Bajji Varieties

It is a popular south indian street food, easy to make when we have unexpected guests.  Apart from that, it is a tradition to prepare Bajjis along with Kesari (sometimes people refer to this as Bajji Sojji satirically) when prospective Bridegrooms visit the bride’s place with family.  Anyhow this dish is liked by many. When we think of visiting any of the beaches in chennai, the first thing that comes to our mind are these Hot and Spicy Bajjis.

Skip to read in Tamil

I agree.  Most of us know how this popular snack is made.  But the focus here is not the recipe, but the different ways of preparing the batter and the vegetables that best suit the bajjis.  Let me start with my comfortable method of making bajjis at home.

Ingredients:

Vegetables like Potatoes, Raw Bananas, carrots, Brinjal etc. – sliced thinly.
Gram flour or Besan – 1 cup
Rice flour – 1 cup
Asafetida – ¼ teaspoon
Red chilli Powder – 1 tsp (or to taste)
Turmeric powder or Kesar color – ¼ tsp
Baking soda – a pinch (optional)
Salt to taste

Oil to deep fry

Method:

Thinly slice any one or all of the above mentioned vegetables using a Mandolin ( otherwise called Slicer) and immerse in water to avoid discoloring.
(Remember…even a single medium sized potato yields nearly 15 to 20 bajjis…for which the mentioned quantity of flour is not enough.  To avoid mixing excess batter, I have mentioned this quantity which can always be increased according to the requirement)
Sieve and mix all the above ingredients except oil.
Add water and make a batter in dosa batter consistency.
Heat oil in a heavy bottomed pan (preferably curve based pan to avoid using excess oil), dip the sliced vegetables one after another and fry till crisp and golden in color.

The recipe is so simple and easy.  We can mix the flour according to our requirement and it doesn’t take much time. But I have a loads of tips about the different methods of preparing the batter and also the best suited veggies for Bajjis. Hope this would be interesting to everyone than the actual recipe.

Tips:

Mixing batter in small batches helps avoid the risk of preparing batter in excess.
Another advantage of mixing batter in small batches is that it guarantees the freshness till end.
Though adding baking soda ensures crispness, it has its own disadvantages, too much oil is consumed while frying or some experience upset stomach.  To avoid this, a spoon of hot oil in the pan can be added to every batch of batter.



பஜ்ஜி வகைகள்:

 

பஜ்ஜின்னா நம்ம நினைவுக்கு முதல்ல வர்றது பெண் பார்க்கும் வைபவம், அடுத்து பீச். பஜ்ஜி நம்ம வாழ்க்கையோட அவ்வளவு ஒன்றிப்போயாச்சு.  பஜ்ஜிக்குன்னே பிறந்தது சொஜ்ஜி அல்லது கேசரி.  ரெண்டும் அப்படி ஒரு Deadly Combination.  யாரும் இதை மறுப்பதற்கில்லை.

இதென்ன அதிசயம்?  யாருக்குத்தான் தெரியாது பஜ்ஜி செய்முறை? இங்கே ரெசிபியை விட பஜ்ஜிக்கு எந்தெந்த விதங்களில் மாவு கலக்கலாம்? என்னென்ன காய்கள் பஜ்ஜிக்கு தோதாக இருக்கும் என்று சொல்வதே குறிக்கோள்.  எங்கள் வீட்டுக்கு சரிப்படும் விதத்தை முதலில் சொல்லிவிட்டு மற்றவைகளையும் சொல்கிறேன்.

Ingredients:

1 cup – கடலை மாவு
1 cup – அரிசி மாவு
¼ teaspoon – பெருங்காயப் பொடி
1 tsp – வர மிளகாய்ப்பொடி
¼ tsp – மஞ்சள் தூள் அல்லது ஒரு சிட்டிகை கேசரி கலர்
ஒரு சிட்டிகை சமையல் சோடா (விருப்பபட்டால்)
சுவைக்குத் தகுந்த உப்பு
பொரிக்க எண்ணெய்

இவை தவிர மெலிதாக சீவிய  உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய், போன்ற காய்கள்

செய்முறை:

எண்ணெய், காய்கள் தவிர மீதியுள்ளவைகளை கலந்து வைக்கவும். மாவுகளை மட்டும் சலிக்கலாம்.  தண்ணீர் ஊற்றி தோசை மாவை விட சற்று நீர்க்க இருக்கும்படி கலந்து வைக்கலாம்.

அடி குழிவான வாணலியில் எண்ணெய் வைத்து சீவி வைத்த காய்களை மாவில் தோய்த்து எண்ணையில் பொன்னிறமாக பொரித்தால் சூடான சுவையான பஜ்ஜி ரெடி.

குறிப்பு 1:  ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை சீவினாலே பதினைந்து முதல் இருபது வரை பஜ்ஜிகள் கிடைக்கும்.  இங்கே தந்த அளவு மாவு அதுக்குப் பத்தவே பத்தாது.  அதிகமாக மாவு கலந்து வீணாக்குவதை விட ஒவ்வொரு கப்பாக எடுத்துக் கலப்பது நல்லது என்பதால் அளவைக் குறைத்துக் கொடுத்துள்ளேன்.

குறிப்பு 2: மாவுகளில் நம் வீட்டுக்குத் தேவையான அளவு உப்பு காரம் சேர்ப்பது நல்லது.  சமையல் சோடா சேர்ப்பதை பலர் விரும்ப மாட்டார்கள்.  காரணம் கரகரப்பைத் தந்தாலும்  எண்ணெய் அதிகம் குடிக்கும், சிலருக்கு வயிற்றுக்கும் ஒத்துக்கொள்ளாது.  சோடா உப்பு சேர்ப்பதை விட காய்ந்து கொண்டிருக்கும் எண்ணையில் ஒரு spoon  எண்ணெய் எடுத்து மாவில்  கலந்தாலும் கரகரப்பு குறையாது.

குறிப்பு 3: அதிக அளவு மாவு கலக்க வேண்டி வந்தால் ஒரேயடியாக மாவில் தண்ணீர் விட்டுக் கலப்பதை விட பிரெஷ்ஷாக ஒவ்வொரு கப்பாக எடுத்துக் கலந்தால் சுவை குறையாமல் இருக்கும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *