Leftover rice Pakoda

Leftover rice Pakoda

It’s true when they say that worry is the misuse of imagination. It is a part and parcel of everyone’s life.  Some worry to earn money, some others worry to safeguard it. Some worry to earn their bread while others, to enjoy it. Every woman, however, always worries about cooking the right portions to avoid leftovers.

Skip to read in Tamil

 

While the intention to minimize waste of precious food is noble, it really need not be as big a challenge. In this series, I’m going to show you creative yet simple ways of upcycling leftovers that would otherwise be boring or, much worse, end up in the trash.

The very first recipe, shows you ideas to reuse a food group that most often ends up as leftovers – carbs, especially rice. This Rice Pakoda made with leftover rice is a tasty and a very filling dish. It uses everyday ingredients that you would most likely have in the kitchen and is very easy to make.

Of course, you don’t have to make this only with leftover rice, freshly made rice would work just as well. This is a great fun snack that you can prepare in mere minutes that’ll come in handy to satisfy hungry and picky kids or even guests who might have shown up unexpectedly.

 

Ingredients:

1 large cup – cooked rice

½ cup – Coarsely ground roasted Groundnuts

2 to 4 tbsp – Gram Flour/ Besan

½ cup – thinly chopped cabbage

1 inch long – Ginger

1 or 2 – Green chillies

1 tsp – Garam Masala Powder

½ tsp – Asafetida

1 tsp – Fennel seeds (saunf)

1 tbsp – Ghee

1 tbsp each – chopped coriander leaves and curry leaves

Salt to taste

Oil to fry

Method:

  1. Chop the cabbage. Grind the ginger and chillies to a paste.
  2. Grind the roasted Groundnuts to a coarse powder.
  3. Take the rice in a wide bowl. Mash smoothly with your hands.
  4. Add the ground Groundnut powder, ginger chilli paste and all the spices mentioned in the list above except Oil to fry and mix well.

 

 

  1. Add the required amount of Gram Flour and mix till the dough resembles a chapatti dough. If you feel it sticky, rub your hands with oil and mix well.

 

 

  1. Heat oil in a pan. Once hot, reduce the flame to simmer position and take a small ball of the dough and drop uneven sized balls in hot oil.
  2. Let the pakodas fry in slow heat to get the centers cooked.
  3. These cooked rice pakodas stay crispy for a longer time.

Footnote:

  1. I, normally, add ground roasted groundnuts to all the pakodas for extra crispness. This can be replaced with 2 tablespoons of semolina (ravai) too. Add semolina too makes the pakodas crisp.
  2. Similarly, instead of Besan/Gram Flour, ground roasted gram flour can also be added.
  3. Similarly, cabbage can be replaced with chopped onions, in which case, add the salt to the chopped onions and wait for a minute. It will release water.  Mash everything together and add more Besan to get the required consistency.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



பழைய சாத பக்கோடா:

 

 

உலகத்தில ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதக் கவலை. சிலருக்கு பணம் வரலியேன்னு கவலை, சிலருக்கு பணத்தை எப்படி பத்திரமா பாத்துக்கறதுன்னு கவலை, சிலருக்கு சாப்பாடு கிடைக்கணுமேங்கறது கவலைன்னா இன்னும் சிலருக்கு சாப்பாடே ஒரு கவலை…, இப்படி கவலை லிஸ்ட் பெரிசு.  அதை விடுவோம்…நாம பெண்களுக்குன்னே உள்ள கவலையைப் பத்தி பார்ப்போம்.

சில பெண்களுக்கு சமைக்கணுமேன்னு ஒரு கவலைன்னா, சிலருக்கு வேண்டிய அளவு எப்படி சமைக்கறதுன்னு கவலை. சமைச்சது வீணாப் போனா அதை எப்படித் தூக்கிக் கொட்டறதுன்னு ஒரு கவலை.

இந்தக் கவலை நியாயமானதுதான்.  ஆனாலும் கவலைப் படும் அளவுக்கு  மோசமான விஷயமில்லைன்னு சொல்ல வரேன்.

எது மீந்தாலும் பரவாயில்லை…சாதம் மீந்தாத்தான் பெருங்கவலை..  சாதம் மீந்து போனா அதை ‘புளி சாதம்’, ‘எலுமிச்சை சாதம்’னு போர் அடிக்கும் அளவு மாற்றுவோம் அல்லது தூக்கிக் கொட்டுவோம். இது ரெண்டுக்கும் நடுவில் பல சுவையான மாற்றங்கள் செய்ய முடியும்.

இங்கே சாதம் மீந்து போனா என்ன பண்ணலாம்னு ஒரு category போட்டு என் அனுபவங்களை அப்பப்போ வந்து சொல்லறேன்….முதலில் பக்கோடா.

இதில் இன்னொரு வசதியும் இருக்கு.  சாதத்தில் பண்றதால் வயிறு நிரம்பும். இதை பழைய சாதத்தில்தான் பண்ணனும்னு ஒரு சட்டமும் இல்ல… திடீர்ன்னு விருந்தாளிகள் வந்தா லஞ்சுக்கு வடித்த சாதத்தில் ஒரு கப் எடுத்து (மற்ற ingredients ம் எப்போதும் வீட்டிலேயே இருப்பவைதான்) சுலபமாக பண்ணிடலாம்.  மழை நாட்களில் கூட வாய்க்கு ருசியா கேட்கும் பிள்ளைகளுக்கு பாஸ்ட்புட் போல திடீர் பகோடா பண்ணித்தரலாம்.

இனி ரெசிபி….

 

தேவையான பொருட்கள்:

1 large cup – சாதம்

½ cup – ஒன்றிரண்டாகப் பொடித்த வறுத்த வேர்க்கடலை

2 to 4 tbsp – கடலை மாவு

½ cup – பொடியாக நறுக்கின முட்டைகோஸ்

1 inch long – இஞ்சி

1 or 2 – பச்சை மிளகாய்

1 tsp – கரம் மசாலா பொடி

½ tsp – பெருங்காயம்

1 tsp – சோம்பு

1 tbsp – நெய்

1 tbsp each – நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை

சுவைக்கேற்ற உப்பு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

  1. முதலில் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி பச்சை மிளகாய்களையும் அரைத்துக் கொள்ளவும்.
  2. வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும்.
  3. சாதத்தை ஒரு அகல பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு கையால் நொறுங்கப் பிசையவேண்டும். மிக்சியில் போடாமல் கையால் பிசைவதே நல்ல texture கிடைக்க உதவும்.
  4. மசித்த சாதத்துடன் வேர்க்கடலைப் பொடி, இஞ்சி மிளகாய் பேஸ்ட் மற்றும் பொரிக்கும் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்துப் பிசையவேண்டும்.

 

 

  1. சாதத்தில் உள்ள ஈரப்பதம் போகும் அளவுக்கு மட்டுமே கடலை மாவைச் சேர்க்கலாம். சப்பாத்தி மாவு போல வரும் வரை கடலை மாவைச் சேர்க்கலாம். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு பிசைந்தால் ஒட்டாமல் வரும்.

 

 

  1. வாணலியில் எண்ணெய் வைத்துச் சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஒரு உருண்டை மாவை எடுத்து கையால் கிள்ளிக் கிள்ளிப் பக்கோடாக்களாகப் பொரிக்கவும்.
  2. சிம்மில் பொரித்தால் தான் வெளியில் கரகரவென்றும் உள்ளே வெந்தும் இருக்கும்.
  3. நிதானமாகப் பொரிக்கும் சாத பக்கோடாக்கள் வெகு நேரம் வரை கிரிஸ்பாகவே இருக்கும்.

நோட்:

  1. நான், எந்த வகை பக்கோடா செய்தாலும் அதில் எக்ஸ்ட்ரா கரகரப்புக்கு வறுத்த வேர்க்கடலையை பொடித்துச் சேர்ப்பேன். வேர்க்கடலை கைவசம் இல்லாதவர்கள்  2 டேபிள்ஸ்பூன் ரவையைச் சேர்த்தாலும் கரகரப்பாக வரும்.
  2. அதே போல, கடலை மாவுக்கு பதில் பொட்டுக்கடலை மாவும் சேர்க்கலாம்.
  3. எங்கள் வீட்டில் வெங்காயம் பூண்டு சாப்பிடுவது இல்லை என்பதால் கோஸ் சேர்த்தேன். விரும்பினால் வெங்காயம் நறுக்கிச் சேர்க்கலாம்.  அப்படி வெங்காயம் சேர்க்கும் பக்ஷத்தில் நறுக்கின வெங்காயத்துடன் தேவையான உப்பைச் சேர்த்து கொஞ்ச நேரம் வைத்தால் தண்ணி விட்டுக்கொள்ளும். பிறகு மசித்த சாதம் etc வை சேர்த்து தேவையான பதம் வருமளவு கடலை மாவும் சேர்த்து பக்கோடா பொரிக்கலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



4 thoughts on “Leftover rice Pakoda”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *