Kuzhambu/Sambar Podi

Kuzhambu/Sambar Podi

Earlier when I used to write on Penmai, I had compiled an extensive list of all the Podi varieties we use in our day to day life. Some of them were my own family recipes and others were from various magazine and books, tried and tested by me as suitable for easy cooking. It was a massive hit and a lot of people loved it. So I have decided to start a segment here, on Foodsteps in the Kitchen, by the same name, ‘Podi Varieties’. You’ll find here individual posts, with improved recipes and videos to go along.

My first post for you is on Kuzhambu Podi, as we make in our house.

Skip to read in Tamil

 

 

Kuzhambu Podi

 

 

Ingredients:

½ kg –Coriander seeds

½ kg – Dried Red Chillies

1 ½ cups – Toor dal (Pigeon peas)

1 cup – Split Channa Dal (Bengal Gram)

1 cup – Black Pepper

½ cup – Fenugreek Seeds

A handful ofCumin seeds

100 gm – Dried Turmeric sticks

Method:

Sun dry all the above Ingredients.  Drying in hot sun ensures a fine powder.  Grinding them in a Flour mill is the best method.

If you do not have the choice of Sun drying, then Microwave them for a minute and grind.  Or toast them in a pan separately before grinding.

The measurement given above will yield a huge quantity of Podi which will last long for a small family. I would suggest either two or three families share this Podi or halfen all the above ingredients to prepare in lesser quantity.

If you prefer fresh Kuzhambu podi, you can use the measurements given below and grind at home.  Slightly toast them in hot pan or microwave them before grinding.  Use a soup spoon or a Ladle you use at home for measuring.

 

Ingredients:

2 ½ ladles – Coriander seeds

1 ½ ladles – Toor dal

1 ladle – Channa dal

1 ladle – Black Pepper

½ ladle – Fenugreek seeds

1 tsp – cumin seeds

14 – Red chillies (or to taste)

2 tsp – Turmeric powder (while grinding)

Note: 

Our Kuzhambu podi will not be spicy. So, take chillies as per your standard.

Method:

Toast and grind all the above ingredients in a Mixie till fine powder.

Sieve and grind till the end.

Store in an airtight jar.

This powder can be used to prepare Paruppu Kuzhambu as well as Puli Kuzhambu.

Tips:

Storing the Podi varieties in Freezer retains its freshness for a longer time.  Keep a small amount in a  container for everyday use.

 

Sambar Podi (First Method):

Ingredients:

¼ kg (250gm) – Red chillies

¼ kg ( 250gms) – Coriander Seeds

50 gms –  Black Gram / Urad Dal

200 gms – Bengal Gram / Channa Dal

200 gms – Toor Dal

50 gms – Black Pepper

50 gms – Dried Turmeric Sticks

25gms  – Fenugreek seeds

Method:

Sun Dry all the above mentioned ingredients for two days.  Or toast them slightly in a hot pan.

Break the Turmeric pieces into small pieces.

Grind to a fine powder.

Note:

50 gms of Lentils measure to ¼ cup and 200 gms to 1 cup.  To learn more about conversions, see here.

 

Sambar Podi (Second Method):

Ingredients:

4 cups – Coriander Seeds

1 cup – Dried Red Chillies

1 cup – Bengal Gram (Channa dal)

½ cup – Toor dal

1/4 cup – Black Pepper

¼ cup – Fenugreek seeds

100 gms – Dried Turmeric sticks

Method:

Sun Dry all the ingredients for two consecutive days and grind to a fine Powder.  Drying under hot Sun protects the Sambar Podi from spoiling.

Please note that the Urad dal added in the first method is missing in the second method.  Adding Urad dal thickens the Sambar.

To know about the measurements Please refer here.

 

Sambar Podi (Third Method):

The next recipe is from the famous Culinary Expert ‘Menu Rani’ Chellam’s Book.  It is easy to prepare.

 

Ingredients:

6 cups – Coriander Seeds

1 cup – Bengal Gram (channa dal)

1 cup – Toor Dal

A handful of Fenugreek seeds

2 pieces – Dried Turmeric Sticks

¼ cup – Black Pepper

½ cup – Cumin seeds

Method:

Dry everything under hot Sun and grind to a fine powder.

Or toast them separately in a pan before grinding.

Adding dried Curry leaves while grinding increases the aroma of the powder.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



 

குழம்பு /சாம்பார் பொடி:

 

சில வருடங்களுக்கு முன் பெண்மை என்ற பிரபல தளத்தில் ‘பொடிவகைகள்’ என்று ஒரு த்ரெட் போட்டிருந்தேன்.  எங்கள் வீட்டில் உபயோகிக்கும் பொடி வகைகள், நான் பல புத்தகங்களில் படித்தவை, வீட்டில் செய்து முயற்சித்தவை என்று எல்லாம் சேர்ந்தது அது.  அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அதை இங்கே நம் ப்ளாகிலும் அப்பப்போ தருகிறேன்.  கூடவே அதை உபயோகிக்கும் முறைகளும் தனியே தர நினைக்கிறேன். முதலில் எங்கள் வீட்டு குழம்பு பொடியில் ஆரம்பிக்கலாம்.

குழம்பு பொடி

 

 

தேவையான பொருட்கள்:

½ kg – தனியா

½ kg – வர மிளகாய்

1 ½ cups – துவரம்பருப்பு

1 cup – கடலைப்பருப்பு,

1 cup – மிளகு,

½ cup – வெந்தயம்,

கைப்பிடி அளவு – சீரகம்,

100 gm – விரளி மஞ்சள்

செய்முறை:

மேலே சொன்ன எல்லாவற்றையும் வெயிலில் உலர்த்தி மாவு மில்லில் கொடுத்து அரைக்கவும். குழம்பு பொடியை நிறைய அளவில் செய்யும்போது எப்போதும் மாவுமில்லில் கொடுத்து அரைத்துக் கொள்வது நம் வேலையை மிச்சப் படுத்தும். வெயிலில் உலர்த்தினால் நைசாக அரைபடும் என்பதோடு பல நாட்கள் பிரெஷ்ஷாகவே இருக்கும்.

வெயிலில் வைக்க வசதி இல்லையா? Microwave அடுப்பில் ஒரு நிமிடம் வைத்தாலே போதும், நன்றாக அரைபடும். இல்லைன்னா வெறும் வாணலியில் லேசா வறுத்து வைக்கலாம்.

பொதுவாக பல குடும்பங்கள் ரெண்டு அல்லது மூன்று பேரைக் கொண்ட சிறிய குடும்பமாகவே உள்ளதால் மேலே சொன்ன அளவுப்படி அரைப்பது நிறைய பொடி செய்வதாக முடியும். அதிக நாட்கள் வைத்தால் freshness கெடும் என்று கவலைப் படுபவர்கள்  அளவை அப்படியே halfen (பாதியாக்கி) செய்து அரைக்கவும்.  அல்லது அரைத்து ரெண்டு மூன்று குடும்பங்கள் ஷேர் செய்து கொள்ளலாம்.

வீட்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக பிரெஷ்ஷாக அரைத்துக்கொள்ள  விரும்பினால் ஒரு குழிக்கரண்டியை வைத்து  எல்லா சாமான்களையும் அளந்து கொள்ளலாம்.  அப்படி எடுப்பதாக இருந்தால் மேலே சொன்னபடி மைக்ரோவேவ் செய்தோ, வாணலியில் வறுத்தோ மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். இப்படி சிறிய அளவில் செய்பவர்களுக்கு இதோ இருக்கு சின்னதாக்கின அளவுகள்….

 

தேவையான பொருட்கள்:

ரெண்டரை கரண்டி தனியா,

ஒன்றரை கரண்டி துவரம்பருப்பு

ஒரு கரண்டி கடலைப்பருப்பு

ஒரு கரண்டி மிளகு

அரை கரண்டி வெந்தயம்,

ஒரு ஸ்பூன் சீரகம்

14 – சிவப்பு மிளகாய்கள் (அல்லது காரத்துக்குத் தேவையான மிளகாய்) எடுத்து வாணலியில் தனித்தனியாக லேசாக வறுத்து அல்லது வெயிலில் வைத்து எடுத்து மிக்சியில் பொடிக்கவும்.

மிக்சியில் அரைப்பதாக இருந்தால் விரளி மஞ்சளுக்கு பதில் தேவையான மஞ்சள் தூள் கலந்து வைக்கவும்.  இந்த முறையில் எடுப்பது சுலபமாய் இருக்கும்.

குறிப்பு:

இந்தப் பொடியை உபயோகித்து பருப்பு குழம்பும் செய்யலாம், புளிக்குழம்பும் செய்யலாம்.

இதுபோல செய்யும் பொடி வகைகளை freezer ல் ஸ்டோர் பண்ணி வைச்சுட்டு, ஒரு சின்ன portion ஐ மட்டும் வெளியில் வைக்கலாம்.  தீரத்தீர வெளியில் எடுப்பது பல நாட்கள் வரை பொடிகளின் freshness ஐ காக்கும்.

 

சாம்பார் பொடி – முதல் முறையில்:

தேவையான பொருட்கள்:

மிளகாய் – ¼ kg (250gm)

தனியா(கொத்தமல்லி விதை)  – ¼ kg ( 250gms)

உளுத்தம்பருப்பு – 50 gms

கடலைப்பருப்பு – 200 gms

துவரம்பருப்பு – 200 gms

மிளகு –50 gms

மஞ்சள் – 50 gms

வெந்தயம் – 25gms

செய்முறை:

மேலே சொன்ன பொருட்களை அந்த அளவுப்படி வாங்கி வெயிலில் ரெண்டு நாட்கள் வைத்து விரளி மஞ்சளை மட்டும் அம்மியில் ஒன்றிரண்டாக நசுக்கி மிஷினில் தந்து அரைத்து வைக்கவும்.

இங்கே கொடுத்த 50 gm என்பது கால் கப் அளவு, 200 gm என்பது ஒரு கப் அளவு என்று கொள்ளலாம். அல்லது cups and measures என்ற இந்தப் பக்கத்தில் அளவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

 

சாம்பார் பொடி (இரண்டாம் முறையில்):

தேவையான பொருட்கள்:

4 cups – தனியா

1 cup – மிளகாய்

1 cup – கடலைப்பருப்பு

½ cup – துவரம்பருப்பு

1/4 cup – மிளகு

¼ cup – வெந்தயம்

100 gms – விரளி மஞ்சள்

செய்முறை:

மேலே சொன்னமாதிரி எல்லாவற்றையும் வெயிலில் ரெண்டு நாள் காய வைத்து அரைக்கவும்.  இப்படி செய்வது shelf life ஐ அதிகரிப்பதோடு, பூச்சி வராமல் காக்கும்.

முதலில் சொன்ன வகையில் உளுத்தம்பருப்பு உண்டு.  அடுத்ததில் இல்லை.  உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் சாம்பார் கொஞ்சம் கெட்டியாக வரும்.

குறிப்பு:

இங்கே கொடுத்த 50 gm என்பது கால் கப் அளவு, 200 gm என்பது ஒரு கப் அளவு என்று கொள்ளலாம். அல்லது cups and measures என்ற இந்தப் பக்கத்தில் அளவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

 

சாம்பார் பொடி (மெனு ராணி செல்லம் ரெசிபி):

இதுவும் கண்டிப்பாக நன்றாக வரக்கூடிய அளவு.  எடுப்பதும் சுலபம்.

 

தேவையான பொருட்கள்:

தனியா – 6 கப்

கடலைப்பருப்பு  – 1 கப்

துவரம் பருப்பு  –  1 கப்

வெந்தயம் – ஒரு பிடி

விரளி மஞ்சள் – ரெண்டே ரெண்டு

மிளகு – கால் கப்

சீரகம் – அரை கப்

செய்முறை:

மேலே சொன்னவைகளை வெயிலில் உலர்த்தியோ, அல்லது வறட்டு வாணலியில் தனித்தனியாக கை பொறுக்கும் சூட்டில் வறுத்தோ அரைக்கலாம்.  விரும்பினால் வீட்டில் காய்ந்த கறிவேப்பிலை இருந்தால் ஒரு பிடி சேர்த்து அரைத்து வைக்கலாம்.  இது பொடிக்கு ஒரு மணத்தைக் கொடுக்கும்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



3 thoughts on “Kuzhambu/Sambar Podi”

  • அழகான விளக்கம்! சந்தேகம் கேட்க முடியாத படி எல்லா முறைகளும் உள்ளன!!

  • Enaku konjam konjama tha arachu vachuka pidikum..neenga sona method tha nanum used.but manjal poda maten. Rice two spoon add panuvom ka..
    Ungala mari clear cut ah explain pana yaralum mudiyathu.. super..

    • Thanks Sathya!

      It is true that we get bored to follow a single method always. I keep on changing my Sambar Podi Preparation every time. Normally rice is used to thicken the Kuzhambu, I personally feel corn flour a best thickening agent. so I skip rice while roasting. However, if I prepare instant Podi to be used for one day only, I add rice instead of cornflour. I will give that method sometime later.
      Thanks again for the feedback Sathya! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *