Mixed Lentil Sambar

Mixed Lentil Sambar

I found this recipe by the tamil TV personality, Revathi Shankaran, in a magazine a few months ago. It seems to suggest exactly what we would normally do to make a sambar. However, she had used three different types of lentils in the same dish! I thought it was an interesting new variation and safe to say, everyone in my family loved it!

Skip to read in Tamil

 

 

Ingredients:

½ cup – Thick Tamarind Extract

½ cup – Toor dal (Pigeon Peas)

1 heaped tablespoon each of Mung Dal and Whole Urad dal

1 tsp – Turmeric Powder

2 tsp – Sambar Powder (adjust to your taste)

1 – Green chilli

A handful each of – any vegetables cut into 2 inch long pieces. (carrots, beans, capsicum, drumsticks or any vegetable of your choice)

Salt to taste

Chopped coriander leaves for garnishing.

For seasoning:

2 tbsp – Gingelly oil

1 tsp – Mustard seeds

1 tsp – Fenugreek seeds

1 whole – Red chilli (optional)

1 small lump – Asafetida

1 sprig – Curry leaves

Method:

Soak and extract the tamarind juice and keep aside.

Wash all the three lentils once and pressure cook softly.  Mash well and keep aside.

Take a pan.  Add oil to it and season with the mustard seeds, fenugreek seeds, red chilli, asafetida and the curry leaves.

Add the green chilli and other cut vegetables to it and saute for 5 minutes in low heat. Add the turmeric powder and the sambar powder to it.

Add the tamarind extract along with the required amount of water and boil till the vegetables are soft to hand.

Add salt and the cooked and mashed lentils to it.

Boil till they incorporate well and garnish with the chopped coriander leaves.

Mixed Lentil sambar is ready to be used.  This can be eaten with rice or as a side to Idlis and dosas.

Note:

You can add onions and tomatoes if you wish.  I have used only Carrots and Turkey berries in this sambar.

The cooked urad dal helps to get a creamier sambar with a nice aroma.  I have added a few spoons of coconut milk at the end for a rich flavor.

Get instant updates by subscribing through email or Facebook! 



 

முப்பருப்பு சாம்பார்:

 

 

இது கொஞ்ச நாள் முன்பு திருமதி. ரேவதி சங்கரன் ஏதோ ஒரு பத்திரிகையில் கொடுத்த ரெசிபி.  எப்போதும் நாம் செய்யும் முறையில்தான் சொல்லியிருந்தாலும் மூன்று வித பருப்புகள் கலந்து செய்யப்படுவதாம். என் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்துவிட்டது.

 

 

தேவையான பொருட்கள்:

½ cup – கெட்டியான புளிக்கரைசல்

½ cup – துவரம் பருப்பு

1 heaped tablespoon each – பாசிப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு

1 tsp – மஞ்சள் தூள்

2 tsp – சாம்பார் பொடி (அல்லது காரத்துக்குத் தக்கது)

1 – பச்சை மிளகாய்

ஒரு கைப்பிடி – நீளவாட்டில் நறுக்கிய விருப்பமான காய்கறிகள் (காரட், பீன்ஸ், குடைமிளகாய், முருங்கைக்காய் அல்லது விருப்பமானவை.  நான் இங்கே காரட் மற்றும் பச்சை சுண்டைக்காய் மட்டும் உபயோகித்துள்ளேன்)

சுவைக்குத் தகுந்த உப்பு

நறுக்கிய கொத்தமல்லித் தழை.

தாளிக்கத் தேவையானவை:

2 tbsp – நல்லெண்ணெய்

1 tsp – கடுகு

1 tsp – வெந்தயம்

1 சிறு கட்டி – பெருங்காயம்

1– சிவப்பு மிளகாய் (விரும்பினால்)

கறிவேப்பிலை – 1 ஆர்க்கு.

செய்முறை:

புளியை ஊறவைத்து அரை கப் அளவு கெட்டிச் சாறு எடுத்து வைக்கவும்.

மூன்று பருப்புக்களையும் களைந்து குக்கரில் குழைய வேக விடவும். வெந்த பருப்புகளை மசித்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.

அடுத்து, பச்சை மிளகாயையும் மற்ற காய்களையும் சேர்த்து குறைந்த தீயில் ஐந்து நிமிடங்களுக்கு வதக்கவும்.

இதில் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டவும்.

காய்கறிகள் சாம்பார் பொடியில் கோட் ஆனதும் புளிக்கரைசலை சேர்த்து வேண்டிய அளவு தண்ணீருடன் கொதிக்க விடவும்.  காய்கறிகள் கைக்கு நசுங்கும் வரை கொதிக்கலாம்.

உப்பு சேர்த்து மசித்த பருப்புகளையும் சேர்க்கவும்.

பருப்பு புளிக்கரைசல் எல்லாம் நன்றாக சேரும்வரை கொதித்தால் போதும்.  நறுக்கி வைத்த கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும்.

முப்பருப்பு சாம்பார் ரெடி.  இது சாதத்துடனும், இட்லி தோசையுடனும் சாப்பிட ஏற்றது.

நாளைக்கு வீட்டில் முப்பருப்பு சாம்பார்தானே?

நோட்:

இதில் விரும்புபவர்கள் தக்காளி மற்றும் வெங்காயம் சேர்க்கலாம். உளுத்தம்பருப்பை வேக விட்டுச் செய்வதால் நல்ல மணமும் மாவு கரைத்துவிடாமலேயே கிரீம் போல சாம்பார் கிடைக்கும்.  நான் சுவைக்காக கடைசியில் ரெண்டு ஸ்பூன் தேங்காய் பால் சேர்த்தேன்.

Get instant updates by subscribing through email or Facebook! 



4 thoughts on “Mixed Lentil Sambar”

Leave a Reply to அனாமிகா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *