Sundal Fruit Salad

Sundal Fruit Salad

I had promised you guys simple and easy dishes to make using leftover sundal, so here it is! This is the perfect party appetizer if you’re entertaining a lot of guests. It takes under 10 minutes to prep this and you can easily make large portions.

Skip to read in Tamil

 

Or if you have kids who make a face at sundal, sneak this in along with some fresh fruits as a (shhhhh!) healthy snack. You get to make good use of the fruits that are piling up in your house at the same time!

It’s also a great way of beating the heaviness of having sundal all on its own. Mix it up with some fruits, season with chaat masala and squeeze some lemon and you have a refreshingly light snack that you can pack for your kids’ or your own lunch, or even have along with weekend brunch!

 

Ingredients:

2 cups – Finely chopped Apple, Pear, Guava, Seedless Grapes

2 tbsp each of – Raisins, Nuts of your choice.

1 cup – Kabuli White Chana Sundal

¼ tsp – Salt

¼ tsp – Chaat Masala Powder

½ tsp – Lemon juice

Method:

  1. Reserve a cup of boiled channa before seasoning. (Remember to add salt alone while boiling the channa)
  2. Cut all fruits into small dices. Even the grapes need to be cut into 8 parts.
  3. Squeeze the lemon juice to cut through the sweetness of the fruits.
  4. Mix all fruits, Raisins and Nuts.
  5. Finally add the boiled channa and toss.
  6. Sprinkle salt and Chaat Masala on top and serve.

Footnote:

If using Leftover Sundal, don’t forget to wash them in a colander to remove the seasonings.

Avoid using sticky fruits like banana.



 

சுண்டல் ப்ரூட் சாலட்:

இதோ, நான் முன்பே சொன்னமாதிரி மிஞ்சின சுண்டலை என்ன பண்றதுன்னு தவிப்பவர்களுக்கு ஒரு ஐடியாவோட வந்துட்டேன்.

வீட்டில் எதிர்பாராத அளவு அதிக விருந்தாளியா? இதை பத்து நிமிடங்களுக்குள் செய்து அவர்களை கவர் பண்ணிடலாம்.

சுண்டலைக் கண்டாலே ‘உவ்வேக்’குன்னு ஓடற குழந்தைகளா? அவர்களையும் (ஷ்ஷ்….ஆரோக்கியமாத்தான்…) வளைச்சுப் போட்டுடும் இந்த சுண்டல்.

இல்ல, பண்டிகை சமயத்தில் வீட்டில் நிறைய பழங்கள் விதவிதமா சேர்ந்துபோச்சா? அதுக்கும் இதைத்தான் தீர்வா சொல்றேன்.

அதுவுமில்லைன்னா, தினமும் சுண்டல் சாப்பிட்டு, சாப்பிட்டு வயிறு ‘திம்’முன்னு இருக்குன்னு வீட்டார் கம்ப்ளைன்ட்டா?

கவலையே வேண்டாம், பழங்களை நறுக்கி மேலே லெமன் ஜூஸ் பிழிஞ்சு, சாட் மசாலா தூவி ஒரே கல்லிலே பல மாங்காய்கள் அடிச்சுடலாம்.

மிஞ்சிப்போன சுண்டலையும் காலி பண்ணலாம், பிள்ளைகள் லஞ்ச் பாக்ஸையும் ஆரோக்கியமா pack பண்ணலாம், வேலை செய்து அலுத்துப் போன உங்களுக்கும் weekend brunch ஆ பண்ணிக்கலாம்….

பீடிகை போதும், ரெசிபிக்கு போவோம்….

 

 

தேவையான பொருட்கள்:

2 cups – மிகவும் பொடியாக நறுக்கின ஆப்பிள், கொய்யா, பேரிக்காய். விதை இல்லா திராக்ஷை etc

2 tbsp தலா – காய்ந்த திராக்ஷை மற்றும் விருப்பமான நட்ஸ்

1 cup – வெந்த காபூலி சன்னா

¼ tsp – உப்பு

¼ tsp – சாட் மசாலா பொடி

½ tsp – லெமன் ஜூஸ்

செய்முறை:

  1. சுண்டலை தாளிக்கும் முன் ஒரு கப் தனியாக எடுத்து வைக்கவும். (சன்னாவில் உப்பு உரைக்க வேகும்போது உப்பு போட மறக்க வேண்டாம்)
  2. எல்லாப் பழங்களையும் மிகவும் பொடியாக நறுக்கவும். சீட்லஸ் கிரேப்ஸ் என்றாலும் அதை எட்டு துண்டுகளாக நறுக்க வேண்டும்.
  3. பழங்களின் மேலே அதன் இனிப்புச் சுவை குறைய எலுமிச்சை சாற்றை தெளிக்கவும்.
  4. நறுக்கிய பழங்களுடன் காய்ந்த திராக்ஷை, விருப்பமான நட்ஸ் சேர்த்து வைக்கவும்.
  5. வெந்த சன்னாவையும் இதனுடன் கலக்கிக் குலுக்கவும்.
  6. மேலே உப்பு, சாட் மசாலா தூவி பரிமாறவும்.

குறிப்பு:

மிஞ்சின சுண்டலை உபயோகிப்பதானால் வடிதட்டில் கொட்டி குழாயடியில் காட்டினால் தாளிப்பு நீங்கும்.

வாழைப்பழம் போல கொழகொழ பழங்களை அவாய்ட் பண்ணிடனும்.



6 thoughts on “Sundal Fruit Salad”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *