Sundakkai Puli kuzhambu

Sundakkai Puli kuzhambu

This is a traditional Kuzhambu prepared on New moon days (Amavasya day).  I have used Raw Turkey Berries in this Kuzhambu.  It is rich in Vitamin C.  If given to children regularly, they will have resistance against cold.  It strengthens the bones and is also good for Diabetic People.  Bitterness is the only problem which will vanish when cooked.

You can replace it with other vegetables mentioned in the Footnote.

Skip to read in Tamil

 

Ingredients:

1 cup – Thick Tamarind Extract

3 to 4 tsp – Homemade Kuzhambu podi (look for the recipe here)

1 tsp (heaped) – Coarse salt

½ tsp – Turmeric Powder

1 tsp – Cumin seeds

A small lump – Asafetida (soaked in water) or a pinch of Asafetida Powder.

For seasoning:

2 tbsp – Gingelly oil

1 tsp – Mustard seeds

1 or 2 – Dried Red Chillies

1 sprig – Curry leaves

1 teaspoon – Gram Flour or Rice Flour or Corn Flour (to thicken the Kuzhambu) optional

1 cup (or as per need) – water

Method:

  1. Soak a small ball of Tamarind in water and extract the juice from it. Let the extract be 1 cup in quantity.  If you are using Tamarind Paste, mix the paste in a cup of water.
  2. Pound the Raw Turkey Berries in a Morter and Pestle and wash under water till the seeds are washed away. You can replace this with Sun dried Turkey Berries.
  3. In a pan, add 1 tablespoon of Gingelly oil and season with mustard seeds and chillies and add the raw Turkey berries to it. Saute till the berries turn pale in color.  Finally add the curry leaves.  (in case of using dried turkey berries, it is enough if they get roasted well)
  4. Next, add the turmeric powder and a generous spoon of the Kuzhambu podi to it and saute for a while. (You can change the quantity of the Podi according to your taste.)
  5. Then add the tamarind extract little at a time and bring it to a boil. Doing so, will help eliminate the raw smell of the tamarind quickly.  Once it starts thickening add more water to your requirement.
  6. Now add the raw cumin seeds and the asafetida water. (It is my way to add raw cumin seeds for best aroma.  Similarly since the Asafetida powder nowadays has more maida content in it. I avoid using in powder form as far as possible.  Soak a small lump of Asafetida in a small cup of water and this water can be added to all the dishes.)
  7. Add the salt and allow it to boil for a few minutes.
  8. The aroma itself indicates the time to remove from stove. If you want the Kuzhambu in thin consistency, simply switch off the stove and add the remaining 1 spoon of oil to it.  if you want it in thick consistency, add the flour slurry before  switching off.  I always use Corn Flour to thicken the Kuzhambu.  However this step is optional.  Boiling for more time too thickens the Kuzhambu on its own.

 

 

Note:

You can substitute vegetables like White Pumpkin, Yellow Pumpkin, Okra or Ladies’ finger, Brinjal,Sweet Potato, Baby Yam, Drumstick, Methi leaves or Papads for Turkey Berries.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



 

சுண்டைக்காய் புளிக்குழம்பு:

 

 

அமாவாசை நாளில் செய்யக்கூடிய சுண்டைக்காய் குழம்பை வீட்டில் செய்த குழம்பு பொடி உபயோகித்து இங்கே செய்திருக்கிறேன்.

சுண்டைக்காய் என்பது விட்டமின் C நிறைந்த ஒன்று.  குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்துவந்தால் சளித் தொல்லை இருக்காது.  எலும்புக்கும் உறுதி தரும்.  நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து.  கசப்பு மட்டும்தான் பிரச்சனையாய் தெரியும், அதுவும் சமைக்கும்போது மாயமாய் போயிடும்.

‘சுண்டைக்காயை யார் சாப்பிடுவார்?’ என்பவர்கள் கீழே நோட்டில் கொடுத்துள்ளபடி மற்ற காய்களை உபயோகித்துக் கொள்ளலாம்.

 

தேவையான பொருட்கள்:

1 cup – கெட்டியாக கரைத்த புளிக்கரைசல்

3 to 4 tsp – குழம்பு பொடி (குழம்பு பொடி செய்முறைக்கு இங்கே போகவும்)

1 tsp (heaped) – உப்பு

½ tsp – மஞ்சள் தூள்

1 tsp – சீரகம்

ஒரு சிறு கட்டி  – பெருங்காயம் கரைத்தது அல்லது ஒரு சிட்டிகை பெருங்காய பொடி

தாளிக்க:

2 tbsp – நல்லெண்ணெய்

1 tsp – கடுகு

1 or 2 – மிளகாய்

1 ஆர்க்கு – கறிவேப்பிலை

கரைத்துவிட 1 spoon கடலை மாவு அல்லது அரிசி மாவு அல்லது சோளமாவு.

1 cup (அல்லது தேவையான அளவு) – தண்ணீர்

செய்முறை:

  1. முதலில் ஒரு உருண்டை புளியை ஊறவைத்து கெட்டியாகக் கரைத்து ஒரு கப் அளவு எடுக்கவும். புளி பேஸ்ட் உபயோகிப்பது என்றால் ஒரு கப் அளவிற்கு கரைத்து வைத்துக்கொள்ளலாம்.
  2. பச்சை சுண்டைக்காயை சின்ன அம்மியில் வைத்து இடித்தால் இரண்டாகப் பிளக்கும். அதை குழாயடியில் காட்டி உள்ளே உள்ள விதைகள் முழுக்க நீங்கும்படி அலசவேண்டும்.  சுண்டைக்காய் கிடைக்காவிட்டால் சுண்டைக்காய் வற்றலையும் சேர்க்கலாம்.
  3. ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து வெடித்ததும் மிளகாய், சுண்டைக்காய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். (சுண்டைக்காய் வற்றல் உபயோகிப்பது என்றால் சிவந்தால் போதும், பச்சை சுண்டைக்காய் என்றால் நிறம் வெளுத்துப் போகும்வரை வதக்கினால் நல்லது).
  4. அடுத்து மஞ்சள் பொடி சேர்த்து, கோபுரமாக ஒரு டேபிள்ஸ்பூன் குழம்பு பொடி (அல்லது உங்கள் சுவைக்கு வேண்டிய அளவு) சேர்த்து வதக்கவும். இதில் கரைத்து வைத்த புளியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொதிக்க விடவும். கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பதால் விரைவில் கொதித்துப் போகும்.  ஒரு கப் புளிக்கரைசலும் சேர்த்த பின் வேண்டிய அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.  கொதிக்கும்போது பச்சை சீரகமும் பெருங்காய நீரையும் சேர்க்கலாம்.

(சீரகத்தை பச்சையாக சேர்ப்பது என் வழக்கம்.  இது விரும்பாவிட்டால் விட்டு விடலாம். அதே போல கட்டிப் பெருங்காயத்தை ஒரு சின்ன கப்பில் தண்ணீரில் போட்டு வைத்துக்கொண்டால் குழம்பு ரசத்தில் கொதிக்கும்போது ஊற்றலாம்.  பெருங்காயப் பொடியை விட பச்சையாக கட்டி பெருங்காயம் சேர்த்து குழம்பு செய்தால் வாசனை நன்றாக இருக்கும். பொடிதான் பெஸ்ட் என்று நினைத்தால் பொடியை கொதித்து இறக்கும் முன் சேர்த்துவிடுங்கள்)

  1. அடுத்ததாக சுவைக்கு வேண்டிய அளவு உப்பையும் சேர்த்துவிடலாம். வாசனையிலேயே குழம்பு தயார் என்று காட்டிக் கொடுத்துவிடும். அப்போது விரும்பினால் கொஞ்சம் மாவு கரைத்து இறக்கலாம்.  மாவு கரைத்தால் வாசனை மட்டுப் படும் என்பது பெரும்பாலோர் கருத்து.  சிலருக்கு நீர்க்க குழம்பு வேண்டியிருக்கும், சிலருக்கு கெட்டியாக குழம்பு வேண்டியிருக்கும்.  நீர்க்க விரும்புபவர்கள் அப்படியே வைத்துக்கொள்ளலாம். கெட்டியாக வேண்டியவர்கள் சுண்டும்வரை கொதிக்க விடலாம். எந்த வாசனையும் இன்றி குழம்பை மிருதுவாக கெட்டிப்படுத்தும் என்பதால் corn flour கரைத்து விடுவதுதான் என் ஸ்டைல்.
  2. அடுப்பிலிருந்து இறக்கின பின் மீதியுள்ள ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை மேலே சேர்த்துவிட்டால் குழம்பு வாசனையாக எண்ணெய் மினுமினுக்க இருக்கும்.

 

 

நோட்:

சுண்டைக்காய்க்கு பதில் வெள்ளை பூசணி, பரங்கிக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, முருங்கைக்காய், வெந்தயக் கீரை போன்ற எந்த காய்களையும் உபயோகிக்கலாம்.  எதுவுமில்லையா, அப்பளத்தைக் கூட உபயோகித்து இந்தக் குழம்பை செய்துவிடலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



2 thoughts on “Sundakkai Puli kuzhambu”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *