Kadalai Urundai

Kadalai Urundai

This is another traditional sweet prepared during the festival, Sri Jayanthi.  Very few ingredients are needed to make Verkadalai Urundai, but the syrup consistency of Jaggery plays vital role in its success.

 

Skip to read in Tamil

 

 

Ingredients:

2 cups – Roasted and deskinned Groundnuts

1 cup – Grated Jaggery

½ tsp – Cardamom Powder

½ tsp – Dry Ginger Powder (optional)

½ cup – water

Method:

Roast and remove the skin of Groundnuts.  Spread on a plastic cover and crush them lightly using a chapathi rolling pin.  Doing so helps to get a smoother Urundais.

Add water to the grated jaggery and bring to a boil.  Once the Jaggery is completely dissolved in water, drain and remove the impurities.

Again bring it to a boil.  The syrup will froth initially and later turn thick and dark in color like Honey.  Drop half a spoon of the syrup into a cup of water and try to gather it into a ball.  If it gathers into a thick ball, then the consistency is right.

Add the Cardamom and Dry Ginger Powder to the syrup and pour into the nuts and mix well.

Apply little ghee to your hands and roll them into balls when hot.  If let cooled, they won’t bind together.

Footnote:

My suggestion is that if made in small batches, the Urundais turn out well.  So, I normally roast and crush the nuts and measure them.  I add water to the grated Jaggery and drain after it is dissolved completely.  I will make a syrup in half of this water and add to half of the roasted nuts, make urundais and then continue the same for the next half.

Instead of powdering the Jaggery, grating in a Carrot grater works better.

Rubbing our hands with Ghee is to avoid stickiness.  However after sometime we can dust our hands with rice flour and roll them tightly.  The Urundais rolled using Rice Flour looks pale in color.

Follow this link to understand How to roast the Groundnuts.



கடலை உருண்டை:

 

ஸ்ரீ ஜெயந்தியின் போது செய்யப்படும் இன்னொரு பாரம்பரிய இனிப்பு இந்த வேர்க்கடலை உருண்டை.  வெல்லத்தில் பாகு வைத்து வறுத்த கடலையில் கொட்டிப் பிடிப்பது என்று சுலபமாகச் சொல்லிவிடலாம்.  தேவையான பொருட்களும் குறைவு என்றாலும் பாகு பதம் தப்பாமல் இருப்பதுதான் வெற்றிக்கு வழி.

 

தேவையான பொருட்கள்:

2 cups – வறுத்து தோல் எடுத்த வேர்க்கடலை

1 cup – பொடித்த வெல்லம்

½ tsp – பொடித்த ஏலக்காய்

½ tsp – சுக்குப்பொடி (விரும்பினால்)

½ cup – தண்ணீர்

செய்முறை:

வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி வைக்கவும்.  தோல் நீக்கின கடலையை ஒரு பாலிதீன் ஷீட்டில் போட்டு சப்பாத்திக் குழவியால் லேசாக நசுக்கி வைத்தால் உருண்டை பிடிக்கும்போது ஒட்டாமல் கீழே விழுவதைத் தவிர்க்கலாம்.

வெல்லத்தில் தண்ணீரை சேர்த்துக் கரையும் வரை கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.

மீண்டும் அடுப்பிலேற்றி பாகு வரும் வரை காய்ச்சவும்.  பாகை ஒரு ஸ்பூனில் எடுத்து தண்ணீரில் விட்டால் உருட்ட வரவேண்டும்.  அதுதான் பதம். (வெல்லம் முதலில் நுரைக்கும், பிறகு பாகு தேன் பதத்திற்கு வந்து கலரும் டார்க்காக ஆகும்போது ஒரு ஸ்பூன் பாகை ஒரு கிண்ணத்தில் உள்ள நீரில் விட்டால் கரையாமல் கைக்கு உருட்ட வரவேண்டும்.  கலைந்தாலோ, கைக்கு கொழகொழப்பாக இருந்தாலோ பாகு முற்றவில்லை என்று அர்த்தம்.)

பாகில் ஏலத்தூள், சுக்குப்பொடி சேர்த்து கடலையில் விட்டுக் கலக்கவும்.

சூடாக இருக்கும்போதே கையில் நெய் தடவிக்கொண்டு உருண்டை பிடித்து வைக்கவும்.  ஆறினால் உருண்டை வராது.

Footnote:

குறைந்த அளவில் செய்யும்போது பதம் தப்பாமல் வரும்.  கடலையை வறுத்து தோல் எடுத்து லேசாக crush பண்ணிய பின் அதை அளந்து கொள்வது என் வழக்கம்.  இந்த அளவிற்கு பாதி அளவு வெல்லப்பொடி எடுத்து அதில் தண்ணீர் விட்டு கரைந்ததும் வடிகட்டிக் கொள்வேன்.  அதில் பாதியை முதலில் பாகு வைத்துவிட்டு கடலையில் பாதியை மட்டும் எடுத்து உருண்டை செய்தபின் மீதி வெல்லத்தண்ணீரை பாகு வைத்து உருண்டை பிடிப்பது எனக்கு சரியாக வருகிறது.

வெல்லத்தை இடித்து அளப்பதை விட பொறுமையாக காரட் துருவியில் துருவி அளந்தால் பதம் தப்பாது, கடலை அதிகம், வெல்லம் போதலை என்ற பிரச்சனையும் வராது.

சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிப்பது நல்லது.  கையில் ஒட்டாமல் இருக்கத்தான் நெய் தடவிக்கொள்வது.  அரிசி மாவு தடவிக்கொண்டும் உருட்டலாம்.  ஆனால் உருண்டைகள் வெளுப்பாகத் தெரியும்.

கடலையை எப்படி வறுப்பது என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.



1 thought on “Kadalai Urundai”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *