Homemade Tamarind Paste

Homemade Tamarind Paste

Tamarind Paste is a time saving ingredient.  Instead of buying it from the Departmental stores, preparing it at home is healthier and affordable to everyone.

Read in Tamil

 

Ingredients:

½ kg – Tamarind

Water as required

Method:

  1. Remove the seeds and hard fibers from the Tamarind and soak in boiling hot water for about 3 hours.
  2. Pressure cook for 3 whistles. You can pressure cook it in a separator when you cook rice.
  3. Leave the cooked Tamarind undisturbed till completely cool.
  4. Once cool, add enough water, gently rub and loosen the tamarind pulp from its fibrous part. (Adding more water might make it too thin, so carefully add required water). A separate mixie jar is available in the market nowadays to extract the Tamarind Juice.  You can use it or use the God given extractor called hands!!! 🙂
  5. Remove the fibrous leftovers from the pulp, add water to it and mash well to get the remaining pulp from it.
  6. Drain the thick pulp through a metal strainer and bring it to a boil. (Though the tamarind is cooked well, the addition of water while extracting the pulp might lessen its shelf life. So, it is always better to boil it well before storing)
  7. Cool completely and store in a Glass bottle and refrigerate.
  8. As the Tamarind is pressure cooked well, the raw smell of the tamarind doesn’t even exist. Hence more time is saved while preparing Rasam and Kuzhambu.

 

 

Tips:

Freeze the pulp in Ice cube trays and store in Zip lock bags.  This will last even for 6 months when frozen.  You can measure the pulp while filling the ice cube slots.  Adding a cube to ¼ cup water makes a thick tamarind extract, and to ½ cup water, a semi thick extract and to 1 cup water, a thin extract.

You can use this Tamarind Paste to make Sambar, Rasam, Chutney varieties and for making Tamarind rice (Puliyodarai) etc.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



ஹோம்மேட் புளி பேஸ்ட்:

 

 

புளியை  தினமும் கரைத்து செய்வதைக்காட்டிலும் அந்தப் புளியை பேஸ்ட் போல செய்து வைத்துக்கொண்டால் காலை நேர அவசரத்துக்கு உதவியாய் இருக்கும். கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்வது ஆரோக்கியமானது என்பதோடு சிக்கனமானதும் கூட.

 

தேவையான பொருட்கள்:

1/2 kg – புளி

தேவைக்கேற்ப தண்ணீர்

செய்முறை:

  1. கால் கிலோ புளியை, கொட்டை. நார் போன்றவைகளை நீக்கிவிட்டு, முழுகும் வரை கொதி நீர் விட்டு குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு ஊற விடவும்.
  2. ஊறியதும் இதை cookerல் சாதம் வைக்கும் நேரம் வரை (3 விசில்) அல்லது சாதம் வைக்கும்போது மேலே இதையும் மூடி வைத்துவிடலாம்.
  3. இதையும் நன்றாக ஆறவிடுங்கள். ஆறியதும் வேண்டிய அளவு நீர் சேர்த்து கைகளால் கசக்கி சக்கையை நீக்கவும்.
  4. இப்போது வரும் மிக்சியில் புளியை அரைக்க தனியாக ஜார் தருகிறார்கள். அதில் இன்னொரு முறை கொட்டை இல்லையா என்று செக் செய்துகொண்டு அரைக்கலாம். அல்லது கையால் நன்றாக பிசைந்து (விரல்களுக்கு இது நல்லதொரு exercise) வடிகட்டிக்கொள்ளலாம். ரெண்டு முறை நீர் சேர்த்து கரைத்தால் போதும்.  அதிகம் நீர் சேர்த்தால் புளி ஓடிவிடும் அளவுக்கு நீர்த்துப் போகும்.
  5. கரைத்ததை மறுபடி அடுப்பில் வைத்து நன்றாகக் கிளறி ஆறவிட்டு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும். (புளியை வேக வைத்துவிட்டாலும், கரைக்கும்போது அதிகப்படி நீர் சேர்த்துள்ளதால் மறுபடி கொதிக்க விடுவது பல நாட்களுக்கு புளி பேஸ்ட் கெடாமல் காக்கும்).
  6. குக்கரிலும் வெந்து, நன்றாகக் கொதித்தும் விடுவதால், புளி வாசனை என்பது இருக்காது, அதனால் ரசம் குழம்பு செய்யும்போது அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமுமில்லை.
  7. இதை பிரிட்ஜில் தான் வைக்க வேண்டும்.

 

 

டிப்ஸ்:

இப்படி செய்த பேஸ்ட்டை ஒரு ஐஸ் க்யூப் ட்ரேயில் கொட்டி ஐஸ் க்யூப்ஸ் போல உறைய வைத்து ஜிப் லாக் பைகளில் எடுத்து வைக்கலாம்.  இதை பிரீசெரில் வைத்தால் ஆறு மாதங்கள் கூட நன்றாக இருக்கும்.

ஐஸ் க்யூப் ட்ரேயில் வைக்கும்போது ஒவ்வொரு குழியிலும் அளந்து ஊற்றினால், ஒரு க்யூப் இந்த அளவு என்று தெரியும்.  ஒரு க்யூபை கால் கப் தண்ணீரில் கலந்தால் திக் புளிக் கரைசல் என்றும், அரை கப் தண்ணீரில் கலந்தால் மிதமான அளவு புளிக்கரைசல் என்றும் ஒரு கப் தண்ணீரில் என்றால் ரசத்துக்கு போல நீர்க்க இருக்கும் கரைசல் என்றும் கொள்ளலாம்.

இதை குழம்பு, ரசம், துகையல், சில வகை சட்னி, புளிக்காய்ச்சல் போன்றவை செய்ய பயன்படுத்தலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



7 thoughts on “Homemade Tamarind Paste”

Leave a Reply to Karti Cancel reply

Your email address will not be published. Required fields are marked *