும்.  

உருண்டைகள் மிதக்க ஆரம்பித்ததும் ஏலத்தூள் சேர்த்து தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கிவிடலாம்.

இந்த பால் கொழுக்கட்டை பாயசத்துக்கு முந்திரி, நெய் என்று எந்த செலவும் இல்லை.  

மாற்றுமுறை:  

தேங்காய்ப்பால் சேர்ப்பதற்கு பதில் பசும்பால் சேர்த்தும் செய்யலாம்.  அல்லது பசும்பாலுடன் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.

 

பிள்ளையார்பட்டி கொழுக்கட்டை:

இதுவும் செய்வது சுலபமே.

ஒரு கப் பச்சரிசியை வாணலியில் பொரியும்படி வறுக்கவும்.  கருகக் கூடாது, அரிசி பால் போல வெளுத்தால் போதும்.

3 டீஸ்பூன் பாசிப்பருப்பையும் வறுத்துக்கொள்ளவும்.

அரசி + பருப்பை மெல்லிய ரவையாக உடைக்கவும்.  மாவாகவும் இல்லாமல், பெரிய குருணையாகவும் இல்லாமல் உப்புமா ரவை பதத்தைப்போல அரைக்கலாம்.

ஒரு வாணலியில் 2 cup பொடித்த வெல்லத்துடன் 1 cup தண்ணீர் சேர்த்து கரையவிடவும்.

வெல்லம் கரைந்ததும் கல், குப்பைகளை வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றவும்.  கரைத்த வெல்லத்தில் உடைத்த ரவையைக் கொட்டி கட்டிகள் இல்லாமல் கிளறவேண்டும்.  

வாசனைக்கு ஏலத்தூள், அரை கப் துருவிய தேங்காய் சேர்க்கவும்.

மேலே இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக்கலந்து குக்கரில் 3 விசில் வரை வைத்து வேகவிடவும்.

மீண்டும் வாணலியில் ரெண்டொரு ஸ்பூன் நெய் விட்டு வெந்த கலவையை ஒட்டாமல் வரும்வரை கிளறி இறக்கி ஆறவிடவும்.

ஆறியதும் உருண்டைகளாக உருட்டி வைத்தால் பிள்ளையார்பட்டி ஸ்டைல் மோதகம் தயார்.

குறிப்பு:

ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் என்ற அளவில் தண்ணீர் எடுப்பது ரவை சுலபமாக வேக உதவும். விரும்பினால் ரெண்டரை கப் நீருடன் நிறுத்திக் கொண்டு துருவின தேங்காய்க்கு பதில் மேலே தேங்காய் பால் சேர்க்கலாம்.  

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *