Mixed Vegetable Pickle

Mixed Vegetable Pickle

‘Pickles are good for Health’ – Did you know?

Yes, you read it right! Pickles are actually good for our health. We all know very well how pickles tickle our tastebuds (Hahaha). Turns out, this is what makes them healthy. They help us secrete more saliva, thus make our mouths water (literally!), chew our food well, enable quick digestion and most of all, make us thoroughly enjoy our food.

However, as with almost all food, too much will end up being unhealthy and moderation is the key!

Skip to read in Tamil

For those of you who are a little more conscious of what goes on your plate, here is a pickle made with very little oil and a lot of mixed vegetables. It only requires about 2 tablespoons of oil to make and stays good on the shelf for about 10 days. And because they are so simple to make, it can be prepared freshly whenever you fancy, with vegetables that you have at home. Moreover, give this pressure cooking method a try and see just how easy the prep gets!

 

 

Ingredients:

List 1:

¼ cup each – Cabbage, Cauliflower, Carrots and Beans.

1 inch long – Young Ginger

2 – Green Chillies (optional)

3 – Lemons

1 tbsp – Gingelly oil

½ cup – water

List 2:

For Pickle Spice Powder:

2 tsp – Coarse Salt

2 tsp – Red chilli Powder

2 tsp – Turmeric powder

1 tsp – Asafetida

1 tsp – Toasted and Ground Fenugreek powder

1 tsp – sugar

1 tsp – Toasted Mustard seeds

List 3:

For seasoning:

1 tbsp – Gingelly oil

1 tsp – Mustard seeds

 

 

Method:

Wash the vegetables thoroughly, drain and dry on a Paper towel. Cauliflower can be dipped into hot water for a while and drained.

  1. Dice the vegetables into small pieces and the cauliflower into small florets. Chop the Ginger and Green chillies. Green chillies are optional, you can leave it if you do not want it too spicy.
  2. Assemble everything in a bowl.
  3. Squeeze the lemon over it and set aside.
  4. Grind the spices given under List 2 into a fine powder. Dry roast the fenugreek seeds and mustard in a pan and add while grinding.
  5. Season the mustard seeds in 1 tablespoon oil and keep aside.
  6. Take a small cooker, add ½ cup water and 1 tablespoon of oil to it.
  7. Add the ground pickle spice powder to it.
  8. Cook for a whistle. Release the pressure immediately.
  9. Add the cut vegetables marinated in lemon juice to it and stir well.
  10. Finally add the seasonings on top and mix well.

Vegetable pickle is ready.  Let this sit on the counter for a day and start using from the next day. This less oil, quick mixed vegetable pickles stays good for about 10 days.

Footnote:

Vegetables like bitterguord, turnips, raddish etc can also be added.  You can add raw mangoes too if available.  Add a few spoons of any leftover pickle for a variation.

If you do not prefer the pressure cooking method, then season the mustard seeds in 2 tablespoon of oil, add the spice powder to it along with the water.  Bring it to a boil, switch off and cool before adding to the marinated vegetables.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



 

குறைந்த எண்ணையில் காய்கறி ஊறுகாய்:

 

‘ஊறுகாய் சாப்பிடுவது நல்லது’ – தெரியுமா?

டாக்டர்கள் தடா போடாதவரை உணவில் கொஞ்சம் ஊறுகாய் சேர்ப்பது நம் ஜீரண உறுப்புகளுக்கு உதவிதான் செய்யுமாம்.  ஊறுகாய் நம் வாயில் உமிழ்நீரை அதிகப்படுத்தி உணவை மென்று ருசிச்சு சாப்பிட வைக்குமாம்…எங்கேயோ படிச்சேன்….நிஜமான்னு தெரியாது…சரி, விஷயத்துக்கு வரேன்….

இது அதிக எண்ணெய் தேவைப்படாத, எல்லா சீசனிலும் செய்யக்கூடிய, கொழுப்பு குறைந்த ஒரு ஊறுகாய். வீட்டில் இருக்கும் காய்கறிகளை வைத்தே செய்துவிடலாம்.  பத்து நாட்கள் வரை கெடாமலிருக்கும் இதை தேவைப்படும் போதெல்லாம் பிரெஷாகவே செய்து சாப்பிடலாம்.

ஊறுகாயில் அதிக உப்பு, கொழுப்பு இருப்பதால் Blood Pressure, Cholestrol போன்றவை இருப்பவர்கள், ஆசை இருந்தாலும் ஊறுகாயை கண்ணால் கூட பார்க்க மாட்டார்கள்.  அவர்களுக்கும் ஏற்றது இது. நான் சொல்லியுள்ள படி பிரஷர் குக்கரில் சுலபமாக செய்து பாருங்களேன்.

 

தேவையான பொருட்கள்:

List 1:

¼ cup each – முட்டை கோஸ், காலிபிளவர், காரட், பீன்ஸ்

1 இன்ச் – இளம் இஞ்சி

2 – பச்சை மிளகாய் (விரும்பினால்)

3 – எலுமிச்சம்பழம்

1 tbsp – நல்லெண்ணெய்

½ cup – தண்ணீர்

List 2: 

ஊறுகாய் பொடி செய்ய:

2 tsp – கல்லுப்பு

2 tsp – மிளகாய் பொடி

2 tsp – மஞ்சள் பொடி

1 tsp – பெருங்காயம்

1 tsp – வறுத்து அரைத்த வெந்தயப் பொடி

1 tsp – சர்க்கரை

1 tsp – வறுத்த கடுகு

List 3:

தாளிக்கத் தேவையானவை:

1 tbsp – நல்லெண்ணெய்

1 tsp – கடுகு

 

செய்முறை:

  1. காய்கறிகளை நன்றாக அலம்பிவிட்டு ஒரு துணியில் அல்லது கிச்சன் பேப்பரில் ஈரம் போக காய விடவும். காலிபிளவரை மட்டும் வெந்நீரில் ரெண்டு நிமிடம் போட்டு எடுத்து சின்னச் சின்ன பூக்களாய்ப் பிய்க்கலாம்.
  2. ஈரம் போக ஆறியதும் காய்களை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். (இங்கே நான் எல்லா காயையும் கால் கப் அளவுக்கு வரும் வரை எடுத்துக்கொண்டேன்).  இஞ்சி, பச்சை மிளகாயை மட்டும் மிகவும் பொடியாக நறுக்கவேண்டும்.  குழந்தைகள், காரம் அதிகம் வேண்டாதவர்கள் மிளகாயை விட்டு விடலாம்.
  3. நறுக்கிய எல்லாவற்றையும் ஒரு பௌலில் கொட்டி மேலே எலுமிச்சம் பழத்தை பிழிந்து தனியாக வைக்கவும். இது ஊறுவதற்குள் ஊறுகாய் பொடியைத் தயார் செய்து கொள்ளலாம்.
  4. ஊறுகாய் பொடி தயார் செய்ய List 2ல் கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும். கடுகு மற்றும் வெந்தயத்தை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து அரைக்கவேண்டும்.
  5. ஒரு ஸ்பூன் எண்ணையில் List 3ல் கொடுத்தபடி கடுகை தாளித்து ஆற வைக்கவும்.
  6. ஒரு குக்கரில் அரை கப் தண்ணீர் விட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் ஊறுகாய் பொடியை சேர்த்து ஒரு விசில் வரும்வரை அடுப்பில் வைத்து அணைத்துவிடவும்.
  7. விசில் வந்ததும் உடனே பிரஷரை ரிலீஸ் செய்துவிட்டு காய்கறி கலவையைக் கலந்து விடவும்.
  8. மேலே தாளித்து வைத்த கடுகை சேர்த்துவிட்டு நன்றாகக் கலந்துவிட்டால் ஊறுகாய் ரெடி.

இந்த ஊறுகாய் ஒரு நாள் ஊறினால் போதும், மறுநாள் முதல் உபயோகிக்கலாம்.  இந்தக் குறைந்த எண்ணெய் ஊறுகாய் பத்து நாட்கள் வரை நன்றாகவே இருக்கும். 

Footnote:

பாகற்காய், நூல்கோல், முள்ளங்கி, கிடைத்தால் மாங்காய் என்று எதையும் சேர்க்கலாம்.  அல்லது வீட்டில் பழைய ஊறுகாய் இருந்தால் ரெண்டு ஸ்பூன் எடுத்துக் கலந்துவிட்டாலும் நன்றாக இருக்கும்.

பிரஷர் குக்கிங் செய்வது வேண்டாம் என்பவர்கள் ஒரு வாணலியில் ரெண்டு ஸ்பூன் எண்ணெய் வைத்து கடுகு தாளித்து, ஊறுகாய் பொடி மற்றும் தண்ணீரை சேர்த்து நன்றாகக் கொதித்ததும் எலுமிச்சை சாற்றில் ஊறிக்கொண்டிருக்கும் காய்கறிகளின் மேல் சேர்த்து கிளறி விடலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



11 thoughts on “Mixed Vegetable Pickle”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *