Jamun Kofta with Restaurant Style Kaju Gravy

Jamun Kofta with Restaurant Style Kaju Gravy

Remember my post from earlier in the year on how to make a Cake using Gulab Jamun Mix? I had promised to share more recipes using Gulab Jamun mix and here it is!

Skip to read in Tamil

As I mentioned before, Gulab Jamun Mix is very versatile, in that, it can be used in a sweet dessert, a savoury dish or a spicy dish. In this recipe, I am using the mix to make koftas to add to a rich, creamy and decadent cashew gravy. (Wait! That’s not all! Come back tomorrow for another post using Kofta made from Gulab Jamun Mix)

 

Ingredients:

200 g – Instant Gulab Jamun Mix (any brand)

2 – Medium sized Boiled Potatoes or 1 Large potato boiled.

2 – Green chillies

1 inch long Ginger

Salt to taste

1 spoon – Finely chopped Coriander leaves.

Method:

  1. Boil and peel the potatoes.
  2. Mash them thoroughly using your hands.
  3. Grind the Green chillies and ginger to a fine paste and add to the mashed potatoes.
  4. Add salt to taste and chopped coriander leaves to it and mix.
  5. Add the Instant Gulab Jamun Mix to the mashed potatoes and knead to a tight dough like that of Chapati Dough.  Unlike chapati dough, this is easy to knead.
  6. Roll them into Gooseberry sized balls and fry in hot oil.
  7. Koftas are ready.

Note:

There is chance of the Koftas remaining uncooked if rolled into big balls.  So be careful to roll them into Gooseberry sized balls.

If you want to avoid deep frying, use Air Fryers or Appe Pan ( Paniyaram Pan ) to shallow fry them.

 

Now, let us prepare the gravy.  The ingredients needed are as follows.

For Kaju Gravy:

Ingredients:

¾ cup – Cashews

2 to 3 tbsp – Ghee

3 – Green chilies

1 inch – Ginger

3 to 4 – Garlic Cloves

1 Large – Onion ( I have not added Onions and Garlics as we do not consume them)

4 tbsp – Thick curd.

Spice powders:

¾ tsp – Turmeric Powder

¾ tsp – Chilli Powder

½ tsp – Coriander Powder

1 tsp – Garam masala Powder

Salt – to taste

Necessary water to get the desired consistency.

Method:

  1. Fry the Cashews in Ghee till golden in color.  Drain the excess ghee and remove.
  2. Add the ginger, green chillies etc to the fried cashews and grind to a fine paste using the curd.  If you opt for no onion no garlic version like me, omit them.  The paste should be in Idli Batter consistency, so adjust the quantity of curd accordingly.
  3. Add the ground paste to the remaining ghee and stir till the paste leaves the sides of the pan.  If you find the paste sticky, add extra ghee.
  4. When the gravy leaves the sides, add the masala spice powders given in the list and stir till the gravy starts oozing ghee on the sides.
  5. Rich Gravy is ready.  Add the fried Koftas to it and garnish with chopped coriander leaves.
  6. Kaju Gravy with Jamun Koftas is an excellent side for rotis, naans and all types of Pulav varieties.

Note:

Add the Koftas to the gravy just before serving them.

I had used Instant Gravy Powder here instead of the masala spice powders.

If you like the gravy to be in pure white color, avoid adding all the masala powders.  Instead add White Pepper powder along with Coriander powder and whole spices to the ghee initially.

Hope you enjoy this recipe.

Watch for Jamun kofta with Tomato Gravy in my next post….



 

Gulab Jamun Kofta with Restaurant Style Kaju Gravy:

 

 

குலாப் ஜாமுன் ரெடி மிக்ஸில் குலாப் ஜாமுன்தான் பண்ணனும்னு என்ன சட்டம்னு ஏற்கனவே கேட்டிருந்தேன், அது நினைவிருக்கா?  இப்போ, இன்னொரு புது ஐடெம் பார்க்கலாம்.

குலாப் ஜாமுன் ரெடி மிக்ஸ் என்பது தனக்குன்னு எந்த சுவையும் இல்லாதது.  உப்புடன் சேர்த்தால் உப்பாகவும், காரத்துடன் சேர்த்தால் காரமாகவும், இனிப்புடன் சேர்த்தால் இனிப்பாகவும் இருக்கக் கூடியது.   அதை நமக்கு வேண்டிய விதத்தில் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் ஆக்க,  குலாப் ஜாமுன் மிக்ஸை Kofta செய்ய உபயோகப்படுத்தலாம்.

ஜாமுன் Kofta செய்வது மிக மிகச் சுலபம்.

கிரேவியில் அதிக நேரம் ஊறவைத்தால் கரைந்து குழைந்துவிடும் என்பதால் Kofta செய்துவைத்துக்கொண்டு சாப்பிடும் முன் கிரேவியில் போட்டுப் பரிமாறலாம். முதலில் நல்ல ரிச்சான முந்திரி கிரேவியில் koftaக்களை மிதக்க விடுவோம்.

இனி செய்முறையைப் பார்க்கலாமா?

 

தேவையானவை:

200 g – Instant Gulab Jamun Mix (any brand)

2 – மீடியம் சைஸ் வேகவைத்த உருளைக்கிழங்கு, அல்லது வேகவைத்த ஒரு பெரிய கிழங்கு

2 – பச்சை மிளகாய்கள்

1 இன்ச் நீள இஞ்சித்துண்டு

சுவைக்கேற்ப உப்பு

1 ஸ்பூன் – பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை.

செய்முறை:

  1. முதலில் கிழங்கை வேக வைத்து தோலுரித்துக்கொண்டு கையால் மசிக்கவும்.
  2. இஞ்சி மற்றும் பச்சை மிளகாய்களை அரைத்துக் கலக்கவும்.
  3. இவைகளுடன் சுவைக்கு வேண்டிய உப்பு சேர்த்து கொத்தமல்லி தழையை நறுக்கிச் சேர்த்துக் கொண்டு கெட்டிப்படும் அளவுக்கு இன்ஸ்டன்ட் குலாப் ஜாமுன் மிக்சைத் தூவிக் கலக்கவும். கலவை கெட்டியானதும் குலாப்ஜாமூன் மிக்ஸ் கலப்பதை நிறுத்திடலாம்.
  4. கையால் பிசையும்போது சப்பாத்தி மாவு போன்ற பதம் வரும்வரை பிசையலாம்.  பிசைவதும் சுலபமாகவே இருக்கும்.
  5. நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரிக்கவும்.

குறிப்பு:

Kofta பெரிய அளவில் உருட்டிவிட்டால் வெளியில் வெந்தும் உள்ளே மாவாக இருக்க சான்ஸ் இருப்பதால் நெல்லியளவு உருட்டிப் பொரிக்கலாம்.

எண்ணையில் பொரிக்க விரும்பாதவர்கள் Air fryerல் பொரிப்பதோ, அல்லது shallow fry செய்ய குழிப் பணியாரக் கல்லில் செய்வதோ அவரவர் விருப்பம்.  எண்ணையில் பொரித்தாலும் அதிகம் எண்ணெய் இழுக்காது என்பது இன்னொரு வசதி.

 

இனி கிரேவி செய்வோம்.

இது கொஞ்சம் காஸ்ட்லி கிரேவி.  முழுக்க முழுக்க முந்திரியால் செய்யப்படுவது.  வீட்டுக்கு மாப்பிள்ளை போன்ற மரியாதைக்குரிய விருந்தினர்கள் வரும்போது செய்யலாம்.   கண்ணுக்கும் நாவுக்கும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கிரேவி செய்யத் தேவையானவை:

அரைக்க வேண்டியவை:

¾ cup – முழு முந்திரி

2 to 3 tbsp – நெய்

3 – பச்சை மிளகாய்

1இன்ச் நீள இஞ்சித்துண்டு

3 to 4 – பூண்டுப் பற்கள்

1 Large -வெங்காயம் (எங்கள் வீட்டில் வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை என்பதால் அவைகளை நான் சேர்க்கவில்லை)

4 tbsp – கெட்டித் தயிர்

மசாலா பொடி வகைகள்:

¾ tsp – மஞ்சள் தூள்

¾ tsp – சிவப்பு மிளகாய் தூள்

½ tsp – தனியா தூள்

1 tsp – கரம் மசாலா தூள்

Salt – சுவைக்கு ஏற்ற அளவு மற்றும்

தேவைப்படும் அளவு தண்ணீர்.

செய்முறை:

  1.    முதலில் நெய்யில் முந்திரிகளை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  2.    வறுத்த முந்திரிகளுடன் இஞ்சி, பச்சை மிளகாய்களும், விரும்பினால் வெங்காயம் பூண்டும்  பச்சையாகவே சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.  அரைக்கும் போது கொடுக்கப்பட்டுள்ள அளவு தயிரையும் சேர்த்து அரைக்கலாம்.  இந்த பேஸ்ட் ரொம்ப திக்காக இருந்தால் இன்னும் ரெண்டு ஸ்பூன் தயிர் சேர்க்கலாம், தப்பில்லை.  இட்லி மாவு பதத்தில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்.
  3.    முந்திரியை வறுத்த மீதி நெய்யில் அரைத்த கிரேவியைக் கொட்டி சுருளக் கிளறவேண்டும்.  பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை கிளறலாம்.  மேலே ஒரு ரெண்டு ஸ்பூன் நெய் தேவைப்பட்டாலும் சேர்ப்பதில் தவறில்லை.
  4.    கிரேவி ஓரங்களில் ஒட்டாமல் வந்ததும் கொடுக்கப் பட்டுள்ள மசாலா பொடி வகைகளைச் சேர்த்து தேவைப்படும் பதம் வரும்  வரை தண்ணீர் சேர்த்து ஓரங்களில் நெய் விட்டுக்கொண்டு வரும் வரை கிளறி இறக்கவும்.  சுவையான முந்திரி கிரேவி தயார்.
  5.    பொரித்து வைத்துள்ள kofta க்களை சேர்த்து மேலே கொத்தமல்லி நறுக்கிச் சேர்த்து பரிமாறவும்.

சப்பாத்தி, பூரி, நான், புலாவ் வெரைட்டிகள் எதுவாக இருந்தாலும் சுவையான சைட் டிஷ்ஷாக இருக்கும் இது.  செய்வதும் சுலபம்.

குறிப்பு:

பரிமாறும் முன் Kofta க்களை சேர்த்து மேலே ஒரு ஸ்பூன் கிரேவி ஊற்றிப் பரிமாறலாம்.

மசாலா பொடிகளுக்கு பதில் இன்ஸ்டன்ட் கிரேவி பவுடர் உபயோகித்தால் இன்னும் வேலை சுலபம். (நான் செய்தது அப்படித்தான்)

வெள்ளை வெளேரென்ற முந்திரி பேஸ்டில் கலர் கலராக பொடிகளைச் சேர்ப்பது பிடிக்கவில்லை என்பவர்கள் காரத்துக்கு வெள்ளை மிளகுத்தூளும், தனியாத்தூளும் சேர்த்து கரம் மசாலாவுக்கு பதில் முழு மசாலாக்களை தாளித்துச் சேர்க்கலாம்.  பளீரென்ற வெண்மையில் இருக்கும்.

அடுத்த போஸ்டில் ஜெயின் ஸ்டைல் தக்காளி கிரேவியில் ஜாமுன் kofta செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



1 thought on “Jamun Kofta with Restaurant Style Kaju Gravy”

  • ட்ரம்ப் கார்டு போல “குலாப் ஜாமுன் ரெடி மிக்ஸ் என்பது தனக்குன்னு எந்த சுவையும் இல்லாதது. உப்புடன் சேர்த்தால் உப்பாகவும், காரத்துடன் சேர்த்தால் காரமாகவும், இனிப்புடன் சேர்த்தால் இனிப்பாகவும் இருக்கக் கூடியது.”
    கோஃப்தா குலாப்ஜாமூன் மிக்ஸில் செய்யாமல் வேறு விதத்தில் செய்யலாமா என்று தெரிவித்தால் சிறப்பாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *