Dosa Pizza

Dosa Pizza

Want to make Pizza? Only have Dosa Batter on hand?

Quick, scroll down!!!

Skip to read in Tamil

 

Ingredients:

2 cups – Dosa Batter

2 cups – Chopped Vegetables

4 tbsp + 2 tbsp – Tomato Sauce + Chilli Sauce

Pizza Cheese – as required

Salt to taste

Chilli Flakes / Black Pepper/ Cayenne Pepper to taste

Few Sliced Olives – (optional)

Method:

  1. Chop the vegetables. I have taken red, yellow and green bell peppers and cabbage here.  As the Dosa base is very tender for a Pizza base, chopping the vegetables finely is good. Chopping the veggies in a Food Processor saves time.
  2. The next step is to mix both the sauces together in a bowl. The ratio between Tomato Sauce and Chilli Sauce can be 2 : 1.  If you are serving for children reduce the quantity of  chilli sauce and use Tomato ketchup in place of Tomato sauce.
  3. Keep the Pizza cheese ready.
  4. Place the Griddle on stove and heat well. Once hot, reduce the heat completely and spread the Dosa batter on top. As the base is made of dosa batter, it will be cooked before we finish the toppings.  So it is always better to keep the heat in simmer position while making Dosa Pizzas.
  5. As soon as the batter is spread on the Griddle, drizzle some oil to its sides. This helps to lift the dosa pizza without any damage.
  6. Once the batter is spread on the griddle, apply the sauce gently. Do not apply more sauce or apply till the edge of the dosas. Else, the dosas will become soggy and tear while lifting.
  7. After spreading the Sauces, sprinkle the cut vegetables above it and season with a pinch of salt and spices.  The spices can be of your choice.
  8. The next step is spreading grated cheese above the vegetables. Place the sliced Olives here and there and cover with a lid.  As we cannot flip the dosa, covering is necessary to cook the upper side. Remove the lid once the cheese melts completely. (It takes between 2 to 3 minutes for the cheese to melt.)
  9. Now the Dosa Pizza is ready to be lifted to a plate. Care should be taken while transfering the Dosa Pizza to the plate.
  10. Cut into pieces using a Pizza Cutter and enjoy when hot.

 

 

Footnote:

  1. As we do not consume Onions and Garlic, I have used Cabbage. If you wish you can replace cabbage with onions.  Similarly top with sliced tomatoes for a variation.  Apple sauce can also be used instead of Tomato sauce along with Pineapple toppings.
  2. Because of the cheese and lots of veggies, Dosa Pizzas are very heavy.
  3. Transferring the Dosa Pizza from the griddle to a plate should be done gently like transferring a patient from stretcher to bed. Lift one side of the dosa with a turner, insert a plate and drag the dosa inside the plate.  If you miss this step the Dosa pizza will fold or tear and your kids will never accept it as a Pizza. 🙂 🙂
  4. Similarly, you can use Adai batter in place of Dosa batter to make Adai Pizza. The rest of the ingredients and prep is same as that of Dosa Pizza.  For the videos of Adai Pizza watch the video below.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 



தோசை பிட்சா:

 

 

“கண்ணா! பிட்சா சாப்பிட ஆசையா?”

“பிட்சா உடம்புக்கு கேடுன்னு பயம் வேறயா?”

“கவலை வேண்டாம்! வேகமாக ஸ்க்ரோல் பண்ணுங்க…. ஹெல்தியா தோசையில் பிட்சா பண்ணலாம் வாங்க….”

 

தேவையான பொருட்கள்:

2 cups – தோசை மாவு

2 cups – காய்கறி நறுக்கியது

4 tbsp + 2 tbsp – தக்காளி சாஸ் + சில்லி சாஸ்

வேண்டிய அளவு – பிட்சா சீஸ்

சுவைக்கு வேண்டிய அளவு உப்பு

காரத்துக்கு வேண்டிய அளவு சில்லி flakes / மிளகுத்தூள் / Cayenne Pepper

நறுக்கிய Olives (விரும்பினால்)

செய்முறை:

  1. காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும். இங்கே நான் சிவப்பு, மஞ்சள், பச்சை மூன்று நிற குடைமிளகாய் மற்றும் கோஸ் எடுத்து நறுக்கினேன். தோசை என்பது மிக மெல்லிதாக இருக்கும் என்பதால் காய்கறிகளை பொடியாக நறுக்கினால் நல்லது.  Food Processor இருப்பவர்கள் அதில் chop பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அடுத்து தக்காளி மற்றும் சில்லி சாஸை கலந்து வைக்கவும். குழந்தைகளுக்கு serve பண்ணனும் என்றால் தக்காளி சாஸ் அதிகமாகவும் சில்லி சாஸ் குறைவாகவும் எடுக்கலாம்.  நான் எடுத்தது 2 : 1 Ratio வில் தான்.
  3. பிட்சா சீஸை தயாராக வைக்கவும்.
  4. அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு சூடானதும் மிகவும் சிம்மில் வைக்கவும். இங்கே தோசைதான் பிட்சாவுக்கு base என்பதால் நாம் toppingsஐ முடிப்பதற்குள் தோசை வெந்துவிடும்.  அதனால் அடுப்பு மிகவும் குறைந்த தீயில் இருக்கணும்.
  5. தோசை வார்த்துவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு (எண்ணெய் விட்டால் தோசை கேரண்டியாக எடுக்க வரும்) மேலே சாஸை பரவலாக தடவவும். சாஸ் தடவும்போது அழுத்தாமல் ஜெண்டிலா தடவலாம்.  அதேபோல ஓரம் வரை தடவாமல் நடுவில் தடவினால் நல்லது, இல்லையென்றால் தோசை sog ஆக வாய்ப்பு உண்டு.
  6. சாஸை தடவினதும் நறுக்கிய காய்கறிகளை பரவலாகத் தூவி மேலே சிட்டிகை உப்பு, விருப்பத்துக்கு ஏற்ப மிளகுத்தூள் அல்லது Chilli Flakes அல்லது Cayenne Pepper தூவவேண்டும்.
  7. அடுத்து சீஸும் தூவி நறுக்கி வைத்த Olives ஐயும் அங்கங்கே வைத்து ஒரு மூடியால் மூடவும். தோசையைத் திருப்ப முடியாது என்பதால் மூடி வைப்பது மேல் பக்கம் வேக உதவும். தோசையும் வெந்து சீஸும் உருகும்வரை மூடி வைக்கலாம்.  இதற்கு சுமார் ரெண்டு முதல் மூன்று நிமிடங்கள்தான் ஆகும்.
  8. சீஸ் உருகினதும் திறந்து ஒரு துடுப்பால் நிதானமாக தோசையை lift பண்ணி ஒரு தட்டுக்கு transfer செய்து சுடச்சுட இருக்கும்போதே பிட்சா கட்டரால் வெட்டி பரிமாறவும்.

 

 

குறிப்பு:

  1. எப்போதும் சொல்வதுபோல இது வெங்காயம் பூண்டு இல்லாத எங்கள் வீட்டு ரெசிபி. வெங்காயம் விரும்பினால் கோசுக்கு பதில் போடலாம்.  அதேபோல தக்காளியை வில்லைகளாக நறுக்கி மேலே அழகாக வைக்கலாம்.  தக்காளி சாஸுக்கு பதில் ஆப்பிள் சாஸ் போட்டு மேலே பைனாப்பிள் டாப்பிங்க்ஸ் செய்தாலும் நன்றாக இருக்கும்.
  2. சீஸ் மற்றும் காய்கறிகள் இருப்பதால் நல்ல ஹெவியாகவே இருக்கும் இந்தப் பிட்சா. ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிரம்பிடும்.
  3. அடுத்த பாயின்ட், தோசை பிட்சாவை தட்டுக்கு மாற்றும்போது ஒரு பேஷண்டை ஸ்ட்ரெச்சரிலிருந்து பெட்டுக்கு மாற்றுவது போல கவனமாக மாற்றணும். முதலில் ஒரு பக்கத்தைத் தூக்கி நடுவில் தட்டை நுழைத்து மற்றொரு பக்கத்தை துடுப்பால் தூக்கி தட்டுக்குள் இழுத்து விடணும்.  நடுவில் மடங்கியோ கிழிந்தோ போனால் குழந்தைகள் இதைப் பிட்சா என்று ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். 🙂 🙂
  4. இதே போல அடை மாவிலும் பிட்சா செய்யலாம். அதைக் கீழே வீடியோவில் பார்க்கலாம்.  தோசை மாவுக்கு பதில் அடை மாவு எடுக்கலாம், மற்றவைகள் மேலே சொன்னதுபோலவேதான்.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 



4 thoughts on “Dosa Pizza”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *