Groundnut (Verkkadalai) Sundal

Groundnut (Verkkadalai) Sundal

You might have heard of roasted groundnuts or even boiled groundnuts. But did you know you can make sundal with groundnuts? It might not be as popular as Channa sundal or Pattani sundal but it’s a healthy choice and a unique take on sundals during Navrathri. I have prepared this using Homemade Instant Flavoring Powder.

 

Skip to read in Tamil

 

Ingredients:

1 cup – Raw Groundnuts

Salt to taste

 

For Seasoning:

2 tsp – Gingely Oil

1 tsp – Mustard Seeds

1 tsp – Urad Dal

1 tsp – Chana Dal

A Sprig – Curry Leaves

 

For Homemade Instant Flavoring Powder:

(to be roasted and ground)

1 tsp – Gingely oil

¼ cup – Coriander Seeds

8 to 10 – Dried Red Chillies

A lump of Asafetida

1 cup –Grated Coconut

Method:

  1. Groundnuts taste better when soaked for a longer time. So, soak Raw Groundnuts 12 hours before preparing the Sundal.
  2. Wash the soaked Groundnuts twice and add ½ tsp salt to it. Pressure cook for 3 whistles.  Drain and keep aside.
  3. Roast the Red chillies, Asafetida and Coriander seeds till crisp. Remove from pan. Add the grated coconut to the same pan.  Toast it till they turn crisp.  Add to the roasted spices and powder coarsely.  This powder comes in handy while preparing sundals.
  4. Add 2 teaspoons of oil to a pan and season with the ingredients given under the heading ‘For Seasoning’.
  5. Add the cooked Groundnuts to it and saute for a minute. Add ½ tsp salt to it.  When they loose all the moisture in it, sprinkle a teaspoon of the Instant Flavoring Powder and remove.
  6. Groundnuts Sundal is ready.



 

வேர்க்கடலை சுண்டல்:

 

 

வேர்க்கடலை சுண்டல் பலர் கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள்.  வேர்க்கடலை என்றால் வறுத்து சாப்பிடுவதுதான் வழக்கம். பச்சை வேர்க்கடலை என்றால் சுண்டி சாப்பிடலாம். நவராத்திரியில் ஒரு நாள் வேர்க்கடலையை சுண்டலாக்கலாம். இது சுவையாகவும் இருக்கும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

நான் இதை பொடி தூவி செய்திருக்கிறேன்.  இந்தப் பொடியை உபயோகித்து எல்லா வகை சுண்டலுமே செய்யலாம்.  வேலைக்குப் போகும் பெண்களுக்கு உதவியாக இருக்கும்.

 

தேவையான பொருட்கள்:

1 cup – பச்சை வேர்க்கடலை

உப்பு சுவைக்குத் தகுந்தது.

 

தாளிக்க:

2 tsp – நல்லெண்ணெய்

1 tsp – கடுகு

1 tsp – உளுத்தம்பருப்பு

1 tsp – கடலைப்பருப்பு

ஒரு ஆர்க்கு – கறிவேப்பிலை

 

For Homemade Instant Flavoring Powder:

(வறுத்து அரைக்க)

1 tsp – நல்லெண்ணெய்

¼ cup – தனியா

8 to 10 – காய்ந்த சிவப்பு மிளகாய்

சிறு கட்டி – பெருங்காயம்

1 cup – துருவிய தேங்காய்

செய்முறை:

  1. வேர்க்கடலையை எவ்வளவுக்கெவ்வளவு ஊற வைக்கிறோமோ, அவ்வளவு சுவையாக இருக்கும். அதனால் சுண்டல் செய்வதற்கு முதல் நாளே கடலையை ஊற வைக்கவும்.
  2. ஊறின கடலையை ரெண்டு முறை நன்றாகக் கழுவி விட்டு அரை ஸ்பூன் உப்புடன் குக்கரில் வேக வைக்கவும். மூன்று விசில் வரும் வரை வைக்கலாம்.  வேகும்போது உப்பு சேர்ப்பதால் குழையாது என்பதோடு உப்பு கடலையில் உரைக்கும்.
  3. இன்ஸ்டன்ட் பொடி செய்ய அதன் கீழே கொடுக்கப்பட்ட மிளகாய், கட்டிப் பெருங்காயம் மற்றும் தனியாவை ஒரு ஸ்பூன் எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். எடுத்துவைத்துவிட்டு அதே வாணலியில் தேங்காய் துருவலை சேர்த்து கரகரப்பாக வறுக்கவும். தேங்காயை வறுக்க மறுபடி எண்ணெய் விடத் தேவையில்லை.  வறுத்தவைகளை மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும்.  இந்த இன்ஸ்டன்ட் பொடியை எல்லா வகை சுண்டலுக்கும் உபயோகிக்கலாம்.
  4. ஒரு வாணலியில் ரெண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கத் தந்துள்ளவைகளை சேர்த்து தாளிக்கவும்.
  5. வெந்த கடலையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதிகப்படி சாமான்களுக்கு அரை ஸ்பூன் உப்பை மேலே தூவவும். கடலையில் உள்ள ஈரப்பதம் வற்றியதும் இன்ஸ்டன்ட் பொடியை (சுமார் ஒரு ஸ்பூன் அளவு) மேலே பரவலாகத் தூவி இறக்கவும்.
  6. வேர்க்கடலை சுண்டல் தயார்.


5 thoughts on “Groundnut (Verkkadalai) Sundal”

  • படிக்கவே சுவையாக உள்ள து. செய்து பார்த்தால் இன்னும் சுவையாக உள்ள து!

  • ஹாய் ஜி ,

    நான் வந்துட்டேன் ……..ஒரு வழியாக உங்களுக்கான தனி கூடு கட்டி யதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ……

    இவ்ளோ வகைகள் பதிவிட்டாச்சு அதுக்குள்ள …..

    நான் know your ingredients and measures la இருந்து தொடங்கறேன் …..இனி google பாடு படுத்தமா நேரா இங்க வந்துவிடலாம் சமைக்கணும் ஆசை வந்தா ….

    தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழி பதிவுகள் வரவேற்புக்குரியது

    வெற்றி கொடி ஒளி வீசி பறக்க மீண்டுமொரு வாழ்த்தி விடைபெறுகிறேன்

    • வாங்கோ….வாங்கோ….இனி களை கட்டிடும்.
      வாழ்த்துக்களுக்கு நன்றி Vimi.🙋

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *