Deepavali Marundhu Podi/Deepavali Lehyam

Deepavali Marundhu Podi/Deepavali Lehyam

It’s our tradition in Tamil Nadu to prepare Deepavali Lehyam, better known as, Deepavali Marundhu. It’s considered to bring a good balance to our diet amidst all the sweets and snacks we devour during the festive season.

Skip to read in Tamil

To prepare Deepavali Lehyam, you first need a Lehyam powder. You can buy the ready-made Lehyam powder but there’s nothing like making it from scratch at home. It doesn’t require much effort. You will find most of the required ingredients in your own spice rack. And if you’re the kind to keep on hand some Ayurveda medicines (Naatu Marundhu), you’ll find the other ingredients as well!

This recipe that I’m sharing has been passed down from my mother and my grandmother before her. So, the measurements are all not exact and mere approximates. You can see the ingredients picture for how much I used. Go ahead and just take a generous pinch of everything. Don’t worry, although inexact, it won’t go wrong.

We saw how and why Lehyam is prepared during Deepavali season. Now, let’s cut to a brief history lesson on why it is called a Marundhu.

Our forefathers sorted the food that we eat into 5 broad categories based on its consistency. Each of them were given a name (in Sanskrit) – Bhakshyam, Bhojyam, Lehyam, Soshyam, Peyam. Or they are together called Panja Paksha Paramannam, in short (hehe).

  1. Bhojyam – is the food we eat everyday. It typically doesn’t last for more than a day. The word ‘bhojanam’ in tamil gets its root from this.
  2. Bhakshyam – are those sweet and savoury snacks that last for a few days. The tamil word ‘bakshanam’ is derived from this.
  3. Lehyam – is the kind of food that is neither solid nor liquid. It is typically enjoyed best by licking. Halwas, panjamrutham and honey fall under this category. Most Ayurveda medicines are prepared in this consistency. Hence Deepavali Lehyam earning its popular monicker Deepavali Marundhu. (Note: this is the consistency you should aim for)
  4. Soshyam – the kinds of food that are slurped. Juices, coconut water and paanagam are good examples of this category.
  5. Peyam – are foods that are moderately thick liquids – are neither too thin like Soshyam nor too thick like Lehyam. The best example is Payasam or Kheer.

Alright, this brief explanation should give you an idea of the right consistency to aim for it.

 

One of the biggest challenges that people face is that their Lehyam turns into Kamarkattu or like a hard candy. The mistake that is often committed is that they wait for a string consistency in their jaggery syrup. Just follow my recipe and this should give you a perfect Lehyam.

 

Ingredients needed for making Deepavali Marundhu Podi:

We can take common spices found in our spice rack like

Pepper,

cumin seeds,

Coriander seeds,

Dry Ginger sticks or Powder,

Cinnamon Sticks,

Cloves,

Cardamom,

Carom seeds,

Nutmeg,

Mace (Jadipatri) etc.

The medicinal herbs like

Thipili (Indian Long peppers or Pipli,

Adhimadhuram (Liquorice) ,

Sitharaththai (Snap Ginger) can also be added to make it more healthy.

My mother used to add some common Choornams available at home like Tahlisadi choornam etc to make it more healthy.

 

 

Method:

  1. Thipili (Indian Long peppers or Pipli, Adhimadhuram (Liquorice) and Sitharaththai (Snap Ginger) are thick barks.  So first, break them into small pieces using Mortar and Pestle before grinding them in a Blender.
  2. Then toast them separately in an Iron Pan till nice aroma arise.
  3. Take care not to burnt them or roast them till they start smoking.
  4. Or simply heat an Iron Pan well and switch off the stove. Add everything mentioned above.  Keep stirring till they emit nice smell all around.
  5. Blitz everything in Pulse mode initially. Then powder finely and sieve.
  6. Do not discard the coarse powder left. We can make use of it too.
  7. In case of adding Dry ginger powder or cinnamon powder instead of the whole spices, you can do so before removing from the mixie jar.

 

Deepavali Lehyam:

 

 

Ingredients:

1 measure – Deepavali Marundhu podi

1 measure – loosely packed crushed Palm Jaggery

½ measure – water

1 or 2 spoons – Ghee

1 spoon – Gingelly Oil

1 spoon – Honey

Method:

  1. Take a small cup of Deepavali Marundhu podi.
  2. Measure equal amount of Palm Jaggery or plain Jaggery.
  3. Add water to it and boil till the jaggery is dissolved in water.
  4. Drain the dirt and bring to a boil again.
  5. No need for any string consistency, add the Marundhu podi to it and mix till they resemble Pulikaichal Paste or Pan cake batter consistency.
  6. Switch off the stove and add 2 tsp each of honey, ghee and gingelly oil to the mixture.
  7. Your Deepavali Lehyam is ready.

 

Note: 

This homemade Deepavali Marundhu Podi has various uses.  Some of them are listed briefly below.

 

Kaichal Kashayam / Homemade Fever medicine:

 

 

Heat a cup of water.  Add a small spoon of the Deepavali marundhu podi to it.  When it boils add a spoon of Palm sugar or Honey and drain.  Drink this instant medicine to relieve common cold or to sooth your throat.  This Kashayam can be drunk to relieve tiredness too.

 

Deepavali Marundhu Annapodi:

 

 

Ingredients:

¼ cup – Toor dal (Pigeon peas/Arhar dal)

1 tbsp – Sundakka vatral (Dried Turkey Berry)

1 tbsp – Manathakali vathal (Dried Sun Berry or Wonder Berry)

1 tbsp – Veppampoo (Neem Flowers)

1 tsp – Black Pepper

1 tsp – Cumin seeds

1 inch long – Dry Ginger stick (or a teaspoon of Dry ginger powder)

1 small lump – Asafetida

A handful of Curry Leaves

few spoons of Deepavali Marundhu Podi or the discarded portion

Himalayan Pink Salt to taste.

 

 

Method:

  1. Toast ¼ cup of Toor dal in an Iran Pan. Remove.
  2. Add the Dried Turkey Berry (sundakkai), Dried Sun Berry or Wonder Berry and Dried Neem Flowers (veppampoo) together and roast till crisp. Remove.
  3. Toast spices such as Black pepper, cumin seeds, lump of Asafetida and Dry ginger separately. Roasting cumin seeds for a longer time might change its aroma.  So as soon as the Asafetida becomes double in size, remove everything and add the washed and dried curry leaves.  (if using Dry ginger powder, add directly while grinding)
  4. Powder everything together for 1 minute. Add the discarded portion of the Marundhu podi to this.  Add Himalayan Pink salt to taste.  Grind again to a fine powder.
  5. This powder can be eaten with rice to avoid indigestion and stomach upsets.

Note:

If you do not want to use the discarded portions of Deepavali marundhupodi, then add the Marundhupodi itself to the above while grinding.

How to mix this Annapodi with rice:

  1. Take a bowl of cooked rice.
  2. Add a teaspoon of melted ghee and Gingelly oil to it.
  3. Add 2 tsp of Deepavali Marundhu Annapodi to it.
  4. Add salt to taste. Mix well and eat as a starter.
  5. This Marundhu podi sadham is a good appetizer and relieves you from stomach problems too.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



 

தீபாவளி மருந்து பொடி/ தீபாவளி லேகியம்:

 

தீபாவளி பண்டிகைக்கு லேகியம் அல்லது தீபாவளி மருந்து செய்வது தமிழ்நாட்டில் நமது பாரம்பரிய வழக்கம். பல வகை பக்ஷணங்களை சாப்பிடுவதால் ஏற்படும் வயிறு உபாதைகளை தீபாவளி மருந்து சரி பண்ணும் என்பது நம்பிக்கை.

 

தீபாவளிக்கு லேகியம் செய்ய பொடிகள் ரெடிமேட்டாகவே கிடைக்கும்.  இருந்தாலும் வீட்டில் தயாரிப்பதுதான் சிறப்பு.  அதுக்கு ரொம்பவெல்லாம் மெனக்கெடவே வேண்டாம்.  வீட்டில் அன்றாடம் நாம் உபயோகிக்கும் Spice rack ல் கொஞ்சம் தேடினாலே பல ingredients கிடைச்சுடும்.  வீட்டில் கைவைத்தியத்துக்காக  ஆயுர்வேத / நாட்டு மருந்து சாமான்கள் வைத்திருக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு மற்றவைகளும் கிடைச்சுடும்.

 

இங்கே நான் சொல்லப்போவது எங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்லித்தந்தது. அளவெல்லாம் கண்ணளவுதான். லிஸ்டில் இருக்கும்  தேவையான பொருட்களை விரல்களால் அள்ளி தோராயமா போட்டால் போதும்.  பெரும்பாலும் சரியாவே வரும். படத்தைப் பார்த்தாலே நான் என்னென்ன சாமான்களை எவ்வளவு எடுத்திருக்கேன்னு தெரியும்.

 

தீபாவளிக்கும் லேகியத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தோம்.  இப்போ, எதுக்கு இதை மருந்துன்னு சொல்றோம்ன்னு தெரிந்துகொள்ள கொஞ்சம் அறிவை வளர்த்துக்கலாம்.

 

நம் முன்னோர்கள் உணவை அதன் திட நிலைக்கு ஏற்ற மாதிரி 5 வகையா பிரித்திருக்கிறார்கள். இந்த வகைகள் எல்லாம் சமஸ்க்ருத பதத்தில் இருக்கும், போஜ்யம், பக்ஷ்யம், லேஹ்யம், சோஷ்யம் மற்றும் பேயம் என்பது.  சுருக்கமா சொன்னால்(!!!!) “பஞ்ச பக்ஷ பரமான்னம்” என்பார்கள்.

போஜ்யம் என்பது தினமும் நாம் உண்ணும் ஆகாரம், ஒரு நாளைக்கு மேல் நன்றாக இருக்காது. போஜனம் என்ற வார்த்தையின் Root word இதுதான்.

பக்ஷ்யம் என்றால் பக்ஷணம் என்று சொல்லப்படும் சில நாட்கள் வரை கெடாத இனிப்பு கார வகைகள்.

லேஹ்யம் என்பது திடமும் இல்லாமல் திரவமும் இல்லாத நடுவாந்திரம்.  நக்கிச் சாப்பிடக்கூடியது. அல்வா, பஞ்சாமிர்தம், தேன் போன்றவை இதில் சேரும். மருந்துகள் எல்லாம் இந்த நிலையில் தயார் செய்யப்படும் என்பதால் லேஹ்யம் என்று பெயர். (இங்கே நம்ம தீபாவளி லேகியமும் மருந்து வகையைச் சேர்ந்தது என்பதால் அதன் consistency இப்படித்தான் இருக்கணும் என்பதுதான் பாயிண்ட்)

சோஷ்யம் என்பது உறிஞ்சி சாப்பிடக்கூடிய ஜூஸ், இளநீர், பானகம் போன்றவை.

பேயம் என்பது ரொம்பவும் திரவ நிலையிலும் இல்லாமல் அல்வா போல லேகிய நிலையும் இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக இருக்கும் பாயச வகைகள்.

 

சரி, விஷயத்துக்கு வருவோம். மேலே சொன்ன சுருக்கமான விரிவுரை லேகியம் எப்படி இருக்கணும் என்பதற்காக என்று புரிந்திருக்கும். இங்கே நாம் பண்ணும் தவறு என்றால் பாகு வரும்வரை வெல்லத்தைக் காய்ச்சி லேகியம் கிளறப்போய் கமர்கட்டில் முடிப்பதுதான். இங்கே நான் சொல்லும் அதே முறையில் செய்தால் perfect லேகியம் கேரண்டி. இனி தீபாவளி மருந்து பொடியை எப்படித் தயாரிக்கலாம் என்று சொல்லுகிறேன்.

 

தீபாவளி மருந்து பொடி செய்யத் தேவையான பொருட்கள்:

 

 

மிளகு

சீரகம்

தனியா

சுக்கு

பட்டை

லவங்கம்

ஏலக்காய்,

ஓமம்

ஜாதிக்காய்

ஜாதிபத்திரி…

இதெல்லாம் வீட்டில் இருக்கும் பொருள்கள்தான்.  நம்மிடம் இருப்பவைகளை மட்டும் ஒரு பெரிய சிட்டிகை எடுத்துக்கொண்டாலும் போதும். இவை தவிர மருந்துப் பொருள்களான

அரிசி திப்பிலி,

குச்சி திப்பிலி அல்லது தேசாவரம்,

அதிமதுரம்,

சித்தரத்தை…

இதெல்லாம் இருந்தால் அதிலயும் ரெண்டொரு குச்சிகளை எடுத்துப் போடலாம். (என் அம்மா, தாளிசாதி சூரணம் இருந்தா, அதையும் கொஞ்சம் சேர்த்துப்பாங்க)

 

மேலே சொன்ன எல்லாப் பொருளையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கோங்க. குச்சிகள் போல இருக்கும் சுக்கு, சித்தரத்தை போல இருப்பவைகளை ஒரு அம்மியில் சின்ன துண்டுகளாக நசுக்கி சேர்க்கலாம்.

செய்முறை:

  1. எல்லாப் பொருள்களையும் வாணலியில் வாசனையா வறுத்துக்கணும். கருகக்கூடாது, தீயக்கூடாது, புகையக் கூடாது.  நல்லா வறுபட்டதுக்கு அடையாளம்ன்னா ரொம்ப மணமா இருக்கும்.  அப்போ எடுத்துடலாம்.
  2. இல்லைன்னா வீட்டில் இரும்பு வாணலி இருந்தா அதை அடுப்பில் வைத்து நல்லா சூடு பண்ணி, சூடானதும் அடுப்பை அணைச்சுட்டு மேலே சொன்ன சாமான்களை சேர்த்து கைவிடாமல் கிளறினாலே எல்லாம் வாசனையா வறுபட்டுடும்.
  3. வறுபட்ட சாமான்களை மிக்சியில் போட்டு Pulse mode ல் முதலில் அடித்துக்கொண்டு பிறகு நைஸா அரைச்சு சலிச்சுட்டா மருந்து பொடி தயார். சுக்கு, பட்டை போன்றவைகள் பொடியாக வைத்திருந்தால் அரைக்கும்போது கடைசியில் கலந்துக்கலாம்.
  4. சலிச்சு சலிச்சு கடைசியில் கப்பி மீந்தா கூட வேஸ்ட் பண்ணாம அதையும் ஒரு உபயோகமான டிஷ்ஷா மாத்திடலாம். இனி, லேகியம் பண்ணலாம்.

 

தீபாவளி லேகியம்:

 

 

தேவையான பொருட்கள்:

1 பங்கு– தீபாவளி மருந்து பொடி

1 பங்கு – பொடித்த வெல்லம் அல்லது பனை வெல்லம்

½ பங்கு – தண்ணீர்

1 or 2 spoons – நெய்

1 spoon – நல்லெண்ணெய்

1 spoon – தேன்

செய்முறை:

  1. ஒரு சின்ன கப் தீபாவளி மருந்து பொடியை எடுக்கவும்.
  2. அதேயளவு பொடித்த பனை வெல்லம் அல்லது சாதா வெல்லத்தை தயாராக வைக்கவும்.
  3. வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும்.
  4. கரைந்ததும் வடிகட்டி மறுபடி அடுப்பில் ஏற்றவும்.
  5. அடுப்பில் ஏற்றிய உடனேயே மருந்து பொடியையும் சேர்த்து விடலாம். பாகு எல்லாம் வர விடக்கூடாது. அப்புறம், லேகியம் என்பது கமர்கட் ஆகிவிடும் அபாயம் இருக்கு. புளிக்காய்ச்சல் போல வந்ததும் அடுப்பை அணைத்துவிடலாம்.
  6. அடுப்பை அணைத்ததும் நெய், நல்லெண்ணெய் கடைசியாக தேன் சேர்த்து ஆறவிடவும்.
  7. தீபாவளி லேகியம் தயார். இதே போலச் செய்தால் பல நாட்கள் வரை இளகியே இருக்கும் லேகியம்.

 

நோட்:

இப்படி வீட்டிலேயே தயாரிக்கும் தீபாவளி மருந்துப் பொடியை லேகியம் பண்ண மட்டும் உபயோகிக்காமல் வேறு உபயோகத்திற்கும் வைத்துக்கொள்ளலாம்.

 

காய்ச்சல் கஷாயம்:

 

 

ஒரு கப் தண்ணீரில் ஒரு சின்ன ஸ்பூன் அளவு தீபாவளி மருந்து பொடியைப் போட்டு கொதிக்க விடவும்.  அதில் இனிப்புக்கு வேண்டிய அளவு பனை வெல்லம் அல்லது தேன் சேர்த்து வடிகட்டிப் பருகினால் சளி, இருமல், தொண்டைக் கமறல் போன்றவைகள் நீங்கும்.  இவை தவிர களைப்பாக இருக்கும்போதும் இதை அருந்திவந்தால் களைப்பு நீங்கி அலுப்பு மருந்தாகவும் வேலை செய்யும்.

 

தீபாவளி மருந்து அன்னப்பொடி:

தீபாவளி மருந்துப் பொடியை சலித்து சலித்து அரைக்கலாம் என்று ஆரம்பத்தில் சொன்னேன்.  மீதி இருக்கும் கப்பியை கூட வீணாக்காமல் அதையும் உருப்படியாக மாற்றலாம்.

 

 

தேவையான பொருட்கள்:

¼ cup – துவரம் பருப்பு

1 tbsp – சுண்டைக்காய் வற்றல்

1 tbsp – மணத்தக்காளி வத்தல்

1 tbsp – வேப்பம்பூ

1 tsp – மிளகு

1 tsp – சீரகம்

1 piece – சுக்கு அல்லது ஒரு ஸ்பூன் சுக்குபொடி

சிறு கட்டிப்பெருங்காயம்

ஒரு பிடி – கறிவேப்பிலை

சுவைக்கு வேண்டிய இந்துப்பு

 

 

செய்முறை:

  1. முதலில் ஒரு வாணலியை சூடாக்கி அதில் பருப்பை போட்டு மணமாக வறுத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து சுண்டக்காய், மணத்தக்காளி வற்றல்களையும் வேப்பம்பூவையும் சேர்த்துப் போட்டு வறுக்கலாம். இது வாணலி சூட்டால் சீக்கிரமே வறுபட்டுவிடும்.
  3. அடுத்து மிளகு, சீரகம், சுக்கு, பெருங்காயம் சேர்த்து வறுக்கலாம். சீரகம் அதிகம் வறுபட்டால் மருந்து வாசனை வந்துவிடும் என்பதால் பெருங்காயம் உப்பி பெரிதாக ஆனதும் எடுத்துவிடலாம். சுக்குக்கு பதில் சுக்கு பொடி சேர்ப்பதாக இருந்தால் அரைக்கும்போது டைரக்டா சேர்க்கலாம்.
  4. கடைசியாக கறிவேப்பிலையையும் வறுத்து சுவைக்கான இந்து உப்பு சேர்த்து மீதியுள்ள மருந்துபொடி கப்பியையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  5. சுவையான அன்னப்பொடி தயார்.

நோட்:

மருந்து பொடியை சலித்து மீந்த கப்பியை உபயோகிக்க விரும்பாவிட்டால் ரெண்டு ஸ்பூன் மருந்து பொடியையே சேர்த்துக்கலாம்.

சூடான சாதத்தில் உருக்கின நெய் + நல்லெண்ணெய் சேர்த்து இந்தப் பொடியையும் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் நீங்கி பசியைத் தூண்டும்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



6 thoughts on “Deepavali Marundhu Podi/Deepavali Lehyam”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *