Kadalapparuppu Tuvaiyal

Kadalapparuppu Tuvaiyal

Tuvaiyal is a traditional condiment for rice, that is easy to make and healthy.  Essentially, you can imagine it as a wet chutney like form of Paruppu podi.

Paruppu Tuvaiyal generally refer to Tuvaiyal made of Toor Dal or Pigeon peas.  This is another variety of Paruppu Tuvaiyal.  This can satisfy your taste buds if you want to eat spicy food.  Prepare Pepper Rasam or Milagu Kuzhambu and make this Kadalapparuppu Tuvaiyal as its Side…..and your day is made.

Skip to read in Tamil

 

Ingredients:

1 cup – Chana Dal

7 to 8 – Dried Red chilles

½ tsp – Asafetida

¾ tsp – salt (or to taste)

2 tsp – Gingelly oil

Method:

  1. Add oil to a pan and roast the chillies first.
  2. Add the Chana Dal to the pan and roast till golden in color.
  3. Add salt and asafetida to the above and grind to a paste. You can use water to grind.  Do not worry if it is thin in consistency, it will thick automatically after sometime.
  4. Season with Mustard seeds and Curry leaves if you wish.

Variations:

You can add fresh coconut grates or use coconut milk to grind the Tuvaiyal as a variation.

Add a mixture or ghee and gingelly oil to the hot cooked rice and mix the Tuvaiyal for a great taste.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



கடலைப்பருப்பு துவையல்:

 

துவையல் என்பது சாதத்துடன் சாப்பிடக்கூடிய ஒரு….. என்ன சொல்லலாம்… சட்னி போன்ற ஒன்று. துவையல் வகைகளிலும் இந்த பருப்புத்துவையலுக்கு அதிக பொருட்கள் தேவையில்லை. வீட்டில் எப்போதும் இருக்கும் பருப்பை வைச்சே சமாளிக்கலாம்.

 

பருப்பு துவையல்ன்னா எல்லாரும் துவரம்பருப்பு துவையலைத்தான் சொல்லுவோம்.  இது கடலைப் பருப்பில் செய்வது.  கார சாரமாக சாப்பிடத் தோன்றும்போது மிளகு குழம்பு அல்லது மிளகு ரசம் செய்யும் நாட்களில் இதையும் செய்து நல்ல பக்கவாத்தியமாக அமைக்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

1 cup – கடலைப்பருப்பு

7 to 8 – சிவப்பு மிளகாய்

½ tsp – பெருங்காயம்

¾ tsp – உப்பு (அல்லது சுவைக்குத் தகுந்தது)

2 tsp – நல்லெண்ணெய்

செய்முறை:

  1. வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய்களை வறுத்து எடுக்கவும்.
  2. அடுத்து பருப்பை கருகாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
  3. உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்சியில் தண்ணீர் ஊற்றி ரொம்ப நைசாகவும் இல்லாமல் கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைக்கவும். அரைக்க தண்ணீர் சேர்க்கலாம்.  துவையல் நீர்க்க இருப்பது போலத் தெரிந்தாலும் சற்று நேரத்தில் கெட்டிப்பட்டுவிடும்.
  4. விரும்பினால் மேலே கடுகு கறிவேப்பிலை தாளித்து சாப்பிடலாம்.

மாற்று முறை:

தேங்காய் அல்லது தேங்காய் பால் உபயோகித்து அரைத்தால் அது ஒரு சுவை.

சூடான சாதத்தில் நெய் + நல்லெண்ணெய் கலந்து ஊற்றி, கடலைப் பருப்பு துவையலை சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டுப் பாருங்களேன்….

 

Get instant updates by subscribing through email or Facebook! 



3 thoughts on “Kadalapparuppu Tuvaiyal”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *