Idli Podi: Some Variations

Idli Podi: Some Variations

Every household has got their own method of  preparing Idli milagaai podi, using both Bengal and Black grams or using only Black gram(skinned or deskinned), with or without sesame seeds (Ellu). You can try this in all permutations and combinations to get new flavor each time. I am sharing two simple methods of preparing Idli milagaai podi along  with  some variations  in the footnote. This recipe makes enough podi for one week’s consumption. I suggest you make idli podi freshly in small quantities as and when required, as it needs no prep time.

Skip to read in Tamil

 

Idli podi with Black sesame seeds:

 

 

Ingredients:

¼ cup – Black sesame seeds

¼ cup – Skinned Whole Black gram (Urad dal)

¼ cup – Bengal gram (kadala paruppu)

4 – Dried red chillies

½ to 1 teaspoon – Gingelly oil

½ teaspoon – Asafetida powder

1 teaspoon – salt

 

 

Method:

  1. Dry roast the sesame seeds in an iron pan till they pop up. (iron pans are always a right healthier choice for roasting spices)
  2. Remove and add half spoon oil. Roast the chillies, and remove. (roasting dried chillies with oil enhances the color.)
  3. Add the black urad dal and roast in the same pan.
  4. Remove and roast the bengal gram in the remaining oil till they turn golden in color.
  5. Remove, add salt and asafetida to the hot lentils. Let it come to room temperature.
  6. Powder coarsely or finely according to your taste.
  7. Refrigerate for retaining the freshness.  

Note:

The given measurement here is enough for a week for a family of two.  So, you can alter the ingredients according to your requirement.

 

Idli podi with white sesame seeds:

 

 

Ingredients:

⅛ cup – white sesame seeds

¼ cup – whole white urad dal

4 to 6 – dried red chillies

½ spoon – asafetida

1 teaspoon – salt

A marble sized ball of tamarind.

1 to 2 teaspoon – gingelly oil.

 

 

Method:

  1. Dry roast the whilte sesame seeds till they pop up. Remove
  2. Add ½ spoon oil and fry the chillies. Remove.
  3. Add the urad dal and roast till golden in color.
  4. Add the remaining oil and fry the tamarind after removing seeds and fibres present in it. ( when you happen to roast tamarind, always remember to  losen the tamarind ball into small pieces before roasting.  Or just leave it in the pan after switching off the flames for a perfect roast)
  5. Add salt and asafetida and let it cool.
  6. Grind to a fine powder.

Note:

  1. Black gram (urad dal) can be skinned or deskinned, split or whole. Whole Black grams are considered to be the best in taste along with nutrients present in them.
  2. Change the combinations by adding white sesame seeds with Whole black gram alone.
  3. Add half a spoon of coriander seeds before removing from stove and you get entirely different podi.
  4. Add a sprig of curry leaves while roasting for a difference in taste.
  5. Roast a piece of dried coconut or Desiccated coconut for a variation in taste.
  6. If consumed by kids, reduce the number of chillies or roast a handful of rice till they turn pure white in color and grind. This yields more quantity of podi.



 

இட்லி மிளகாய் பொடி ….சில வகைகள்:

 

ஒவ்வொரு வீட்டிலும் இட்லிக்கு தொட்டுக்கொள்ளும் மிளகாய்ப் பொடிக்கு என்று பிரத்யேகமான முறை ஒன்று இருக்கும்.  சிலர் உளுத்தம்பருப்பு மட்டும் உபயோகித்து செய்வர்.   உளுந்திலும்  கருப்பு உளுந்து மட்டும் எடுத்து அல்லது வெள்ளை முழு உளுத்தம்பருப்பு உபயோகித்து என்று செய்முறை இருக்கும்.  சிலர் கடலைப் பருப்பும் சேர்த்து இட்லி மிளகாய் பொடி அரைப்பர்.

எந்த முறை என்றாலும் எள்ளு உபயோகிப்பது இன்னும் சிலர் வழக்கமாயிருக்கும். எள்ளும் கருப்பு, வெள்ளை என்று வீட்டுட்டு வீடு மாறுபடும்.   அப்பாடா…. எத்தனை வகைன்னு சொல்லவே மூச்சு வாங்கறதே….ரெண்டொரு விதம் மட்டும் பார்க்கலாமா?

ஒவ்வொரு செய்முறையும்,  ஒவ்வொரு விதத்தில் சுவையாகவே இருக்கும்.

 

கருப்பு எள்ளு மிளகாய் பொடி:

 

 

தேவையான பொருட்கள்:

¼ cup -கருப்பு எள்

¼ cup – வெள்ளை முழு உளுந்து  

¼ cup – கடலைப்பருப்பு

4 – காய்ந்த சிவப்பு மிளகாய்

½ to 1 teaspoon – நல்லெண்ணெய்

½ teaspoon – பெருங்காயப்பொடி

1 teaspoon – உப்பு

 

 

செய்முறை:

  1. முதலில் கருப்பு எள்ளை இரும்பு வாணலியில் படபடவென்று பொரியும்வரை வறுக்கவும்.  (இரும்பு வாணலியில் சூடு அதிகம் இருக்கும், எந்தப் பொடிக்கு வறுப்பதானாலும் இரும்பு வாணலியைப் பயன்படுத்துவது fuel save பண்ணமுடியும் என்பதோடு இரும்புச்சத்தும் கிடைக்கும்)
  2. வறுத்த எள்ளை தட்டில் கொட்டிவிட்டு அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் மிளகாயை வறுக்கவும்.  (எண்ணெய் மிளகாயை coat செய்தால் போதும் என்ற அளவுக்கு எடுக்கலாம்.  அப்படி எண்ணையில் வறுக்கும் போது மிளகாயின் நிறமும் கூடும்)
  3. மிளகாயை வறுத்ததும் எடுத்துவிட்டு மீதியுள்ள எண்ணையை சேர்த்து கருப்பு உளுத்தம்பருப்பை சிவக்க வறுக்கவும்.
  4. அடுத்து கடலைப் பருப்பை வறுத்து எடுக்கவும்.
  5. பருப்புகள் சூடாக இருக்கும்போதே பொடி பெருங்காயத்தையும் உப்பையும் சேர்த்து ஆறியபின் மிக்சியில் அவரவர் வீட்டு வழக்கப்படி கரகரகரப்பாகவோ நைசாகவோ பொடிக்கவும்.
  6. ஆறியதும் பிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் பிரெஷ்ஷாகவே இருக்கும்.  

குறிப்பு:  

இங்கே கொடுத்துள்ள அளவு இருவர் உள்ள குடும்பத்துக்கு ஒரு வாரத் தேவைக்கு தாராளமாக இருக்கும்.

 

வெள்ளை எள்ளு மிளகாய் பொடி:

 

 

தேவையான பொருட்கள்:

⅛ cup – வெள்ளை எள்

¼ cup – வெள்ளை முழு உளுத்தம்பருப்பு

4 to 6 -காய்ந்த சிவப்பு மிளகாய்கள்

½ spoon – பெருங்காயப் பொடி

1 teaspoon – உப்பு

கோலிகுண்டு அளவு உருட்டிய புளி

1 to 2 teaspoon – நல்லெண்ணெய்

 

 

செய்முறை:

  1. ஒரு இரும்பு வாணலியில் வெள்ளை எள்ளை பொரியும்வரை வறுத்து எடுக்கவும்.
  2. அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும்.
  3. வறுத்த மிளகாயை எடுத்துவிட்டு வெள்ளை உளுத்தம்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  4. மீதமுள்ள எண்ணெயை சேர்த்து புளியை வறுக்கவும்.  (புளியை வறுக்கும்போது எப்போதும் உள்ளே உள்ள நார் கொட்டைகளை நீக்கிவிட்டு, நன்றாகப் பிரித்துவிட்டு வறுத்தால் கரகரவென்று சீக்கிரமாகவே வறுபடும்.  அல்லது அடுப்பை அணைத்துவிட்டு புளியைப் பிரித்துப் போட்டால் கூட வறுபட்டுவிடும்)
  5. உப்பு, பெருங்காயப் பொடியுடன் கரகரப்பாகவோ நைசாகவோ பொடித்து எடுத்து வைக்கவும்.

குறிப்பு:

  1. இட்லி மிளகாய் பொடி செய்ய கருப்பு அல்லது  வெள்ளை உளுத்தம்பருப்பை உபயோகிக்கலாம்.  கருப்பு உளுந்து என்றால் சுவையில் அது தனிதான்.
  2. கருப்பு உளுந்துக்கு கருப்பு எள்ளு என்றில்லாமல் கருப்பு உளுந்துடன் வெள்ளை எள் சேர்த்து செய்தால் அது ஒரு தனி சுவை.
  3. எந்த பருப்பு என்றாலும் வறுத்து எடுக்கும்முன் அரை ஸ்பூன் தனியா விதை சேர்த்தால் அது இன்னொரு சுவை.
  4. ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை வறுத்துச் சேர்த்தால் வாசனையுடன் அழகான நிறமும் கிடைக்கும்.
  5. ஒரு துண்டு கொப்பரைத் தேங்காய் அல்லது Desiccated coconut சேர்த்தால் தேங்காய் இட்லி பொடி.
  6. சிலர் வீட்டில் சிறு குழந்தைகள் இட்லி மிளகாய்ப் பொடி கேட்டு அடம் பிடிப்பர்.  ஆனால் காரம் தாங்காது என்பதால் காரத்தைக் குறைத்துவிட்டு ஒரு கைப்பிடி அரிசியை பொரியும்படி வறுத்து அரைத்தால் அளவிலும் அதிகம் காணும் என்பதோடு, குழந்தைகளையும் சமாதானப் படுத்தலாம்.


2 thoughts on “Idli Podi: Some Variations”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *