Bitter Gourd & White Ginger Pickle using Less oil

Bitter Gourd & White Ginger Pickle using Less oil

‘There is a connection between Courage and Bitter Gourd’. Sounds Funny, doesn’t it?

Skip to read in Tamil

Our elders believed that bitter taste promotes courage.  As a result, for generations young children and even soldiers in combat, were given bitter gourd as part of their diet.  Bitter gourd (or should I say, Bitter God), as the name suggests, is a great source of such bitterness.   Most of our parents and grandparents grow up eating it.  In fact it is the favorite veggie for many of them even now.

It is known that bitterness increases the antibodies and destroys the stomach worms which are common among children.  The Polypeptides present in Bitter Gourd increases the Insulin levels thereby decreasing the Blood sugar.  Let us prepare a tasty Pickle with Bitter Gourd using less oil.

 

Ingredients:

2 – Bitter Gourd (Medium size)

2 finger long – White Ginger

5 to 6 – Lemons

1 tsp – Coarse Salt

Water as required

1 tsp – sugar

For Pickle Masala:

1 tsp – Mustard seeds

1 tsp – Fenugreek seeds

3 tsp – Red Chilli Powder

1 tsp –Turmeric Powder

½ tsp – Asafetida

2 tsp –Coarse salt

For seasoning:

2 to 3 tbsp – Gingelly or Mustard Oil

1 tsp – Mustard seeds

Preparation:

  1. Wash the Bitter Gourds and White Ginger well.
  2. Remove the seeds of the Bitter Gourds and dice into small pieces.
  3. Peel the White ginger before cutting them into small pieces and add. (It is said that the Ginger has a poisonous substance in its skin.  So it is always better to remove the skin before using it.  You do not need a peeler to remove it, a small spoon is enough to peel it.)
  4. Add a teaspoon of coarse salt and squeeze in the juice of one lemon over it. Then add water just to immerse it.  Doing so will help relieve its bitterness.  Leave the cut bitter gourd immersed in water for about half an hour.  Let us prepare the Pickle masala in the meantime.

For Pickle Masala:

  1. Toast the Mustard seeds and Fenugreek seeds separately in a pan. Mustard seeds should pop up.  Fenugreek seeds should turn into golden in color with nice aroma all over.
  2. Add the other ingredients given in the list such as salt, Asafetida, Turmeric and Chilli Powders to it and grind into a fine powder. (Mustard and Fenugreek are added to prevent the pickles from spoiling and the chilli powder and lemon juice to counter the bitterness. So, feel free to alter the chilli powder according to your standard)
  3. Once the Pickle masala is ready, squeeze the remaining lemons and add a spoon of sugar to avoid turning bitter in taste. This sugar also acts as a natural preservative to the Pickle.  Refrigerate the juice till we start prepare the Pickle.
  4. After half an hour, drain the water from the diced bitter gourd completely and spread on a clean towel till dry. This process takes about 15 to 20 minutes.

Method:

  1. Once the diced Bitter Gourd is dry, transfer the same to a clean and dry Glass bottle (it is always good to store pickles in glass bottles. Avoid using Plastic or Pet containers to store Pickles.  Old Jam bottles can be cleaned and sterilized for repeated use of pickle storage.)
  2. Add the Pickle Masala to it.
  3. Then add the Lemon juice over it. (The ratio to cut pieces and lemon juice is 3 :1, so adjust the juice according to it)
  4. Season with Mustard seeds using the oil given in the list and cool for a while.
  5. Add the seasonings to the Pickle and mix well. The Lemon juice mixed with the Pickle Masala is the gravy part in this Pickle.  Let the pickle marinate for two days.
  6. After 2 days, taste it and adjust the taste. It depends upon the quality of Bitter gourd we use.  If it still tastes bitter after 2 days, powder more salt and chilli powder and add to the pickle.  Season again with little more oil and add to it.  (After 2 days, I had to add a spoon of chilli powder and salt to it to counter the extra bitterness and that is the reason why my Pickle is glittering with oil on top.)
  7. This Pickle can be eaten mixed with cooked rice or with Rotis or with Curd Rice. This Pickle stays good even for 2 months if refrigerated properly.

 

 

Note:

I have added White Ginger in this recipe. You can use ordinary Ginger if you can’t find this, or not use ginger at all.  Adding diced carrots to Bitter gourd also helps reduce its bitterness.  Now let’s move on to the recipe.
Get instant updates by subscribing through email or Facebook! 



பாகற்காய் மாங்காய் இஞ்சி ஊறுகாய்:

 

 

‘வீரத்துக்கும் பாகற்காய்க்கும் சம்பந்தம் உண்டு’ – தெரியுமா?

 

வீரம் வேணும்னா கசப்பு சுவையைச் சேர்த்துக்கொள்வது பண்டைய தமிழர்களின் வழக்கமாம்.  பாகற்காய் கசப்புதானே? அப்போ வீரத்துக்கும் பாகற்காய்க்கும் சம்பந்தம் உண்டுங்கறதும் கரெக்டுதானே?

 

ஆனா இந்தக் காலத்தில் குழந்தைகள் பாகற்காய் என்ற பேரைக்கேட்டாலே ஓடிவிடுவார்கள். கசப்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கிடைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும். இதில் Polypeptide என்ற பொருள் ஒன்று உண்டு, அது இன்சுலின் சுரப்பை அதிகரித்து உடம்பில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.

 

குழந்தைகள் ஓடினாலும் சில பெரியவர்களுக்கு பாகற்காய் என்றால் உயிர். அவர்களுக்கு குறைந்த எண்ணெய் சேர்த்து ஒரு ஊறுகாய் பண்ணலாம்.

இனி, ஊறுகாய்க்கு….

 

தேவையான பொருட்கள்:

2 – பாகற்காய்

2 – மாங்காய் இஞ்சி

5 to 6 – எலுமிச்சம்பழம்

1 tsp – கல்லுப்பு

தேவையான அளவு தண்ணீர்

1 tsp – சர்க்கரை

அரைத்துக்கொள்ள:

1 tsp – கடுகு

1 tsp – வெந்தயம்

3 tsp – மிளகாய்த்தூள்

1 tsp – மஞ்சள்தூள்

½ tsp – பெருங்காயம்

2 tsp – கல்லுப்பு

தாளிக்க:

2 to 3 tbsp – நல்லெண்ணெய் அல்லது கடுகெண்ணெய்

1 tsp – கடுகு

தயாரிக்கும் முறை:

  1. பாகற்காய் மற்றும் மாங்காய் இஞ்சியைக் கழுவவும்.
  2. பாகற்காயை விதைகள் நீக்கிப் பொடியாக நறுக்கி வைக்கவும். மாங்காய் இஞ்சியின் தோலை சீவி அதையும் பொடியாக நறுக்கி வைக்கவும். (இஞ்சிக்கு விஷம் தோலிலே என்பார்கள்.  இஞ்சியின் தோலை சீவ ஒரு ஸ்பூன் போதும், பிஞ்சாக இருந்தால் நகத்தால் கீறினாலே தோல் கழண்டு வந்துடும்)
  3. நறுக்கிய துண்டங்களின் மேலே ஒரு ஸ்பூன் கல்லுப்பை சேர்த்து குலுக்கிவிட்டு, ஒரு எலுமிச்சம்பழத்தையும் பிழிந்து முழுகும் வரை தண்ணீர் விட்டு அரை மணிநேரம் ஊறவைக்கவும். இப்படிச் செய்வதால் காயில் உள்ள கசப்பு கம்ப்ளீட்டா போய்டும்.
  4. ஊறும் நேரத்தில் பொடியைத் தயார் செய்து வைக்கலாம். ஒரு வாணலியில் கடுகு மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக வறுக்கவும்.  (கடுகு வெடிக்கும், வெந்தயம் சிவக்கும்.  அதுதான் பதம்.)
  5. இவைகளுடன் லிஸ்டில் கொடுத்துள்ள கல்லுப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் மிளகாய்த்தூளை சேர்த்து ஒன்றாகப் பொடித்து வைக்கவும்.  (கடுகு, வெந்தயம்  ஊறுகாய் கெடாமலிருக்க உதவும். கசப்பை அடிக்க காரம்தான் வேண்டும்.  உங்கள் விருப்பத்துக்கு ஏற்றது போலக் காரத்தைக் கூட்டியோ குறைத்தோ எடுக்கலாம்.)
  6. பொடி தயார் செய்ததும் மீதியுள்ள எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து பிரிட்ஜில் வைக்கவும். கசந்து போகாமல் இருக்க ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வைக்கலாம்.  சர்க்கரை ஊறுகாயைக் கெடாமலும் வைக்கும்.
  7. அரை மணி நேரம் ஆனதும் தண்ணீரில் உள்ள காய்களை வடிகட்டி ஒரு துணியில் பரவலாகப் போட்டு ஈரம் போகக் காய விடவும். அதிக பட்சம் கால் மணி நேரத்தில் ஈரம் போய்டும்.

ஊறுகாய் செய்முறை:

  1. காய்ந்த காய்களை ஈரமில்லாத ஒரு பாட்டிலில் கொட்டி செய்துவைத்த பொடியை மேலே போட்டு, பிழிந்து வைத்த எலுமிச்சம் பழத்தையும் சேர்க்கவும். (நறுக்கிய காய் முக்கால் கப் என்றால் எலுமிச்சை சாறு கால் கப் இருக்கலாம்.  அதுக்கேத்த மாதிரி பழங்களைப் பிழிந்து கொள்ளலாம்)
  2. இதன் மேலே தாளிக்கக் கொடுத்துள்ள லிஸ்ட் படி கடுகெண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கடுகு தாளித்து கொஞ்சம் ஆறியதும் கலந்து வைக்கவும்.
  3. நாம் பிழிந்த எலுமிச்சம் பழச்சாறுதான் இந்த ஊறுகாய்க்கு சாறு. எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து ரெண்டு நாள் ஊற வைத்தால் காய் ஊறுவதோடு பாகற்காய் தன்மைக்கு ஏற்ப கசப்பு இருந்தாலும் தெரியும்.  கசப்பு தெரிந்தால் இன்னும் கொஞ்சம் உப்பும் மிளகாய் தூளும் பொடிசெய்து கலந்து மேலே ஒரு ஸ்பூன் எண்ணெய் காய்ச்சி விடலாம்.  (ரெண்டு நாள் கழித்து நான் உபயோகித்த காயில் அதிக கசப்பு தெரிந்ததால் இன்னும் காரம், உப்பு சேர்த்து இன்னுமொரு ஸ்பூன் எண்ணெய் காய்ச்சி சேர்த்தேன், என் ஊறுகாய் எண்ணெய் பளபளக்க இருப்பதன் காரணம் அதுதான்)
  4. இந்த ஊறுகாயில் சாதம் பிசைந்து சாப்பிடலாம். மோர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.  சப்பாத்திக்கும் சரியான ஜோடி இது.  அதிக எண்ணெய் இல்லாததாலும் அடுப்பில் வைக்காததாலும் பிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் ரெண்டு மாதம் வரை கூட (அதுவரை மிச்சமிருந்தால்….!!!) நன்றாகவே இருக்கும்.

 

 

நோட்:

இதில் நான் மாங்காய் இஞ்சியும் சேர்த்திருக்கிறேன்.  மாங்காய் இஞ்சி கிடைக்காவிட்டால் சாதா இஞ்சி சேர்க்கலாம்.  அல்லது பாகற்காய் மட்டும் உபயோகித்தும் ஊறுகாய் போடலாம்.  கசப்பு குறையவேண்டும் என்றால் கொஞ்சம் காரட் கூட சேர்க்கலாம்.

டிப்ஸ்:

ஊறுகாய்களை எப்போதும் பீங்கான் அல்லது கண்ணாடி பாட்டில்களில் ஸ்டோர் பண்ணுவதே நல்லது.  பெட் / பிளாஸ்டிக் பாட்டில்களில் வைப்பதைத் தவிர்க்கவும்.  பழைய ஜாம் பாட்டில்களை தூக்கி எரியாமல் கழுவி வெயிலில் வைத்து எடுத்து வைத்தால் பல நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



4 thoughts on “Bitter Gourd & White Ginger Pickle using Less oil”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *