Orange Peel Pachadi

Orange Peel Pachadi

“Oh no! the same pachadi again?“

It is easy to tire of the same recipes again and again.

Here is a fun twist on the humble Pachadi.  It has everything you want – a little bit of tanginess, a little dash of sweetness and the sharp hint of heat. And this easy recipe will come handy when the orange season kicks in.

Skip to read in Tamil

 

 

Ingredients:

¼ cup – Orange peels (finely chopped)

1 tbsp – Tamarind Paste (or ½ cup tamarind extract)

½ tsp – Turmeric powder

¼ cup – Water (if using tamarind extract, leave this water)

2 tbsp – Grated Jaggery

Salt to taste

For seasoning:

1 tbsp – Cooking Oil

½ tsp each – Mustard seeds, Urad dal and Channa dal

½ tsp – Asafetida

1 – Green chilli

1 – Dried Red chilli

1 sprig – Curry Leaves

Method:

  1. Chop the Orange peels into small pieces. Nagpur orange or Kamala orange is preferred.  I have used Mandarin Oranges here.
  2. Use Tamarind Paste or soak a lemon sized ball of tamarind and extract half a cup of thick juice.
  3. Add oil to a pan.
  4. Season with mustard seeds, urad and channa dal. Add the Asafetida powder and the chillies (cut the chillies into small pieces or slit and add).
  5. Finally add the curry leaves.
  6. Now add the chopped orange peels and the turmeric powder and saute for about 2 to 3 minutes.
  7. Add the Tamarind paste and the water to it. Let it boil for about 5 minutes in simmer position.
  8. Once it thickens a little, add the salt and the grated jaggery to it and stir till the jaggery dissolves completely in it.
  9. Spicy, sour and sweet Pachadi is ready.
  10. This is an excellent side for Curd rice.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



 

ஆரஞ்சு தோல் பச்சடி:

 

 

எத்தனை நாளைக்குத்தான் ஒரே மாதிரி பச்சடியை சாப்பிடுவது? ஒரு வித்தியாசத்துக்கு இந்தப் பச்சடியையும்தான் பண்ணிப் பார்க்கலாமே? இது ஆரஞ்சு பழ சீசனில்தான் செய்யவும் முடியும்.  புளிப்பு, இனிப்பு, உரைப்பு என்று மூன்றும் கலந்த பச்சடி இது.  செய்வதும் சுலபம்.

 

 

தேவையான பொருட்கள்:

¼ cup – பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோல்

1 tbsp – புளி பேஸ்ட் (அல்லது ½ cup புளித்தண்ணீர்)

½ tsp – மஞ்சள் பொடி

¼ cup – தண்ணீர் (புளியைக் கரைத்து செய்வதானால் இந்தத் தண்ணீரை விட்டுவிடலாம்)

2 tbsp – துருவின வெல்லம்

சுவைக்கு வேண்டிய உப்பு

தாளிக்கத் தேவையானவை:

1 tbsp – ஏதாவது ஒரு சமையல் எண்ணெய்

½ tsp each – கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு

½ tsp – பெருங்காயம்

1 – பச்சை மிளகாய்

1 – சிவப்பு மிளகாய்

1 ஆர்க்கு – கறிவேப்பிலை

செய்முறை:

  1. ஆரஞ்சு தோலியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நாக்பூர் ஆரஞ்சு அல்லது கமலா ஆரஞ்சு என்றால் நல்லது. சாத்துக்குடி தோல் சரிவராது. நான் உபயோகித்தது குட்டி குட்டியான மேன்டரின் ஆரஞ்சு.
  2. புளி பேஸ்ட் இருந்தால் உபயோகிக்கலாம். இல்லைன்னா நெல்லியளவு புளியை ஊறவைத்து அரை கப் அளவு கரைத்து வைக்கலாம்.
  3. இனி, வாணலியில் எண்ணெய் சேர்க்கவும்.
  4. அதில் தாளிப்பதற்கு என்று கொடுத்துள்ள கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பை சேர்க்கவும். கடுகு வெடித்ததும் பருப்புகளை சேர்த்து பெருங்காயம் மற்றும் மிளகாய்களை சேர்க்கவும். (பச்சை மிளகாயை நறுக்கியோ, நீள வாக்கில் ஸ்லிட் செய்தோ போடலாம்).
  5. கடைசியில் கறிவேப்பிலையையும் சேர்த்து நறுக்கி வைத்த ஆரஞ்சு தோலிகளை சேர்க்கவும். மஞ்சள் தூளையும் போட்டு ரெண்டு மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும்.
  6. புளி பேஸ்ட் + தண்ணீர் அல்லது கரைத்து வைத்த புளியைக் கலந்து சிம்மில் ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
  7. கொஞ்சம் கெட்டிப்பட்டதும் சுவைக்கு வேண்டிய உப்பு, துருவின வெல்லம் இரண்டையும் சேர்த்து வெல்லம் கரையும்வரை கொதிக்க விடவும்.
  8. புளிப்பு, காரம், இனிப்பு எல்லாம் கலந்த ஆரஞ்சு தோல் பச்சடி தயார். தயிர் சாதத்துக்கு ஏற்ற பச்சடி இது.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



6 thoughts on “Orange Peel Pachadi”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *