Kadalaiparuppu Sundal

Kadalaiparuppu Sundal

A simple Sundal to prepare.  This comes handy when we forget to soak the grains needed for sundal, the previous night.

Skip to read in Tamil

Wash and soak a cup of Bengal Gram (Kadalaiparuppu or Split Chana Dal) in boiling water.  Keep this near the Stove or closed in a Casserole for half an hour.

After half an hour, cook in Pressure cooker for a whistle and drain.  Alternatively, add water to a pan, add the soaked gram when the water reaches boiling point.  Cook till tender.  Add half a spoon of salt and remove from heat.

Drain after 5 minutes.

 

Ingredients:

1 cup – Split Chana Dal

¼ cup – Grated Coconut

1 or 2 – Green chillies

1 tsp – Grated Young Ginger

2 tsp – Any Cooking Oil

1 tsp – Mustard seeds

1 tsp – Urad Dal

2 tsp – Split Chana Dal

½ tsp – Asafetida

1 sprig – Curry Leaves

Salt to taste

2 tbsp – Grated Carrot (Optional)

1 tbsp – Finely Chopped Coriander Leaves

Method:

As mentioned above, soak and cook the Split Chana Dal and Drain.  Keep aside.

Grind the chillies and grated ginger together. Keep aside.

Add two spoons of oil to a pan and season the mustard seeds followed by the Urad and Chana Dal.

Add the Asafetida powder, Ground Chilli + Ginger Paste and Coconut Grates one by one and mix once.

Add the cooked Chana Dal and salt together.  Saute till it looses all the moisture.

Remove from stove and garnish with the grated Carrot and Chopped Coriander Leaves.

Yummy Kadalaiparuppu sundal is ready in attractive color.



 

கடலைப் பருப்பு சுண்டல்:

 

 

இது ரொம்ப சிம்பிளான சுண்டல்.

நவராத்திரி ஒன்பது நாளும் எல்லாப் பெண்களுக்குமே பிஸியான நாட்கள்தான்.  வேலைக்குப் போகும் பெண்கள்ன்னா கேட்கவே வேண்டாம்.  சுண்டல் பண்ணனும்னா முதல் நாளே தானியத்தை ஊற வைக்கணும். வேலைப்பளுவில் சுண்டலுக்கு ஊற வைக்கவே மறந்து போகும். அது போன்ற நாட்களில் இந்த சுண்டல் கை கொடுக்கும்.

ஒரு கப் கடலைப் பருப்பை லேசாக வறுத்துவிட்டு நல்ல கொதி நீரை ஊற்றி ஊற விடுங்கள். வீட்டில் casserole இருந்தா அதில் ஊற வைச்சுடலாம்.  மூடி அடுப்பு பக்கத்திலேயே வைச்சுட்டா வேற வேலைகளை முடிச்சுட்டு அரை மணி நேரம் கழிச்சு வந்து பார்த்தால் சரியா ஊறியிருக்கும்.

குக்கரில் ஒரு விசில் விட்டால் போதும், வெந்துடும்.  ஆனா சில சமயம் குழைஞ்சும் போகும்.  அதனால் வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இந்த பருப்பை வடிச்சுப் போட்டுடலாம்.  கைக்கு நசுங்கும் பதம் வந்ததும் அரை ஸ்பூன் உப்பை போட்டு அடுப்பை அணைச்சு மூடிவைச்சுட்டா உப்பு ஊறி, பருப்பு பதமா வெந்திருக்கும்.

இதை வடிகட்டிக் கொள்ளவும்.

 

தேவையான பொருட்கள்:

1 cup – கடலைப் பருப்பு

¼ cup – தேங்காய் துருவல்

1 or 2 – பச்சை மிளகாய்

1 tsp – இஞ்சி துருவல்

2 tsp – எண்ணெய்

1 tsp – கடுகு

1 tsp – உளுத்தம்பருப்பு

2 tsp – கடலைப்பருப்பு

½ tsp – பெருங்காயத்தூள்

1 sprig – ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை

உப்பு தேவைக்கேற்ப

2 tbsp – காரட் துருவல்

1 tbsp – கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

கடலைப் பருப்பை ஊறவைத்து குழையாமல் வேக வைத்து வடிகட்டி வைக்கவும்.

பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ரெண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்க்கவும்.

அடுத்து அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, தேங்காய் துருவல் சேர்த்து ஒரு முறை பிரட்டி, வேக வைத்த கடலைப் பருப்பையும் சேர்த்து உப்பு தூவி ஈரப்பதம் வற்றும் வரை கிளறி இறக்கவும்.

இறக்கியதும் காரட் துருவல் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.

கண்ணைப் பறிக்கும் நிறத்தில் சுவையான கடலைப் பருப்பு சுண்டல் தயார்.



7 thoughts on “Kadalaiparuppu Sundal”

  • சித்ரா, 👏🏻👏🏻👏🏻

    முதல்ல இந்த Web address பேர் செலக்ஷனே class ஆ இருக்கு. Food steps …👏🏻👏🏻

    அடுத்து, அதுக்குள்ள நுழைஞ்சதும் font கண்ணுக்கு Uளிச்சுன்னு legible ஆ இருக்கு. பெரியவாளும் படிக்க சிரமமில்லாம இருக்கும்.

    அடுத்ததா, தமிழ், English Option வேண்டிய ஒன்று.

    செய்முறை விளக்கம் இங்லீஷ் ரொம்ப சிம்பிளா புரியும்படி இருக்கு. தமிழ், கேக்கவே வேண்டாம். நீ கோர்வையா, பேசற மாதிரி எழுதுவே. அதையே follow பண்ணியிருக்கே. நன்னாவே இருக்கு.

    எல்லாத்துக்கும் மேல, அந்த display இருக்கே, ப்ரமாதமா photo எடுத்து இருக்கு. யார், ரம்யா தானே😊👏🏻👏🏻 நேர்ல பாக்கற மாதிரியே இருக்கு.

    நவராத்ரியப்போ, சுண்டல் menu apt ஆ அமைஞ்சிருக்கு.

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻😊

  • சூப்பரா இருக்கு சித்ரா.
    கலர்புல் போட்டோஸ். நவராத்திரி ஸ்பெஷலாக ஆரம்பம்..
    Very very nice Chitra.. A good starting.

  • எல்லோரும் மீம்ஸ் என்ற பெயரில் கிண்டல் செய்யும் போது, இவ்வளவு அருமையான சுண்டல் செய்ய தூண்டும் பதிவு நவராத்திரி சமயத்தில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *