Kaju Kathli

Kaju Kathli

What’s a Deepavali without a rich and royal sweet to spark up the festive season!

Today, I’m going to show you how to make the King of all decadent sweets – the Kaju Katli. This is a simple recipe that yields about 50 authentic and delicious Kaju Katlis.

Happy Deepavali (in advance)!

Skip to read in Tamil

Ingredients:

250 g – Cashew nuts

8 tsp– Milk Powder (40 g)

1 cup – Sugar (200 g)

½ cup – Water (100 ml)

1 tsp – Ghee

Method:

  1. Sun dry the Cashew nuts or toast them in very low power in Micro wave. Or heat a pan and switch off the stove.  Add the Cashews to it and keep turning them continuously to make them crisp.  Crispier cashews powder finely.
  2. Powder the Cashews in a Mixie jar in pulse mode. Do not run the Mixie continuously, as the oil in the cashews might make them thick and dense. It is better to blitz in small quantities for better results.
  3. Ensure the powder is fine. (if possible, sieve the powder to get a smoother texture)
  4. Add the milk powder to it and mix well. Keep aside.
  5. Add sugar and water to a Non-stick pan to make syrup.
  6. Wait for one string consistency. If you drop the syrup from a distance, it should flow continuously without breaking.  Or take a drop between your thumb and forefinger and pull apart.  If a string is formed in between, then switch off the stove.
  7. Add the cashew nut powder to it and mix well without any lumps. Once mixed, smear the mixture thinly over the sides of the pan.  Wait till the mixture is non sticky to your hands. By this time the mixture will be cool enough to touch.
  8. Knead well like you do for chapatti dough. You can apply little ghee on your hands before kneading.  My Food Processor helped me to knead it well. 🙂
  9. Once it is smooth like a ball, put the ball inside a thick plastic cover and roll from outside as seen in the video.

 

 

  1. Open and cut into desired shapes.
  2. Kaju Kathli is ready to eat.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



காஜு கத்லி/முந்திரி கேக்:

 

 

ரொம்ப சிம்பிளா ஒரு ஸ்வீட் பண்ணலாமா? முந்திரி கேக்குன்னு சொல்லிட்டு அப்புறம் என்ன சிம்பிள்ன்னு கேக்கக்கூடாது.  பண்ணுவதுதான் சிம்பிள். மத்தபடி இது ஒரு ராயல் ஸ்வீட்தான் சந்தேகமேயில்லை.  கால் கிலோ முந்திரியில் நெய் இல்லாமலேயே சுமாரா 50 கேக் வரும்.

 

இந்த தீபாவளியை காஜு கத்லியுடன் கொண்டாடலாமே!

 

தேவையான பொருட்கள்:

250 g – முந்திரிப் பருப்பு

8 tsp– பால் பவுடர் (40 g)

1 cup – சர்க்கரை (200 g)

½ cup – தண்ணீர் (100 ml)

1 tsp – நெய்

செய்முறை:

  1. முந்திரிப்பருப்பை வெயிலில் காய வைத்து அல்லது மைக்ரோவேவில் குறைந்த பவரில் லேசாக வறுத்து வைக்கவும். அல்லது ஒரு வாணலியை சூடு படுத்தி அடுப்பை அணைத்துவிட்டு முந்திரிப் பருப்பை அதில் சேர்த்து சில நிமிஷங்கள் கைவிடாமல் வறுத்தாலே போதும், கிறிஸ்ப் ஆகும்.  இப்படி மொறுமொறுப்பாக இருந்தால்தான் நைஸாகப் பொடியாகும்.
  2. மிக்ஸி ஜாரில் கொஞ்ச கொஞ்சமாக முந்திரிகளைப் போட்டு, விட்டு விட்டு pulse mode ல் அடிக்கவும். தொடர்ந்து அரைத்தால் பருப்பில் உள்ள எண்ணெய் எல்லாம் வெளியில் வந்து முந்திரி வெண்ணெய் (Cashew Butter) ஆகிவிடும்.
  3. முந்திரி நன்றாகப் பொடியானால் போதும், முடிந்தால் சலிக்கலாம், இல்லைன்னா அவசியமில்லை.
  4. முந்திரிப்பொடியில் பால் பவுடரை கலந்து வைக்கவும்.
  5. ஒரு நான் ஸ்டிக் கடாயில் சர்க்கரையுடன் தண்ணீரும் சேர்த்து பாகு வைக்கவும்.
  6. ஒரு கம்பிப் பதம் வரும்வரை பாகு காய்ச்சவும். ஒரு கம்பிப் பதம் என்றால் சர்க்கரை கரைந்து கொதிக்க ஆரம்பித்து சுமார் ஐந்து நிமிடங்கள் ஆனதும் ஒரு சொட்டு எடுத்து கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துப்பார்த்தால் ஒரு கம்பி போல இழுபடணும். அல்லது கரண்டியால் கலவையை எடுத்து விட்டால் அது இழை அறுபடாமல் எண்ணெய் விழுவது போல விழுந்தாலும் பாகு வந்ததை தெரிந்து கொள்ளலாம். இந்தப் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடலாம்.
  7. இந்தப் பாகில் முந்திரிப்பொடியை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து வாணலி ஓரங்களில் அப்படியே பரவலாக வைக்கவும். பாகு சரியான பதத்தில் இருந்தால் அரை மணி வரை அப்படியே வைக்கலாம். அல்லது கையால் தொட்டால் ஒட்டிக்கொள்ளாமல் வரும் வரை வைக்கலாம். பரத்திவிடுவதால் ஆறியும் போகும்.
  8. தொட்டால் ஒட்டாமல் இருந்தால் கையில் நெய் தடவிக்கொண்டு சப்பாத்தி மாவு பிசைவது போல அழுத்தமாக பிசைந்து வைக்கவும். என் Food Processor என் வேலையை மிச்சமாக்கியது. 🙂
  9. இப்படி மொழுமொழுவென்று உருட்டியதும் ஒரு திக் பிளாஸ்டிக் கவரில் வைத்து சப்பாத்தி குழவியால் அழுத்தித் தேய்க்கவும். விவரங்களுக்கு வீடியோவைப் பார்க்கலாம்.

 

 

  1. கவரை ஓரங்களில் வெட்டித் திறந்து விரும்பிய வடிவத்தில் துண்டு போடலாம்.
  2. நெய்யே வேண்டாத சுவையான முந்திரிக் கேக்/காஜு கத்லி தயார்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



7 thoughts on “Kaju Kathli”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *