Fusion Pickle

Fusion Pickle

Every part of a lemon has got tremendous nutritional benefits. We normally squeeze the lemon and throw away the peels. But, studies say that lemon peels can prevent and even cure cancer, when taken regularly.

I found an interesting way to use lemon peels – Tangy and Spicy Lemon Pickle! I am going to pickle the lemon peels along with mango grates. If it’s not mango season or you can’t get mangoes where you live, don’t worry. We can transform any old mango pickle you might have, stored in the deep, dark, cold recesses of your fridge, to a new fusion pickle with the sourness of lemon and the tanginess of mangoes.

Read in Tamil

 

Ingredients:

2 to 3 – Lemon Peels

2 to 3 tbsp – Fresh Mango grates

or

2 to 3 tsp of Old Mango Pickle

1 tsp – Sugar

For Pickle Masala:

1 tsp – Mustard seeds

1 tsp – Fenugreek seeds

3 tsp – Red Chilli Powder (or to taste)

1 tsp –Turmeric Powder

½ tsp – Asafetida

3 tsp –Coarse salt

For seasoning:

2 to 3 tbsp – Gingelly or Mustard Oil

1 tsp – Mustard seeds

Preparation:

  1. Pressure cook the lemon peels when you cook rice. There is no need to add water while pressure cooking.  Simply place all the lemon peels you have on top of the rice and cook. Once cooked remove and cut into pieces. You can use fresh lemons even instead of peels alone or a mixture of both.  I have used the peels alone.
  2. Roast the mustard seeds and fenugreek seeds separately in a pan. Add all the other ingredients to it and grind into a powder.  Pickle masala is ready.
  3. Add the diced lemon peels to a mixie along with the Pickle Masala powder and grind to a fine paste. If you find it too dry, use few spoons of water while grinding.

Method:

  1. Add ¼ cup of water to a Pressure cooker.
  2. Add 2 tsp of Gingelly oil to it.
  3. Add the ground paste.
  4. Add a teaspoon of sugar. Sugar, here, acts as a natural preservative.
  5. Add freshly grated mangoes. I have added the old mango pickle in place of fresh mangoes.
  6. Close the lid and pressure cook for one whistle.
  7. Release the pressure using a spoon and open the cooker. You will find the pickle so hot inside.  If you are using freshly grated mangoes, go for 2 whistles.  As both the lemon peels and mango pickle I used are already cooked, I allowed only one whistle.
  8. Switch on the stove again and stir the pickle for a minute.
  9. In another stove, season with a spoon of mustard seeds in the remaining oil and add to the pickle.
  10. Switch off the stove and close with the lid for a few minutes to get everything mixed.
  11. Yummy lemon pickle with tanginess of mangoes is ready to eat.
  12. Cool completely before storing.
  13. This pickle stays good
  14. even when not refrigerated.

 

 

Note:

If you find the pickle too dry, go ahead to add more oil.  Similarly, you can check the taste and alter for more salt and spices.  If you wish to add more salt or spices, directly add them to the pickle and add some hot oil over it before mixing.

Add a generaous tablespoon of grated raw mango to each lemon used.  If you are using your old mango pickle, make it 1 teaspoon to each lemon used.  This pickle can be made freshly as and when needed as lemons are available throughout the year.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



எலுமிச்சை மாங்காய் ஊறுகாய்:

 

 

எலுமிச்சம் பழம் முழுக்கவே சத்து நிறைந்தது.  நாம பழத்தைப் பிழிந்ததும் தோலை தூக்கி எறிந்துவிடுவோம்.  ஆனா, ஆராய்ச்சிகள் என்ன சொல்லறதுன்னா, தினமும் சாப்பிட்டு வந்தா எலுமிச்சம் பழத் தோல் கேன்சரைக்கூட குணப்படுத்திடுமாம் அல்லது கேன்சர் வராம தடுத்திடுமாம்.

இதைப் படிச்சுட்டு எலுமிச்சம் பழத் தோலியை தூக்கிப்போட மனசு வருமா? அதான், இப்படி ஒரு புது ஊறுகாயை பண்ணிட்டேன். இது எலுமிச்சையின் புளிப்புடன் மாங்காயின் புளிப்பையும் கலந்து தரும் ஒரு Fusion ஊறுகாய்.  இதை மாங்காய் சீசனில் செய்யலாம், அல்லது வீட்டில் மாங்காய் ஊறுகாய் யாரும் சீந்தாமல் கிடந்தால் அதிலும் செய்யலாம்.  அல்லது நீங்கள் வாங்கின மாங்காயில் புளிப்பில்லாமல் பழுக்கத் தொடங்கியிருந்தாலும் இப்படி மாத்தலாம். ஒரு எலுமிச்சம் பழத்துக்கு ஒரு பெரிய ஸ்பூன் மாங்காய் துருவல் என்பது கணக்கு. மாங்காய் ஊறுகாய் என்றால் ஒரு எலுமிச்சம் பழத்துக்கு ஒரு சின்ன ஸ்பூன் மாங்காய் ஊறுகாய் என்று எடுக்கலாம். எலுமிச்சம் பழம் வருடம் முழுக்கக் கிடைக்கும் என்பதால் இதை அப்பப்போ பிரெஷ்ஷா கூட பண்ணிக்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

2 to 3 – எலுமிச்சம் பழத் தோல்கள்

2 to 3 tbsp – துருவின மாங்காய்

அல்லது

2 to 3 tsp – பழைய மாங்காய் ஊறுகாய்

1 tsp – சர்க்கரை

அரைத்துக்கொள்ள:

1 tsp – கடுகு

1 tsp – வெந்தயம்

3 tsp – மிளகாய்த்தூள் (அல்லது காரத்துக்கு வேண்டிய அளவு)

1 tsp – மஞ்சள்தூள்

½ tsp – பெருங்காயம்

3 tsp – கல்லுப்பு

தாளிக்க:

2 to 3 tbsp – நல்லெண்ணெய் அல்லது கடுகெண்ணெய்

1 tsp – கடுகு

தயாரிக்க வேண்டியவை:

  1. குக்கரில் சாதம் வைக்கும் போது மேலே ஒரு தட்டில் எலுமிச்சம் பழத் தோல்களையும் வைத்துவிட்டால் சாதம் ஆகும் நேரம் தோல்களும் வெந்துவிடும். தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.  இப்படி வெந்த தோல்களை சின்ன துண்டுகளாக செய்து வைக்கவும்.

(எலுமிச்சை தோல்கள் காய்ந்தது போல் இருந்தால் ஒரு பிரெஷ் பழத்தையும் கூடவே வைக்கலாம், அல்லது தோல்களுக்கு பதிலாகவும் பிரெஷ் பழத்தையே வைக்கலாம். இங்கே நான் தோல்களை மட்டுமே உபயோகித்துள்ளேன்.

  1. அடுத்து ஊறுகாய் பொடி / மசாலா தயாரிக்க கடுகையும் வெந்தயத்தையும் மட்டுமே வறட்டாக வறுத்து கொடுக்கப்பட்டுள்ள மற்றவைகளுடன் சேர்த்து அரைத்து தயார் செய்து வைக்கவும்.
  2. அரைத்த ஊறுகாய் பொடியுடன் நறுக்கிய எலுமிச்சை தோல்களையும் சேர்த்து மிக்சியில் அரைத்து வைக்கவும். அரைக்கும்போது சில ஸ்பூன் தண்ணீர் சேர்ப்பதும் நல்லது.

செய்முறை:

  1. குக்கரில் கால் கப் தண்ணீர் சேர்க்கவும்.
  2. அதில் ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
  3. அரைத்த விழுதைக் கலக்கவும்.
  4. ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இங்கே சர்க்கரை சேர்ப்பது ஒரு இயற்கை preservative ஆக செயல்படும்.
  5. பிரெஷ் மாங்காய் சேர்ப்பது என்றால் அடுத்ததாக சேர்க்கலாம். இங்கே நான் பழைய மாங்காய் ஊறுகாய் சேர்த்திருக்கிறேன்.
  6. குக்கரை மூடி ஒரு விசில் வரும்வரை வைக்கவும்.
  7. ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு நிமிடம் பொறுத்து ஒரு ஸ்பூனால் பிரஷரை ரிலீஸ் செய்யவும். பிரெஷ் மாங்காய் உபயோகித்தால் ரெண்டு விசில் வந்ததும் இப்படிச் செய்யலாம். குக்கரைத் திறந்ததும் உள்ளே கலவை கொதித்துக்கொண்டு இருக்கும். மிகவும் நிதானமாக செய்ய வேண்டியது அவசியம். (இங்கே நான் மாங்காய் ஊறுகாயை உபயோகித்திருப்பதால் ஒரு விசிலில் அடுப்பை நிறுத்திவிட்டேன்.
  8. குக்கரைத் திறந்ததும் மறுபடி அடுப்பை மூட்டி ஒரு நிமிடம் மட்டுமே ஊறுகாயைக் கிளறவும்.
  9. இதே சமயத்தில் இன்னொரு அடுப்பில் மீதியுள்ள எண்ணெயை சூடாக்கி அதில் கடுகைத் தாளித்துக் கொட்டவும்.
  10. தாளித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு குக்கரை ஒரு நிமிடம் மூடி வைத்தால் உள்ளே சரியான படி கலந்துகொள்ளும்.
  11. புளிப்பும் காரமுமான எழுமிச்ச மாங்காய் ஊறுகாய் தயார்.
  12. நன்றாக ஆரும்வரைக் காத்திருந்து ஊறுகாயை ஒரு பாட்டிலுக்கு மாற்றவும்.
  13. இந்த ஊறுகாய் பிரிட்ஜில் வைக்காமல் வெளியிலேயே நீண்ட நாள் நன்றாக இருக்கும்.

 

 

நோட்:

எண்ணெய் பத்தாது என்று தோன்றினால் மேலும் கொஞ்சம் எண்ணெய் சேர்க்கத் தயங்க வேண்டாம். அதேபோல உப்பு, காரம் வேண்டியிருந்தாலும் சேர்த்துக்கொள்ளலாம்.  அப்படிச் சேர்க்கும்போது நேரடியாக ஊறுகாயிலேயே சேர்த்துவிட்டு மேலே இன்னும் கொஞ்சம் எண்ணெயைக் காய்ச்சிக் கொட்டினால் போதும்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



2 thoughts on “Fusion Pickle”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *