Sundal Pulav

Sundal Pulav

During Navarathri, preparing a variety of sundals everyday is a norm. It is possible that you would be having lot of leftovers and wouldn’t know what you could do with such huge quantities! Worry not! The leftovers can be transformed into a Pulav, which your family is guaranteed to fall in love with!

I have made this Pulav (without onion or garlic) using leftover Groundnut sundal.

 

Skip to read in Tamil

 

 

Ingredients:

1 cup – Basmati Rice

1 cup – Leftover Groundnut Sundal

1 ¼ cups – water

½ tsp –  Lemon Juice

For grinding:

10 – Cashews

10 – Raisins

2 – Green Chillies

½ inch – Young Ginger

A small bunch – Coriander Leaves

A handful – Mint leaves (not a must)

½ cup – Grated Coconut (this can be replaced with Coconut Milk or 1 tbsp of Poppy seeds)

For seasoning:

½ tsp each of – Fennel seeds, Cumin seeds, Black Pepper, Kalonji

1 inch long – Cinnamon Stick

2 – Whole Cardamom

1 – Star Anise

1 – Bay Leaf

2 – Cloves

½ tsp each of – Turmeric Powder, Red chilli powder, Coriander Powder and Garam masala

1 to 1 ½ tsp – Salt (or to taste)

Preparation:

  1. Soak the Cashews, Raisins and Poppy seeds (if you are using) in hot water.
  2. Wash the rice till the water runs clear and soak for half an hour. Washing thoroughly removes the starch in rice.   Soaking in very little water breaks the rice. See to that the rice is immersed in water.
  3. Place the leftover sundal in a colander and wash till all the seasonings are removed. Drain and keep aside.
  4. Meanwhile let us prepare the Masala. Assemble all the whole masala spices and spice powders in a plate separately.
  5. Squeeze the lemon and keep aside.
  6. I have done this pulav in Steeping method. So, no Pressure cooker or Rice cooker is needed.  You can use the Pressure cooker without lid or any heavy bottomed vessel to cook the rice.  The time taken to cook the rice is 20 to 25 minutes.

Cooking Method:

  1. Grind together all the ingredients given under the list ‘To grind’.
  2. Drain the rice.
  3. Add oil to the pan/cooker and add all the whole masalas. The stove should be in medium heat.
  4. Add the drained Groundnuts to it and saute.
  5. Add the drained rice and stir gently without breaking the rice.
  6. Add the ground masala paste and mix well. The masala should coat the nuts and the rice.  You will smell a nice aroma all over.  Now add the spice powders and salt to it and mix gently.  Use a wooden spatula or fork to mix.
  7. Next add the water and the lemon juice. Adding lemon juice will enhance the taste and ensures the rice is non sticky.

(The above mentioned water is inclusive of the water used to grind, and the coconut milk, if used.  Normally I do not measure the water while preparing Pulav. I add water just to the level the rice is immersed.  This would come to 1 : 1 ¼ in ratio.  This works for Basmati rice only.)

 

 

  1. After adding water, reduce the flame as far as possible. Seal the lid of the pan/cooker with an aluminum foil, as shown in the picture, or a perfect lid to close.  As the water is very low, it will not froth.  The indication for the doneness is that you will get a nice aroma all around.
  2. Open the foil / the lid and see that there is no water on top and the spatula comes out dry. Switch off the stove and sprinkle a spoon of water on top and close with a lid.
  3. The pulav is ready. No one will believe that this is made out of leftover sundal.

Footnote:

If you prefer to add tomatoes, onions or garlic, add while grinding.  But see to that the water is added just to immerse the rice while cooking.  This works for Basmati rice only.

You can use any leftover sundal to make pulav.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



 

சுண்டல் புலாவ்:

 

 

நவராத்திரி என்றாலே சுண்டல்…சுண்டல் என்றாலே நவராத்திரி என்பதுபோல ரெண்டும் பிரிக்க முடியாதது.  தினமும் சுண்டலை சாப்பிட்டு அலுத்துப் போகும் அல்லது மிஞ்சிப்போகும். சுண்டல் மிஞ்சிப்போனால் அதை எப்படி வீணாக்குவது என்று எல்லாருக்குமே கவலை ஏற்படுவது சகஜம்.

கவலை வேண்டாம்…

மறுநாளைக்கு அதை புலாவ் ஆக்கித்தந்துட்டா

செய்தவர்களுக்குக் கூட மிஞ்சாமல் பறந்துவிடும்.  இங்கே நான் வெங்காயம், பூண்டு இல்லாத புலாவ் செய்திருக்கிறேன்.

 

சரி, இனி தேவையான பொருட்கள் என்னன்னு பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

 1 cup – பாஸ்மதி அரிசி

1 cup – மிஞ்சின வேர்க்கடலை சுண்டல்

1 ¼ cups – தண்ணீர்

½ tsp – லெமன் ஜூஸ்

அரைக்க:

 10 – முந்திரி

10 – திராக்ஷை

2 – பச்சை மிளகாய்

½ inch – பிஞ்சு இஞ்சி

சின்ன கட்டு – கொத்தமல்லி

ஒரு கைப்பிடி – புதினா (விரும்பினால்)

½ cup – தேங்காய் துருவல் (தேங்காய்க்கு பதில் தேங்காய் பால் உபயோகிக்கலாம் அல்லது ஒரு டேபிள்ஸ்பூன் கசகசா உபயோகிக்கலாம்)

தாளிக்க:

 ½ tsp each of – சோம்பு, சீரகம், மிளகு, கருஞ்சீரகம்

1 inch long – பட்டைத்துண்டு

2 – முழு ஏலக்காய்

1 – அன்னாசிப்பூ

1 – பிரிஞ்சி இலை

2 – கிராம்பு

4 tbsp – குக்கிங் ஆயில்

½ tsp each of – மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள்

1 to 1 ½ tsp – உப்பு (அல்லது சுவைக்கேற்ற உப்பு)

செய்முறை:

  1. முந்திரி, திராக்ஷை மற்றும் கசகசா உபயோகிப்பதானால் கசகசா மூன்றையும் முழுகும் வரை கொதிநீர் விட்டு ஊற வைக்கவும்.
  2. பாஸ்மதி அரிசியையும் ரெண்டு மூன்று முறை கழுவி முழுகும் வரை நீர் விட்டு ஊற வைக்கவும். அரிசியை அழுக்கு நீங்கும் வரை கழுவினால் அதில் உள்ள ஸ்டார்ச் நீங்கும்.  ரொம்பவும் கொஞ்சமாக தண்ணீரில் ஊற வைத்தால் அரிசி உடையும், அதனால் முழுகும் வரை தண்ணீர் விட்டு வைக்கவும்.  குறைந்தது அரை மணி நேரம் ஊறலாம்.
  3. அரிசியும், அரைக்க வேண்டியவைகளும் ஊறும் நேரத்தில் மிஞ்சிப்போன சுண்டலை தயார் செய்யலாம். சுண்டலில் ஏற்கனவே தாளிப்பு, தேங்காய் எல்லாம் இருக்கும், அதே flavor இங்கேயும் வந்துடக் கூடாது என்பதால் அதை ஒரு வடிதட்டில் போட்டு நன்றாக அலச வேண்டும்.  கடுகு போன்றவை இல்லாமல் அலசணும்.  அலசிய பின் அப்படியே வடித்து வைக்கவும்.
  4. தாளிப்பு சாமான்களை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். இங்கே மசாலா சாமான்கள் முழுதாகவே சேர்க்கிறோம். இன்னொரு தட்டில் மஞ்சள் பொடி etc வை சேர்த்து வைக்கவும்.  எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து வைக்கவும்.

முக்கியக் குறிப்பு

இங்கே நான் சொல்லப்போவது Steeping method ல் புலாவ் செய்யும் முறை. பிரஷர் குக்கர் அல்லது ரைஸ் குக்கர் இல்லாமலேயே சுலபமாக செய்யக் கூடியது.  இதே முறையில் சுலபமாக இருபது முதல் இருபத்தைந்து நிமிடங்களில் புலாவ் செய்துவிடலாம்.  செய்ய அடிகனத்த ஒரு பாத்திரம் அல்லது வாணலி தேவை. சின்ன குக்கரிலும் செய்யலாம், குழையாமல் வரும்.

  1. அரைக்க வேண்டியவைகளை அரைத்து மசாலாவை தயார் செய்து வைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு முழு மசாலா பொருள்களை சேர்க்கவும். அடுப்பு மீடியம் ஹீட்டில் இருக்கவேண்டியது முக்கியம்.
  3. அடுத்து வடித்து வைத்த வேர்க்கடலை சுண்டலை சேர்க்கவும்.
  4. நன்றாகக் கலந்துவிட்டு அரிசியை வடிகட்டி சேர்க்கவும். எண்ணெயில் நன்றாகப் பிரட்ட வேண்டும்.
  5. அடுத்து அரைத்த மசாலாவை சேர்த்து அரிசி மற்றும் கடலை முழுக்க மசாலா coat ஆகும்படி பிரட்டவும். மசாலா coat ஆகும்போதே நல்ல வாசனை வரும்.
  6. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மசாலா தூள், தனியா தூள், உப்பு எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும். அரிசி உடையாதபடி கரண்டியால் ஜென்ட்டிலா கலக்கவேண்டும்.  மரக்கரண்டி அல்லது பெரிய fork பெஸ்ட்.
  7. இனி தண்ணீரை சேர்த்து எலுமிச்சம் பழ சாற்றையும் கலந்துவிடலாம்.
  8. இன்னொரு முக்கிய விஷயம், அரைக்க தண்ணீர் சேர்த்திருந்தால் இங்கே தண்ணீர் அளவையும் அதுக்கேத்தமாதிரி குறைக்கலாம். தேங்காய் பால் சேர்ப்பதானாலும் தண்ணீர் அளவை குறைக்கலாம். நான் பொதுவா தண்ணீரை அளப்பதில்லை. அரிசி முழுகும் அளவு தண்ணீர் சேர்ப்பேன், அது கிட்டத்தட்ட ஒரு கப்புக்கு ஒண்ணேகால் கப் என்று இருக்கும்.  இந்த முறையில், பாஸ்மதி அரிசியில் செய்யும்போது என் அளவு சரியாக இருக்கும்.

 

 

  1. முழுகும் வரை தண்ணீர் சேர்த்துவிட்டு அடுப்பை எவ்வளவு குறைவான தீயில் வைக்கமுடியுமோ, அவ்வளவு குறைவா வைச்சுட்டு படத்தில் கண்டபடி ஒரு அலுமினியம் foil லால் குக்கரின் வாயை அழுத்தி சீல் செய்துவிடுங்கள். வாசனை நன்றாக வரும்போது சாதம் வெந்தது என்று தெரிந்து கொள்ளலாம். அல்லது ஒரு அழுத்தமான மூடியால் மூடி வைத்தாலும் போதும். அளவான தண்ணீர் என்பதால் சாதா அரிசி போல பொங்குவது எல்லாம் இதில் கிடையாது.
  2. நான் சொன்னபடி சுமார் இருபது நிமிடங்களில் புலாவ் வாசனை நன்றாக வரும். அப்போது திறந்து பார்த்து fork அல்லது கரண்டியை ஜெண்டிலா உள்ளே போட்டா அடிப் பிடிக்காமல் இருக்கான்னு செக் பண்ணிக்கலாம். அடுப்பை அணைத்துவிட்டு ஒரு ஸ்பூன் தண்ணீரை மேலே தெளித்து மூடி வைத்துவிட்டால் புலாவ் மணமாக பதமாக தயாராகியிருக்கும்.

மிஞ்சின சுண்டலில் செய்தது என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள்.

இதை எந்த சுண்டல் மிஞ்சினாலும் செய்து அசத்தலாமே…

குறிப்பு:

தக்காளி விரும்புபவர்கள் தக்காளி, வெங்காயம், பூண்டு என்று எதையும் அரைக்கும்போது சேர்க்கலாம். எப்படிச் செய்தாலும் தண்ணீர் மட்டும் அரிசி ‘ஜஸ்ட் முழுகும் வரை’ என்று பார்த்துக்கொள்ளவும்.  இந்த அளவு பாஸ்மதி அரிசிக்கு மட்டுமே பொருந்தும்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *