Uppu Seedai

Uppu Seedai

Uppu Seedai is the Hallmark of the festival, Sri Jayanthi.  Let us take a look on how to go about making Uppu Seedai.

Skip to read in Tamil


Ingredients:

3 levelled cups – Rice Flour (how to prepare Rice Flour for Uppu Seedai)

3 tbsp – Roasted Urad Dal Flour (how to prepare Roasted Urad Dal Flour)

½ to ¾ cup – Fresh Coconut Grates

3 tbsp – Butter

3/4 tsp – Asafetida Powder

2 tsp – Cumin Seeds

1 to 1 and ½ tsp – Salt (or to taste)

Method:

  1.    Mix the Rice flour and Urad dal flour and sieve again.
  2.    Add salt, asafetida Powder and cumin seeds to it.
  3.    Add the butter in room temperature to the mixture and mix using your fingers till it resembles bread crumbs.

(Note:  Use fresh coconut grates. Due to the fibres and particles of outer shell present in the coconut grates and due to the impurities present in cumin seeds, Seedais might burst.  To avoid this, we can grind the coconut grates, cleaned cumin seeds and asafetida powder together in a mixie and mix with the flour.  In Karnataka, Seedais are done in this manner and they look so smooth and crisp.)

  1.    Add water slowly and knead to a dough to the consistency of chapathi dough.  Close with a damp cloth and keep aside.
  2.    After 30 minutes, roll the dough into marble sized balls using your Thumb and Index finger.  I mention this particularly, because the dough need to be rolled using very little pressure.  Another tip is that do not roll them into perfect round shape.
  3.    Let the balls dry on a clean white cloth or on a kitchen tissue under fan. ( I normally use Kitchen tissue, because it absorbs extra moisture content and doesn’t spoil the floor or the kitchen counter).

 

How to fry?

  1.    Once you finish rolling all the dough into balls, heat oil in a Kadai.
  2.    The oil should be more.  Using little oil to fry is not advisable.  Instead use a small kadai with oil filled to ¾ th  level.
  3.    Let the oil get hot, but not smoky.
  4.    Transfer the rolled seedais to the hot oil carefully.  Transfer them in one go.  See to that the oil is filled with seedais.
  5.    As the seedais are denser, it takes more time to cook inside.  Reduce the heat to medium and wait patiently.  Do not put the ladle in between while frying.  Stirring the oil while frying make the seedais dissolve in oil spoiling it completely.  (if it happens so, do not panic.  Switch off, wait for the oil to get cooled, drain and use the oil again.  Sometimes adding more butter too will make the seedais dissolve in oil.  So use the given quantity of butter)
  6.    Once all the seedais get cooked properly, the noise will reduce and you will see clear golden colored seedais in hot oil. (Initially, the butter gets melted in hot oil and become too frothy in oil.  But slowly everything will settle down and seedais will get cooked inside too.  So patiently watch them fry in oil till the noise subside.)
  7.    Drain in an oil absorbant paper using a slotted spoon.
  8.    Increase the heat and drop the next batch into oil.
  9.    Cool and store in a tight jar.

Some important tips to be noted while rolling the seedais:

  1.    Roll the seedais softly (without applying pressure)
  2.    Let the oil boil well, see to that the seedais are well packed in the oil.  Frying lesser number of seedais in     more oil, sometimes explode resulting in injuries.  Moreover, it is very difficult to remove the oil stains on the floor and the counter.
  3.    If you are doubtful, prick each and every seedai with a needle before frying.
  4.    Butter can be replaced with Edible Coconut Oil.
  5.    Instead of adding the fresh coconut grates, toast them well in a Dry hot pan.
  6.    Do not grind the flour too fine. Grinding to a fine rava texture ensures crispy seedais.
  7.    Do not forget to dry the rolled seedais under fan.  This helps preventing the seedais sticking to one another.
  8.    As told earlier, wait for the oil to get hot before frying.  Once added to the hot oil, simmer the heat and fry slowly to enable them to cook in the center.
  9.    Cumin seeds or Sesame seeds, whatever we add to the flour, needs to be cleaned well.

Footnote:

Use atleast 6 cups of flour to get a decent quantity of Seedais.



 

உப்பு சீடை:

ஸ்ரீ ஜெயந்தி என்றாலே நினைவுக்கு வருவது சீடைதான்.  முதலில் உப்பு சீடை செய்முறையைப் பார்க்கலாம்.

 

 

தேவையான பொருள்கள்:

3 cups – பச்சரிசி மாவு , (அரிசி மாவு தயாரிக்கும் முறை)

3 tbsp – உளுத்தமாவு , (உளுந்து மாவு தயாரிக்கும் முறை)

½ to ¾ cup – தேங்காய் துருவல்,

3 tbsp – வெண்ணெய்,

¾ tsp – பெருங்காயப்பொடி,

2 tsp – சீரகம்,

1 to 1 and ½ tsp – உப்பு.

செய்முறை:

  1.    மாவு மூன்று கப் எடுத்தால் மூன்று டேபிள் ஸ்பூன் உளுத்தமாவு போடலாம்.  வெண்ணெய் ஒரு கப்புக்கு ஒரு ஸ்பூன் வீதம் தேவை. அதிக வெண்ணெய் போட்டாலும் மாவு எண்ணையில் கரைந்து  போகும்.  
  2.    இதில் தேவையான உப்பு, சுத்தம் செய்த சீரகம் , தேங்காய் துருவல் , பெருங்காயப்பொடி போட்டு  விரல்களால் நன்கு பிசிறி விடவும்.

 (டிப்ஸ் :  தேங்காயில் ஓடு இருந்தாலோ சீரகம், உப்பு, போன்றவையில்  கல், குப்பை இருந்தாலோ சீடை வெடிக்கலாம். அதனால் தேங்காயை நன்கு துருவி சீரகத்துடன் மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி போடலாம். கர்நாடகாவில் தேங்காயுடன் உப்பு பெருங்காயத்தையும் அரைத்து செய்வார்கள் .  இது சீடை நன்கு மொழு மொழுவென்று இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.)

  1.    இப்படி தயாரித்த மாவை தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு  போல பிசைந்து கொள்ளவும்.  
  2.    பிசைந்த மாவை ஒரு அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.  
  3.    பிறகு ஒரு வெள்ளைத் துணியில் மாவை கட்டை விரலாலும் ஆள் காட்டி விரலாலும் ரொம்பவும் அழுத்தாமல் லேசாக உருட்டிப்போடவும்.
  4.    மாவை முழுவதும் உருட்டி, பேன் காற்றில் நன்கு ஆறியதும் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரிக்கவும்.

(டிப்ஸ்: துணியைத் தரையில் வைக்கும்போது தரை பிசுக்காகும் என்பதால் நான் kitchen tissue ஒன்றை தட்டில் வைத்து உருட்டிப் போடுவேன்.   அது சீக்கிரம் ஆறுவதோடு தரையையும் கெடுப்பதில்லை)

 

எப்படிப் பொரிப்பது?

  1.    சீடைகளை உருட்டி பேன் காற்றில் ஆற விட்டதும், வாணலியில் எண்ணெய் வைக்கவும்.
  2.    எண்ணெய் வாணலி நிரம்ப இருக்கணும்.  பெரிய வாணலியை விட சின்ன வாணலியில் முக்கால்வாசி எண்ணெய் ஊற்றினால் போதும்.
  3.    எண்ணெய் நன்கு சுடணும் ஆனால் புகை வரும் அளவு வேண்டாம்.
  4.    சீடைகளை எண்ணையில் போடும்போது கவனம் வேண்டும்.  ஒரே ட்ரிப்பில் எல்லா சீடைகளையும் உள்ளே போட்டுவிடலாம்.  எண்ணெய் நிரம்ப சீடை இருக்கும்படி பார்த்துக்கணும்.
  5.    முறுக்கு போல் இல்லாமல் சீடைகள் அழுத்தமாக இருப்பதால் நடுவில் வேக நேரம் எடுக்கும்.  சீடைகளை சேர்த்ததும் அடுப்பை மீடியம் ஹீட்டில் எரிய விடுவது உள்ளே வேக உதவும்.   நடுவில் கரண்டியை போடாமால் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நடுவில் கரண்டியால் திருப்பிவிட்டால் சீடைகள் எண்ணையில் கரைந்துவிட வாய்ப்பு உண்டு.  அப்படிக் கரைந்தாலும் மிரண்டு போகாமல் அடுப்பை அணைத்துவிட்டு, ஆறும்வரை காத்திருந்து எண்ணையை வடிகட்டி மீண்டும் உபயோகிக்கலாம்.
  6.    சீடைகள் வெந்துவிட்டதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், சத்தம் குறைந்துவிடும்.  எண்ணெய்யுள் சீடைகள் பொன்னிறமாக இருப்பது பளிச்சென்று தெரியும். ( சீடையில் உள்ள வெண்ணெய் எண்ணையுடன் கலந்து முதலில் நுரைத்து தானே அடங்கும்வரை நடுவில் எக்காரணம் கொண்டும் கரண்டியைப் போடாமல் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்கலாம்.)
  7.    உடனே ஜல்லிக்கரண்டியால் எடுத்து கிச்சன் பேப்பரில் போடவும்.
  8.    மறுபடி அடுப்பை பெரிதாக்கி அடுத்த ஈடு சீடைகளை சேர்க்கலாம்.
  9.    ஆறியதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கலாம்.

சில முக்கிய குறிப்புகள்:

  1.  சீடையை மிருதுவாக உருட்டணும்.
  2.  எண்ணெய் நன்கு காய்ந்ததும் சீடைகளை நெருக்கமாக கொட்டி விடவும்.  எண்ணெய் அதிகமிருந்து சீடைகள் குறைவாக இருந்தால் ஒன்று விடாமல் வெடித்து வேலையையும் மானத்தையும் வாங்கிவிடும். 🙂
  3.  அல்லது உருட்டின சீடைகளை ஒன்றுவிடாமல் எடுத்து ஒரு ஊசியால் ஓட்டை போட்டுவிடவும்.
  4.  சீடைக்கு வெண்ணெய் தான் என்றில்லாமல் தேங்காய் எண்ணெய்யும் விட்டு செய்யலாம். 5.  தேங்காய் துருவலை வாணலியில் பொன் நிறத்துக்கு வறுத்துப் போட்டு செய்தால் நன்கு வரும்.
  5.  மாவை சற்று கரகரப்பாக அரைத்துச் செய்தாலும் வாயில் கரையும்.
  6.   உருட்டிய சீடைகளை சற்று நேரம் காற்றில் ஆறவிட, ஒட்டிக்கொள்ளாமல் வருவதுடன் வெடிக்கவும் செய்யாது.
  7. எண்ணெய் நன்கு சூடான பின் சீடைகளைப் போட்டு பின் சிம்மில் வைத்துப் பொரிக்க உள்ளே நன்கு வறுபடுவதுடன் ருசியும் கூடும்.
  8.  சீடைக்கு போடும் சீரகமோ, எள்ளோ நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் ஓட்டிப்போட உருட்டவும் நன்கு வருவதுடன் ருசியும் கூடும்.

ஆறு கப் மாவு போட்டு சீடை உருட்டினாலே ஒரு சிறிய சம்புடம்தான் சீடைகள் வரும்.  அதனால் மாவு சற்று அதிகம் போலத்தோன்றினாலும்  ஆறு அல்லது ஏழு கப் போடவும்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *