Boondi Urundai/Boondi Paniyarakka

Boondi Urundai/Boondi Paniyarakka

What’s the first thing that comes to your mind when I say Karthigai? Pori Urundai, right?

But that’s very common… I thought of making something a different this year. This is a traditional recipe too. Let’s see how to make this easy thing.

I have shown you how to make paper cones to make them as Paruppu Thengai (or in conical shape) in the video below.

Read in Tamil

 

Ingredients:

2 cups – Gram flour

2 tbsp – Rice flour

½ tsp – Salt

Oil to fry

2 cups – Grated Jaggery (approximately)

½ tsp – Cardamom Powder

2 to 3 tsp – Melted Ghee

Method:

  1. Sieve the Gram Flour and Rice Flour and mix together with salt.
  2. Heat oil in a wide pan. The oil should be more than half of the pan.  More oil ensures a crispy and golden colored boondis.  Likewise, heat of the oil should also be more unlike other savories.
  3. For making boondis, you need a flat, spotted ladle with a long handle called ‘Jarani’

Tips: Dip the ladle in oil before it gets heated up.  This step is done to grease the holes of the ladle to avoid the batter sticking to the holes and blocking the free flow.  If you dip the ladle in hot oil, then the batter will get cooked when you pass through it thereby blocking the holes. So, dip the ladle in oil before switching on the stove.

  1. Take two heaped spoons of the flour and add water. Mix to a Dosa batter consistency.
  2. Pour the batter on the spotted ladle over the oil and tap with another spoon or shake it up and down. You will see the batter drip through the holes into the hot oil.
  3. Fry till they are crisp and remove to an oil absorbent paper.
  4. Continue the same way with the remaining flour. Mixing the batter in small quantities ensure uniform color of the boondis till the end.
  5. Once the boondis are made, dissolve the grated jaggery in water and make a thick syrup. The jaggery quantity given here is approximate.  You can measure the boondis and take jaggery to half its quantity.
  6. For making syrup, add water to the grated jaggery and boil. Once the jaggery gets dissolved in water, strain for impurities.  Add the cardamom powder to it and boil again till you get a syrup of double thread consistency.  (If you add a little syrup into a cup of water, you should be able to gather it into a soft ball)
  7. Once this consistency is reached, switch off the stove and add the syrup to the boondis placed in a wider bowl/plate.
  8. Mix well using a fork or a spoon. Let it cool for a while.
  9. Apply some ghee on your hands and make into a ball or laddus. Or make a paper cone with Baking sheet lining and fill some sweet coated boondis into it and press well.  To prepare the cones and making Boondi Parupputhenga can be seen in the video
  10. Yummy, delicious Boondi urundai is ready for Karthigai.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



பூந்தி உருண்டை/பூந்தி பருப்புத்தேங்கா:

 

 

கார்த்திகை என்றால் பொரி உருண்டைதான் நினைவுக்கு வரும்.  அது எல்லாரும் பண்ணுவது, நாம் இந்த முறை வித்யாசமா பண்ணலாமே… இதுவும் ஒரு பாரம்பரிய உருண்டைதான்.  செய்முறையும் எளிதே.  உருண்டைகளாகப் பிடிப்பதோடு, பருப்புத்தேங்காய் கூட்டில் அடைத்து கோன் ஷேப்பில் செய்யும் சுலப முறையையும் வீடியோவில் செய்து காட்டியுள்ளேன்.

 

தேவையான பொருட்கள்:

2 cups – கடலை மாவு

2 tbsp – அரிசி மாவு

½ tsp – உப்பு

பொரிக்கத் தேவையான எண்ணெய்

2 cups – துருவின வெல்லம் (அல்லது தேவைக்கு ஏற்ப)

½ tsp – ஏலத்தூள்

2 to 3 tsp – உருக்கின நெய்.

செய்முறை:

  1. கடலை மாவு, அரிசி மாவு ரெண்டையும் நன்றாக சலித்து உப்பு சேர்த்துக் கலக்கவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றவும். வாணலியில் பாதிக்கு மேல் எண்ணெய் இருப்பது போலப் பார்த்துக்கொண்டால் பூந்திகள் சிவந்து போகாமல் தங்க நிறத்தில் தகதகக்கும். அதே போல எப்போதும் பூந்தி சலிக்கும்போது எண்ணெய் மிகவும் சூடாக இருக்க வேண்டியதும் முக்கியம்.
  3. பூந்தி செய்ய ஜாரணி எனப்படும் ஓட்டைக் கரண்டி தேவை. அதில் உள்ள ஓட்டைகள் வெளிப்புறமாக அருவப்பட்டிருந்தால் பூந்திகள் உருண்டையாக விழும்.

டிப்ஸ்: வாணலியில் எண்ணெயை ஊற்றியதும் ஜாரணியை அதில் ஒரு முறை அமிழ்த்தி எடுக்கவும்.  இது போலச் செய்யும்போது ஜாரணியின் கண்கள் எண்ணெய் பூசப்பட்டு, மாவை அதன் வழியே விடும்போது ஒட்டிக்கொண்டு ஓட்டைகள் அடைபடாமல் இருக்கும். ஆனால் சூடான எண்ணெயில் கரண்டியை அமிழ்த்திவிட்டால் அந்த சூட்டில் மாவும் வெந்து கண்கள் குருடாகி அடைபட்டுவிடும் என்பதால் அடுப்பை ஏற்றும் முன் எண்ணையில் dip பண்ணலாம்.

  1. முதலில் இரண்டு கரண்டி மாவை தனியாக எடுத்து தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
  2. ஜாரணியை எண்ணையின் மேலே பிடித்துக்கொண்டு கரைத்த மாவை ஊற்றி ஒரு ஸ்பூனால் தட்டவும் அல்லது ஜாரணியை மேலும் கீழுமாக ஆட்டவும். இது போலச் செய்வதால் பூந்திகள் உருண்டையாக வரும்.
  3. லட்டு போல சவுக்கென்று எடுக்காமல் கிறிஸ்ப்பாக ஆனதும் எண்ணையிலிருந்து எடுத்து வடிதட்டில் போடவும். அல்லது எண்ணெய் உறிஞ்சக் கூடிய பேப்பரில் போடவும்.
  4. மீதி மாவையும் இதே போல சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துக் கலந்து பூந்தி சலிக்கவும். இதுபோல கொஞ்ச கொஞ்சமாக மாவைக் கரைத்துக்கொள்வது கடைசி வரை பூந்திகள் ஒரே நிறத்தில் கிடைக்க வழிசெய்யும்.
  5. எல்லா மாவையும் பூந்தியாக சலித்துக்கொண்டபின் வெல்லத்தில் கெட்டிப்பாகு காய்ச்சவும். எப்போதும் சொல்வது போல இதற்கு வெல்லம் எல்லாம் கண்ணளவில் எடுத்துச் செய்வதுதான்.  பூந்தி உள்ள அளவை அளந்து கொண்டு அதில் பாதியளவு வெல்லம் தேவைப்படும் என்பதாகக் கொண்டு சிறிது சிறிதாக பாகு வைத்தால் பதார்த்தம் வீணாகாது.
  6. இனி பாகு செய்ய: வெல்லத்தை தண்ணீர் விட்டுக் கரைந்ததும் வடிகட்டி கல், குப்பைகள் நீக்கி மறுபடி அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். ஏலத்தூளையும் சேர்த்து விடலாம். ஒரு ஸ்பூன் பாகை தண்ணீரில் விட்டால் அது கைக்கு உருட்ட வரும் பதம் வரும் வரை காய்ச்சலாம்.
  7. உருட்டு பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பூந்திகளை ஒரு அகன்ற தட்டு அல்லது தாம்பாளத்தில் கொட்டி பாகை அதன் மேல் விட்டு சற்று ஆறும்வரை கரண்டியால் கலந்துவிடவும். (சூடாக இருக்கும்போது கையும் சுடும், உருண்டையும் நிற்காது.)
  8. பிறகு நெய் தடவிக்கொண்ட கைகளால் உருண்டை பிடித்தோ, பேப்பர் கோனுக்குள் நிரப்பியோ வைக்கவும். பேப்பர் கோன் செய்யும் முறையை கீழே வீடியோவில் பார்க்கலாம்.
  9. சுவையான பூந்தி பருப்புத்தேங்கா / உருண்டைகள் தயார்.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 



2 thoughts on “Boondi Urundai/Boondi Paniyarakka”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *