Tips on Sundal preparation

Tips on Sundal preparation

Lo and behold! It’s Sundal Season again. So, a very happy Navrathri to you, lovely reader!

Skip to read in Tamil

I’m sure the first thing that comes to our minds at the mention of Navrathri must be sundal. Some regard it with excitement and a touch of nostalgic fondness. Others probably dread it on the merit past failed attempts.

Whether you’re the seasoned sundal connoisseur or the sundal newbie, you’re sure to find this post interesting. I’m pulling this post from some of my works in Penmai to repost with some modifications.

The prep stage for sundal can be quite challenging/confusing for some because the soaking time varies among the different types of grains. And none of us need the added stress of having guests on our doorstep and finding the sundal less than presentable! To make life easier for all of us, I’m giving a detailed note on the preparation of different sundals. Following that I’m sharing the differnet ways in which you can season your sundal.

In the next few days, I’ll be posting a host of delicious dishes you can make with sundal.  Keep an eye out for these to find out how you can sneak sundal into a fun dish for kids who are picky eaters. Or use these recipes if you are puzzled on what to do with a lot of leftover sundal! The dishes are so tasty that I’m sure you’ll make this all year around!

 

How do you make Sundal?

We all know that there are three segments in Sundal Preparation.  Soaking the necessary grains, cooking and seasoning.  The duration of soaking and cooking time differs between the grains.  Also, there are lot of variations in seasoning them.  Let us take a look at it one by one.

Pulses like Split Mung Dal and Chana Dal do not require much soaking time. Three hours are enough for them to soak. Pressure cooking makes them mushy.  So, cook them in a pan.

Bring the water to a rolling boil.  Drain the soaked Chana Dal and add them to the boiling water. Let the mixture boil exactly for 5 minutes.  Add salt and switch off the gas.  Close with a lid and wait for 10 minutes, you will find them cooked perfectly.  In my opinion, Mung Dal requires even lesser time to cook.  Adding lemon juice makes them non sticky.

Pulses like Whole Green Gram and Cow Gram (Black eyed Beans) need 3 to 4 hours of soaking time.  Soak them in the morning if you intend to prepare sundal in the evening.  As mentioned above, these two pulses tend to turn mushy if cooked under high pressure.  So cook them in a pan.  Boil water in a pan, drain and add the soaked Gram to it and let the mixture boil till it is soft when pressed between two fingers.  Add salt and switch off the gas.  Close with a lid and wait for 5 more minutes.  Drain and proceed with seasoning.

Pulses like Dried Peas, Black Chana, white Kabuli Chana, Groundnuts and Kidney Beans (Rajma) need to be soaked overnight.  Soak Horse Gram 24 hours before cooking for best results.  As far as cooking method is concerned, pressure cooking is a must for all the above.  Sometimes Dried Peas become mushy while pressure cooking.  So cook them in Pressure cooker for 2 whistles alone and release the pressure immediately to stop cooking further.  Add salt before cooking them under high pressure as this prevents them from turning mushy.

 

Different ways of seasoning the Sundals:

The first method is to add oil to the pan.  Season with mustard seeds, urad dal, chana dal, asafetida and curry leaves.  Add green chillies alone or green chillies with finely chopped young ginger for spice.  The green chillies can be whole, or slit lengthwise, or deseeded and finely chopped, or ground to a paste.  Add fresh coconut grates before adding the cooked dal.

The second method is almost similar to the first method. Instead of green chillies add Dried Red Chillies.  Avoid Ginger.

The third method would be a combination of Green chillies and Dried Red Chillies.  This gives an entirely different taste.

Another method is adding grated fresh mango while seasoning.  If not available, sprinkle ¼ tsp Dried Mango Powder (Amchur) at the end. The sundals prepared this way will be tangy and spicy. This can be used for all Sundals.

The fifth method would be preparing Instant flavoring powder which will come handy for all the 9 days of Navrathri.  To prepare the instant flavouring powder, roast ¼ cup of Coriander seeds, Dried chillies to taste and a small lump of Asafetida in a teaspoon of oil.  Remove the contents and roast a cup of fresh coconut grates in the same pan till crisp.  Cool and powder them together.  Sprinkle this Instant powder at the end.  White and Black Chana sundals taste perfect with this Instant Powder.

The next method is grinding 2 green chillies, a pinch of Red chilli powder, salt, a small bunch of coriander leaves and dried coconut grates together in a Mixie.  Do not add water.  Sprinkle this mixture after seasoning for yet another different taste.

If you have Pulihorai Ready Mix, sprinkle on top after seasoning.

To make the Sundal taste like a chaat, mix Amchur powder and Chaat Masala Powder together. Sprinkle a pinch of this mixture at the end.

For all varieties of sundals, add dried fruits like Dates, dried nuts and coconut grates to make it healthy.



 

சுண்டல் குறிப்புகள்:

 

இது ரெண்டு வருடம் முன்பு ‘பெண்மை’யில் நான் எழுதிய குறிப்பு. இங்கே உங்கள் பார்வைக்கு….

நவராத்திரி வந்தாச்சு…. இனி எங்கெங்கு காணினும் சுண்டலடா… தான்.  இங்கே புதியவர்களுக்கு சில சுண்டல் தாளிப்பு முறைகளும் எந்தெந்த வகை சுண்டலுக்கு எவ்வளவு நேரம் ஊற வைக்கவேண்டும் என்றும் சொல்கிறேன்.  சுண்டல் செய்வதை கற்றுக்கொண்ட பின் புதிய வகை சுண்டல்களையும் சொல்கிறேன்… அப்புறம் வீட்டில் குழந்தைகளுக்கு  சுண்டல் பிடிக்கவில்லை என்றால் அதை எப்படி மேக் அப் போட்டு புதுவிதமாக  அவர்களுக்குத் தரலாம் என்று சில டிப்ஸ் தனி போஸ்டுகளில் சொல்லிவிட்டு கடைசியில் மீந்து போன சுண்டலை என்ன செய்யலாம் என்று சில ஐடியாக்களை கூடிய விரைவில் சொல்கிறேன்….

 

சுண்டல் எப்படி செய்வது?

ஊறவைத்த சுண்டலை வேக வைத்து தாளித்தால் சுண்டல் என்று தெரியும்.  எந்தெந்த தானியத்தை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் எப்படி வேக விடவேண்டும் எந்தெந்த விதத்தில் தாளிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு போன்றவைகள் மூன்று மணி நேரம் ஊறினால் போதும்.  அதிகம் குழையாமல் வேக வேண்டும் என்றால் இதை குக்கரில் வைக்க வேண்டாம்.  தண்ணீரை நன்றாகக் கொதிக்க விட்டு ஊறின பருப்பை சேர்த்து சரியாக ஐந்து நிமிடம் வைத்து உப்பு போட்டுவிட்டு அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.  பத்து நிமிடம் கழித்து திறந்தால் பதமாக வெந்திருக்கும்.  பாசிப்பருப்புக்கு இன்னும் குறைவான நேரமே போதும்.  அது உதிர் உதிராக வர மேலே கால் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்க்கலாம்.

பாசிப்பயறு (Green Gram), தட்டைப் பயறு அல்லது காராமணி (Cow Gram or Black eyed Beans) போன்றவைகள் மூன்று அல்லது நாலு மணி நேரம் ஊறினால் போதும்.  முதல் நாளே ஊறப்போடவேண்டிய அவசியம் இல்லை.  காலையில் ஊறப்போட்டால் கூட மதியத்துக்கு சுண்டல் செய்துவிடலாம்.  இவைகளும் வெளியிலேயே வேகக் கூடியது.  குக்கரில் சில சமயம் குழைந்துவிடும்.  வாணலியில் நீர் வைத்து ஊறிய பயறுவகைகளை சேர்த்து வேகும் வரை கொதிக்க விடலாம். கைக்கு நசுங்கும் பதம் வந்ததும் உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து மூடி வைத்தால் பதமாக இருக்கும்.  வடிகட்டி சுண்டல் செய்யலாம்.

பட்டாணி (Dried Peas), கருப்பு கொத்துக்கடலை (Black Channa) வெள்ளை கொண்டைக்கடலை (kabuli white channa), வேர்க்கடலை (peanuts), ராஜ்மா (Kidney Beans) போன்றவைகள் முதல் நாளே ஊறப்போடுவது நல்லது.  கொள்ளு என்றால் 24 மணி நேரம் ஊறினால் நன்றாக இருக்கும்.

மேலே சொன்னவைகள் குக்கரில் வேகும்.  சில சமயம் பட்டாணி அதிகம் குழைந்து விடும் என்பதால் ரெண்டு விசில் மட்டும் விட்டு இறக்கிவிடலாம்.  மேலே சொன்ன எல்லாவற்றுடனும் உப்பு போட்டு குக்கரில் வைத்தல் குழையாமல் இருக்க உதவும்.

 

இனி எப்படியெல்லாம் தாளிக்கலாம் என்று பார்க்கலாம்.

வேக வைத்த சுண்டலை வடிகட்டி வைக்கவும்.

  1. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து காரத்துக்கு பச்சை மிளகாய் மட்டும் போட்டு தாளிப்பது ஒரு வகை. பச்சை மிளகாயுடன் இஞ்சியையும் நறுக்கித் தாளிப்பது இன்னொரு வகை.  மிளகாயை முழுதாகவோ, நடுவில் கீறியோ, பொடியாக நறுக்கியோ, அல்லது அரைத்தோ தாளிக்கலாம். தேங்காய் சேர்க்க மறக்க வேண்டாம்.
  2. பச்சை மிளகாய்க்கு பதில் சிவப்பு மிளகாயை தாளிப்பது அடுத்த வகை.  இதில் பெரும்பாலும் இஞ்சி இல்லாமலேயே நன்றாக இருக்கும்.
  3. மேலே சொன்ன ரெண்டு வகைகளை விட பச்சை மிளகாயுடன் சிவப்பு மிளகாயையும் சேர்த்து தாளித்தால் வேறுபட்ட சுவை கிடைக்கும்.
  4. எந்த வகை சுண்டலாயிருந்தாலும் மாங்காய் கிடைத்தால் துருவி தாளிக்கும்போது சேர்க்கலாம்.  இது புளிப்பும் காரமுமாக இருக்கும்.  மாங்காய் கிடைக்காவிட்டால் ஆம்சூர் பொடி கால் ஸ்பூன் அளவு கடைசியில் சேர்க்கலாம்.
  5. இவையெல்லாம் செய்ய நேரம் இல்லை என்றால் ரெடிமேட் பொடி ஒன்று செய்து வைத்துக்கொண்டால் போதும் நவராத்திரி ஒன்பது நாளையும் சமாளிக்கலாம்.  கால் கப் தனியாவையும் காரத்துக்கு வேண்டிய சிவப்பு மிளகாயையும் கட்டிப் பெருங்காயத்துடன் எண்ணையில் வறுக்கவும்.  கடைசியில் ஒரு மூடி தேங்காயை தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் பொடித்தால் சுண்டல் பொடி தயார்.  கடுகு etc வை தாளித்து இந்த பொடி தூவி இறக்கிவிடலாம். குறிப்பாக கருப்பு, வெள்ளை சன்னாவுக்கு இது perfect taste தரும்.
  6. ரெண்டு பச்சை மிளகாயுடன், சிவப்பு மிளகாய்த்தூள், கொத்தமல்லி தழை, உப்பு, கொப்பரை துருவல் எல்லாம் தண்ணீரே சேர்க்காமல் மிக்சியில் அரைத்து சுண்டல் தாளிக்கும் போது சேர்க்கலாம்.
  7. புளிக்காய்ச்சல் பொடி இருந்தால் அதை மேலே தூவி வைத்தால் அது ஒரு வகை.
  8. சாட் போலவே  வேண்டும் என்றால் ஆம்சூர் பொடி+சாட் மசாலா தூள் சேர்த்து கலந்து வைத்து ஒரே ஒரு பின்ச் சுண்டலில் சேர்க்கலாம்.
  9. எந்த வகை சுண்டலிலும் dry fruits மற்றும் dates போட்டு தேங்காய் போட்டு  செய்வது புது வகை.


4 thoughts on “Tips on Sundal preparation”

  • ௸ சுண்டலில் தேவைக்கேற்ப இலவங்கப்பட்டைப் பொடி சேர்த்தால் எப்படி இருக்கும்! பிரிஞ்சி இலையும் சேர்த்தால் மணமிக்கதாத இருக்குமோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *