Butter Murukku

Butter Murukku

Sometime last year, I came across many recipes using Idiyappam Flour to make Murukku but never tried it. And then I thought, since preparing Murukku flour at home, right from scratch is extremely tedious, why not give this method a shot! The first time I made it, I tried this recipe from www.bhojanarecipes.com.

Skip to read in Tamil

It requires two main ingredients that are easily available everywhere.  One is Idiyappam flour, the other one is Pottukkadalai or Fried grams.  I tried it immediately and needless to say, it was a massive success! Later, I made some modifications and tried using Urad dal in place of Fried grams and Ghee in place of Butter.  Then, I tried using plain rice flour instead of Idiyappam Flour. Everything turned out well for me.

 

Ingredients:

4 cups – Readymade Rice Idiyappam Flour

1 ½ cups – Roasted gram Flour

1 tsp – Red chilli powder (adjust to taste)

½ tsp – Asafetida powder

1 tablespoon – White sesame seeds

1 tablespoon – Butter

Salt to taste

Hot water –to knead the dough (as required)

Oil to fry

Method:

 

 

  1. Roast Fried grams (Pottukadalai) slightly without changing the color and powder it. Measure 1 ½ cups of it and add the Readymade Rice Idiyappam Flour.  After mixing both flours, sieve it thoroughly to discard the impurities/ husk in it.
  2. Add salt, red chilli powder, asafetida and white sesame seeds to the flour mixture. (Remember the Idiyappam flour will have salt already added to it.)
  3. Once everything is mixed add 1 tablespoon of butter in room temperature and mix with your fingers till the mixture resembles bread crumbs. Instead of butter a generous spoon of ghee can also be added.  Keep this mix aside.
  4. Now boil some water in a separate vessel. Once it comes to a rolling boil, switch off the stove and add it to a portion of the flour mixture, mixing vigorously using a wooden or rubber spatula till the dough resembles a chapatti dough.  If you cannot bear the heat, cover the dough in a clean damp cloth and knead with your hands.
  5. Take a small ball of the dough, fill into a Murukku press and press in hot oil till crisp. As the flour gets cooked twice, in hot water and hot oil, this will melt in mouth.

Note: 

When the dough is too hot, it would be difficult to press, so we can wait for a few minutes to get it cooled.  This  murukku will be in golden color till the end, and most interesting part is that it consumes less oil compared to the traditional murukkus.  (It consumed only ½ litre of oil for me.)  Unlike traditional murukku, the oil remains clean till end.

Tips:

It is always better to knead the flour in small portions. You can fill a thermos flask with hot water to mix the flour.

Variations:

You can try to prepare Thenkuzhal by adding 1 tablespoon of dry roasted urad dal powder to each cup of Idiyappam Flour.  The other ingredients and method remain the same.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



பட்டர் முறுக்கு:

 

 

முறுக்கு செய்ய மாவு வறுக்கணும், அரைக்கணும் என்ற கவலையெல்லாம் படாமல் வாயில் போட்டதுமே கரையும்படி, அதே சமயம் எண்ணெய், வெண்ணெய் என்று பயப்படும்படியான சமாச்சாரங்களை குறைவாக உபயோகித்து  ஒரு ஸ்பெஷல் முறுக்கு இந்த தீபாவளிக்கு பண்ணலாமா?

பண்டிகை வந்தால் பொதுவா வெளிநாட்டில் இருப்பவர்கள் மாவு அரைக்க முடியலையேன்னு கவலைப் படுவார்கள்.  வருடத்துக்கு ஒரு முறை ஊருக்கு வரும்போது மாவு அரைத்து சென்று அந்தப் பழைய மாவை வைத்துதான் முறுக்கு செய்ய வேண்டியிருக்கும் என்று அலுத்துக்கொள்வார்கள்.  இனி அந்தக் கவலை வேண்டாம்… ‘ஊரில் இருக்கும் நாங்க மட்டும் கவலைப்படமாட்டோமா, அலுத்துக்க மாட்டோமா’ என்று கேட்காமல் எல்லாருமே செய்யலாம்.

கடையில் ரெடிமேடாக கிடைக்கும் இடியாப்ப மாவில் முறுக்கு செய்யலாம்.

இப்படி இடியாப்பம் மாவில் முறுக்கு செய்வதை நான் நிறைய பார்த்திருக்கிறேன்.  ஆனால் முயற்சி செய்ததே இல்லை.  www.bhojanarecipes.com லிருந்து முதல் முறை இந்த ரெசிபியை பார்த்துச் செய்தேன்.  வெற்றிதான்னு படங்களே சொல்லுமே…

இதில் பொட்டுக்கடலை, இடியாப்பம் மாவு எல்லா இடங்களிலும் கிடைக்கும் என்பது இன்னொரு வசதி.

அப்புறம் வெண்ணெய்க்கு பதில் நெய், பொட்டுக்கடலைக்கு பதில் வறுத்த உளுத்தம்மாவு, இடியாப்பம் மாவுக்கு பதில் சாதா அரிசி மாவுன்னு பல மாறுதல்கள் செய்தும் பார்த்துவிட்டேன். எல்லாமே கிராண்ட் சக்சஸ்தான். இருந்தாலும் basic recipe யை இங்கே ரிபீட்டிடறேன்….

 

தேவையான பொருட்கள்:

4 cups – ரெடிமேட் இடியாப்பம் மாவு

1 ½ cups – பொட்டுக்கடலை மாவு

1 tsp – சிவப்பு மிளகாய் தூள் (அல்லது காரத்துக்கு தகுந்தது)

½ tsp – பெருங்காயம்

1 tablespoon – வெள்ளை எள்

1 tablespoon – வெண்ணெய்

உப்பு – சுவைக்கு வேண்டிய அளவு

வெந்நீர் – பிசைவதற்கு வேண்டிய அளவு

பொரிக்கத் தேவையான எண்ணெய்

செய்முறை:

 

 

  1. நாலு கப் மாவுக்கு ஒன்றரை கப் பொட்டுக்கடலை வேண்டும். முதலில் பொட்டுக்கடலையை லேசாக வறுத்துக்கொண்டு மிக்சியில் பொடிக்கவும்.  நன்றாகப் பொடிவதற்காகத்தான் வறுப்பது, கருகாமல் ஐந்து நிமிடம் வறுத்தால் போதும்.
  2. வறுத்த பொட்டுக்கடலையை மிக்சியில் பொடி செய்துகொண்டு இடியாப்ப மாவில் கலக்கவும். பிறகு சலிக்க வேண்டும். (பொடித்த மாவில் தோல், குப்பை என்று எதுவும் இருந்தால் வெடிக்கும் என்பதால் இடியாப்ப மாவில் கலந்த பின் சலிப்பது.)
  3. இந்த மாவில் பெருங்காயம், வெள்ளை எள், காரப்பொடி, உப்பு (இடியாப்ப மாவில் உப்பு இருக்கும் என்பதால் உப்பு சேர்க்கும்போது மிகவும் குறைவாக சேர்க்கலாம்) சேர்த்துக் கலக்கவும்.
  4. இதில் ஒரேயொரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கலாம்.
  5. கையால் மாவை நன்றாகப் பிசிறி விட்டுக்கொண்டு முதலில் ஒரு கப் மாவை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் வெந்நீர் வைத்து அது தளதளவென்று கொதித்ததும் எடுத்துக்கொண்ட ஒரு கப் மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலக்கவும். கொதிநீர் என்பதால் கரண்டி அல்லது ஸ்பூனால் கலக்கலாம்.  சப்பாத்தி மாவு போலானதும் சுத்தமான ஒரு ஈரத்துணியில் மாவைப் போட்டு பிறகு கையால் பிசைய வேண்டும்.  கை சுடாமல் இருக்கவே மாவை துணியில் சுற்றிப் பிசைவது.
  7. இப்படி சூடாக இருக்கும் மாவை உடனே எண்ணையில் பிழிய வேண்டும் என்பதில்லை, மாவு சூடாக இருக்கும்போது முறுக்கு அச்சில் போட்டால் பிரஸ் பண்ணுவது சிரமமாகவே இருக்கும்.  கை பொறுக்கும் சூடு வந்த பின் நன்றாகப் பிசையலாம். மாவு ரொம்ப கெட்டியாக இருப்பதுபோலத் தெரிந்தால் ஈரக்கையால் அல்லது ஸ்பூனால் தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
  8. அச்சில் போட்ட மாவை தேன்குழல் போலவோ, முள்ளு முறுக்குப் போலவோ செய்யலாம். சத்தம் நிற்கும் வரை பொறித்து எடுத்து அடுக்கவும்.

குறிப்பு:

முதல் கப் மாவில் உப்பு அல்லது காரம் போதவில்லை என்றால் சாப்பிட்டுப் பார்த்து, அடுத்து வரும் மாவில் சேர்க்கலாம். அதிக கிறிஸ்ப் வேண்டும் என்பவர்கள் இன்னும் ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கவும் வசதி.

ஒரு flaskல் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்து ஒவ்வொரு கப் மாவையும்  பிசைய உபயோகிக்கலாம்.

மாவு கொதிநீரில் வெந்துவிடுவதால் எண்ணையில் போடும்போது இன்னொரு முறை வெந்து கரகரப்பாகிவிடுகிறது.

இப்படி செய்வதில் என் அனுபவம் என்றால், சாதா முறுக்கு மாவு செய்ய தேவைப்படும் எண்ணெய், வெண்ணெய் எல்லாம் இதில் குறைவு.  முறுக்கும் அதிகம் வருகிறது.  எண்ணெய் சுத்தமாகவே இருக்கிறது.  அதாவது மாவில் சேர்க்கும் எள் போன்றவை மாவில் உதிர்வதில்லை.  எனக்கு இந்த அளவு மாவில் முறுக்கு செய்ய அரை லிட்டர் எண்ணைதான் தேவைப்பட்டது.  ஒவ்வொரு கப் மாவாக பிசைந்து செய்வதால் கடைசி வரை முறுக்கு பிரவுன் ஆகாமல் ஒரே சீராக வருகிறது.  படங்களே சொல்லுமே அதை….

இடியாப்ப மாவில் தேன்குழல்:

மேலே சொன்ன மாவை ஸ்டார் அச்சிலும் தேன்குழல் அச்சிலும் பிழியலாம் என்று சொன்னேன்.  ஒரு கப் இடியாப்பம் மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் வறுத்து அரைத்த உளுத்தம் மாவை சேர்த்து தேன்குழலாகவும் செய்யலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



6 thoughts on “Butter Murukku”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *