Puttu

Puttu

Hello lovely readers!

It’s the Friday of Navrathri tomorrow and that means we need to have fluffy puttu ready at our homes. Well, here I am! Let’s get to making…
Skip to read in Tamil

 

Ingredients:

1 cup – Rice Flour

1 cup – Grated Jaggery

¼ tsp – Turmeric Powder

¼ tsp – Salt

2 tsp – Toor Dal

½ tsp – Cardamom Powder

A pinch – Edible Camphor

2 tbsp – Ghee

10 each – Cashews and Raisins

2 tbsp – Coconut pieces (diced into small chunks)

Method:

  1. Grate the Jaggery in a Carrot grater and measure in a 1 cup.
  2. Soak the Toor dal in water.
  3. Toast the Rice Flour nicely till it turns into brown in color.
  4. Let the flour get cooled. Add the Salt and Turmeric powder to it and mix well.
  5. Sprinkle some hot water on the flour mixture and make it like bread crumbs. (Do not add more water)
  6. Tie it in a clean white cloth and steam for exactly five minutes. While steaming, add the Toor dal to a small cup of water and place it in the bottom of the Steamer/Cooker.
  7. After 5 minutes remove and spread the flour on a plate. By this time the Dal would also be half cooked. Add the dal to the steamed flour.
  8. Now, prepare the Syrup. Add little water to the grated Jaggery and bring it to a boil.  Once dissolved, drain and make a thick syrup. (If you pour a little syrup into a cup of water, you should be able to roll it).
  9. Add the syrup to the steamed flour and mix well.
  10. Press the mixture into a steel box. Roast the cashews, raisins and Coconut pieces in ghee and add to the pressed mixture.  Sprinkle the cardamom powder and the edible camphor over it and let it get cooled.
  11. Once cooled, take the puttu out, spread on a plate and mix well.
  12. Fluffy Puttu is ready. You can keep this for upto 2 to 3 days.

Note:  Instead of diced coconut, add grated coconut.



புட்டு:


நாளைக்கு வெள்ளிக்கிழமை… நவராத்திரி வெள்ளிக்கிழமைன்னா புட்டு பண்ணனுமே…இதோ வந்துட்டேன்…கடையில் வாங்கும் அரிசி மாவில் ஒரு புட்டு பண்ணிடலாம்.

 

தேவையான பொருட்கள்:

1 cup – அரிசி மாவு

1 cup – துருவின வெல்லம்

¼ tsp – மஞ்சள்தூள்

¼ tsp – உப்பு

2 tsp – துவரம்பருப்பு

½ tsp – ஏலக்காய் பொடி

சிட்டிகை – பச்சைக்கற்பூரம்

2 tbsp – நெய்

10 each – முந்திரி, திராக்ஷை,

2 tbsp – தேங்காய் பல்லாகக் கீறியது.

செய்முறை:

  1. வெல்லத்தை துருவி ஒரு கப் அளந்து எடுக்கவும்.
  2. துவரம்பருப்பை ஊறவைக்கவும்.
  3. அரிசி மாவை சிவக்க வறுக்கவும்.
  4. மாவு கொஞ்சம் ஆறினதும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்.
  5. கொஞ்சம் கொதிநீரை மேலே தெளித்து மாவை பிசிறி வைக்கவும். பிசிறி வைப்பதுன்னா சப்பாத்தி மாவு போல பிசையறது இல்லை, கையால் பிடிச்சா உருட்டிப் பிடிக்கலாம் விட்டால் உதிர்ந்து போய்டும். இந்தப் பதம் வந்ததும் ஒரு துணியில் கட்டி ஆவியில் வேகவிடணும்.
  6. ஆவியில் வைக்கும்போதே இந்த துவரம்பருப்பையும் குக்கரில் வைக்கலாம். சரியா 5 நிமிஷம் போதும், மாவும் வேகும், துவரம்பருப்பும் அரை வேக்காடு வெந்திருக்கும்.
  7. வெந்த மாவை உதிர்த்து வைக்கவும். துவரம்பருப்பையும் வடிகட்டி அதில் கலந்துவிடவும்.
  8. வெல்லத்தை முழுகும் வரை தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதித்ததும் வடிகட்டி கெட்டிப்பாகு (தண்ணீரில் விட்டால் உருட்ட வரும் பதம்) வந்ததும் (ஆவியில் வெந்த) மாவைக்  கொட்டி நன்றாகக் கலந்து வைக்கவும். கலந்ததை ஒரு டப்பாவில் அழுத்தி வைக்கவும்.
  9. மேலே முந்திரி, திராக்ஷை, தேங்காய் பல் மூன்றையும் நெய்யில் வறுத்து ஏலத்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து அழுத்தி மூடி விடவும்.
  10. நன்றாக ஆறியதும் புட்டை வெளியில் எடுத்து உதிர்த்துக் கலந்து வைத்தால் பொலபொலவென்று புட்டு தயார். வெல்லத்தைப் பாகு வைத்ததால் ரெண்டு மூணு நாளானாலும் கெடாது.

குறிப்பு:

தேங்காயை பல்லாகக் கீறுவதற்கு பதில் துருவியும் சேர்க்கலாம்.



10 thoughts on “Puttu”

  • ‘பட்’டுனு ‘புட்’டு சட்டுனு ‘போட்’டதக்கு ஓரு “ஓ’!

    • ‘சட்’டுன்னு ‘புட்’டுக்கு ‘குட்’டுன்னு ‘கமெண்ட்’டொண்ணு போட்டதுக்கு பதில் “ஓ”!

  • அற்புதம்!

    ஆனால் என் மாமியார் துவரம் பருப்பில்லாமல்தான் செய்வார்!

    இது எனக்கு புதிது!

    Regards,

    Purani.

  • So sweet of you ka…puttu seiyalam nu aasaiya irunthuchu.yepdi seirathunu theriyatha,blog la pakalam ilana ungala post pana solalam nu search pana u already posted..super thanks for u..

    Enaku wheat flour la puttu romba pidikum.. athum same like this? Or any other changes?
    Puttu idly vessel la vachu vega vaikalam thana? Cloth la close panum pothu maavu fula cover panidanum ah or idly mari vega vacha pothuma?

    Evlo doubt ah nu ketkathenga.. ethu tha first time enaku.😬

    • தேங்க்ஸ் சத்யா!

      கோதுமை மாவிலும் புட்டு செய்யலாம். கோதுமையில் ஒரு பசை இருக்கும். அது போக நல்லா வறுக்கணும். ரெண்டு விதமா செய்யலாம். வெறும் வாணலியில் வறுப்பது, ஒரு ஸ்பூன் நெய்யில் வறுப்பது. எப்படிப் பண்ணினாலும் சிவக்காம பார்த்துக்கணும். மாவில் உப்பு தண்ணியை தெளிச்சு moist பண்ணிக்கிட்டு ஆவியில் வேக விடுவதுதான் நல்லது. சில சமயம் இட்லி பானையில் வைக்கும்போது தண்ணி விட்டுக்கும். அதனால் துணியில் மூடி வைக்கலாம். ஒரு ப்ளைன் வைட் கர்சீப் இருந்தா கூட போதும். ஆவியில் வெந்த மாவை தட்டில் பரத்தி ஆற வைச்சுட்டு பிறகு சிரப் கலக்கலாம்.

      இதில் மாவு அளவுக்கு சர்க்கரை எடுத்து சிரப் செய்து (பாகெல்லாம் வேண்டியதில்லை) மாவில் கலந்து ஏலக்காய் போட்டா புட்டு ரெடி. சர்க்கரையை அதிக நேரம் வைச்சு பாகு வந்துட்டா மாவில் கலந்து ஆறியபிறகு கல் மாதிரி ஆய்டும். அப்போ கூட அந்தக் கல்லை ஆவியில் வைச்சு எடுத்து சூடா சாப்பிடலாம். எனக்கும் ரெண்டு மூணு flop அனுபவம் உண்டு இதில்….:P

      உங்களுக்கு சுலபமா ஒரு டெக்னிக் சொல்றேன். தேங்காய் வாங்கினா கீழ்பக்கம் மூடியில் உள்ள தேங்காயை க்ளீனா துருவிட்டு, அதில் மூணு கண் இருக்குமே, அதில் ஒண்ணை லேசா ஸ்பூனால் தட்டினா கூட ஓட்டை விழும், அந்த மாதிரி ஒரு கொட்டாங்கிச்சியை தயார் பண்ணி வைச்சுக்கங்க. சின்ன குக்கரில் கொஞ்சம் தண்ணி மட்டும் வைச்சு மேலே வெயிட் போடும் ventல் இந்தக் கொட்டாங்கிச்சியை fit பண்ணி அதில் வறுத்த மாவை moist பண்ணி அடைச்சு ஐஞ்சு நிமிஷம் வேக விடுங்க. அடுப்பு சிம்மில் இருந்தா கூட சரிதான். கொட்டங்கிச்சியை ஒரு சின்ன தட்டு போட்டு மூடி வைக்கணும். பிறகு எடுத்து தட்டி தேங்காய் துருவல், வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து ஏதாவது பழங்களை நறுக்கிப் போட்டு கூட சாப்பிடலாம். இது காரமா வேணுமானா தேங்காய் பூ, வெந்த பயறு உப்பு இப்படி சேர்த்து காலை breakfast க்கு சாப்பிடலாம். ஒருத்தருக்கு மட்டும் சீக்கிரமா செய்யக் கூடியது இந்தப் புட்டு.

      கோதுமை மாவு போலவே வறுத்த ராகி மாவு, வறுத்த அவலை மாவாக்கி என்று எல்லாத்திலையும் புட்டு பண்ணலாம்.👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *