Vella Seedai

Vella Seedai

Skip to read in Tamil

 

 

Ingredients:

1 cup  – Rice Flour (Toast till golden in color and measure)

1/8 cup or 2 tbsp – Roasted Urad Dal Flour

½ cup  – Powdered Jaggery (use ¾ cup jaggery if you want it more sweet)

1 cup – Water

1 tsp – Sesame seeds

½ tsp – Cardamom Powder

2 tbsp – fresh coconut grates

 

See how to prepare the rice flour and roasted urad dal flour here.

 

Method:

  1.       Toast the rice flour on a dry pan till they turn golden in color. Cool and measure in a cup.
  2.       Add the Roasted Urad Dal powder to it and mix well.
  3.       Add the Cardamom powder, Sesame seeds and coconut grates to it and mix well.
  4.       Add water to the powdered jaggery and bring it to boil.  Once jaggery gets dissolved in water, drain and remove the impurities.
  5.       Boil the syrup for few more minutes.  If you pour a drop of the syrup into a cup of water, the jaggery should be visible in water separately, but dissolve when you try to take it out.  This is the required consistency for the syrup.
  6.       Add this water to the flour mixture and mix without lumps.  If you find the water more, add few more spoons of roasted flour to it.  If water is not adequate, sprinkle some hot water and try to knead to chapathi dough consistency.
  7.       Let the dough get cooled for a while.  Roll into gooseberry sized balls, fry in hot oil in medium heat.
  8.       Do not put more than 8 seedais in a batch for better results.

Footnote:

You can alter the sweetness by adding or reducing the jaggery amount.  I add ¾ cup normally.

Do not put the ladle while the seedais are in hot oil.  They might get dissolved in oil spoiling it totally.



 

வெல்லச்சீடை:

 

 

தேவையான பொருள்கள்:

1 cup  – அரிசி மாவு (பொன்னிறமாக வறுத்துப் பின் அளக்கவும்)

1/8 cup or 2 tbsp – வறுத்தரைத்த உளுத்த மாவு

½ cup  – பொடித்த வெல்லம் (இனிப்பு அதிகம் வேண்டுமானால் முக்கால் கப் போடலாம்)

1 cup – தண்ணீர்

1 tsp – எள்

½ tsp – ஏலத்தூள்

2 tbsp – தேங்காய் துருவல்

 

வீட்டிலேயே அரிசி மாவு, உளுந்து மாவு தயாரிப்பது எப்படி என்று இங்கே பார்க்கவும்.

 

செய்முறை:

  1.       முதலில் அரிசிமாவை பொன்னிறமாக வறுத்து ஆறவைத்துப் பின் அளந்து கொள்ளவும்.
  2.       அரிசி மாவுடன் உளுந்து மாவைக் கலக்கவும்.
  3.       ஏலத்தூள், எள்ளு மற்றும் தேங்காய் துருவலை மாவுகளுடன் கலந்து வைக்கவும்.
  4.       பொடித்த வெல்லத்துடன் தண்ணீர் கலந்து கொதிக்கவிடவும்.  வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றவும்.
  5.       பாகு வரவேண்டிய அவசியமில்லை.  வெல்லத்தண்ணீர் கொஞ்ச நேரம் கொதித்த பின் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு கப் தண்ணீரில் விட்டால் தனியாகத் தெரியும், ஆனால் கையில் எடுக்க வரக்கூடாது.  இந்தப் பதம் வந்தால் அடுப்பை அணைத்துவிடலாம்.
  6.       இந்த வெல்லநீரை மாவில் கொட்டி கட்டியில்லாமல் சப்பாத்தி மாவு போலப் பிசையவேண்டும்.  கைகள் சுடும் என்பதால் ஒரு ஈரத்துணியால் பிசையலாம். (தண்ணீர் அதிகம் என்று தோன்றினால் ஒன்றிரண்டு ஸ்பூன் வறுத்த மாவை சேர்க்கலாம்.  தண்ணீர் பத்தாவிட்டால் கொஞ்சம் வெந்நீர் தெளித்துப் பிசையலாம்.)
  7.       மாவு ஆறியதும் நெல்லியளவு உருட்டி சூடான எண்ணையில் பொரிக்கவும்.

குறிப்பு:

நம் இனிப்பு சுவைக்கு ஏற்ப வெல்ல அளவை கூட்டியோ குறைத்தோ எடுக்கலாம்.  நான் முக்கால் கப் வெல்லம் எடுப்பது வழக்கம்.

ஒரு ஈட்டுக்கு எட்டு சீடைக்கு மேல் போடவேண்டாம். மாவு எண்ணையில் கரைந்தால் எண்ணெய் கெட்டுப்போகும் என்பதால் நடுவில் கரண்டியை போடாமல் பொறுமையாக பார்த்துக்கொண்டிருப்பது நல்லது.



11 thoughts on “Vella Seedai”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *