Manogaram

Manogaram

There is just two more weeks for the festival of Karthigai.  I think it’s time we start the preparations!

Nel Pori Urundai, Aval Pori Urundai and Manogaram are traditional sweets that are made without fail for Karthigai.  Manogaram is a sweet murukku dish made by crushing murukku into small pieces, adding jaggery syrup to it  and then shaping into balls (like laddu) or into conical shapes called Paruppu Thengai.  I have shown you how to make Paruppu Thengai in the video below.

Read in Tamil

 

Ingredients:

2 cups – Rice Flour

½ cup – Urad Flour

½ tsp – Salt

3 tbsp – Butter or Ghee or Hot oil

Oil to fry

3 cups – Grated Jaggery

½ tsp – Cardamom Powder

2 to 3 tsp – Melted Ghee (to grease your hands)

Method:

  1. Sieve together the Rice flour, Urad Flour and salt. (Or grind 2 cups of rice and ½ cup of whole white Urad dal together in Flourmill to make Thenkuzhal)
  2. Add the butter to it and mix well. (I have added melted hot butter here)
  3. Divide the flour mixture into 4 parts.
  4. Add water to one portion and knead gently to a stiff dough.
  5. Grease a Murukku Achu or Chakli making machine and fill the dough into the Achu.
  6. Heat oil in a pan. Once hot, reduce the heat to medium and press into the hot oil.
  7. Fry till done on both sides.
  8. Remove and cool. Follow the same procedure for the remaining portions too.  Adding water to every portion before pressing into the oil ensures uniform color till the end.
  9. Once cooled, break the murukkus/chaklis into small pieces. (You can use a rolling pin to break them into pieces)
  10. Add water to the grated jaggery and boil. Once the jaggery gets dissolved in water, strain for impurities.  Add the cardamom powder to it and boil again till you get a syrup of double thread consistency.  (if you add a little syrup into a cup of water, you should be able to gather it into a soft ball)
  11. Add the syrup to the broken murukku and roll into balls or make into a cone shape. Yummy Manogaram is ready.

 

 

Tips: 

After adding the syrup to the broken murukku pieces, do not try to shape it into laddus immediately.  Mix well till it cools down a bit, apply some ghee to your hands and do it patiently.

For making cones, see the video.

Note:

Adding more butter to this murukku makes the Manogaram taste well.  Likewise adding salt too makes it tasty.

The Jaggery measurement is given approximately.  The grated Jaggery can be one third of the broken pieces. So measure the broken murukku pieces before grating jaggery.

If the jaggery syrup is inadequate, you will not be able to roll the urundais.  So prepare the syrup in installments to avoid wastage.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



மனோகரம்:

 

 

இன்னும் பதினைந்து நாட்களில் கார்த்திகை பண்டிகை வந்துவிடும், அதற்குத் தயாராக வேண்டாமா?

தீபத்திருநாளான திருக்கார்த்திகைக்கு அவல் பொரி உருண்டை, நெல் பொரி உருண்டை என்று செய்வது வழக்கம். அதே போல இந்த மனோகரமும் கார்த்திகைப் பண்டிகைக்கு முக்கியமானது.

மனோகரம் என்பது ஒரு இனிப்பு முறுக்கு என்று சொல்லலாம்.  தேன்குழல் அச்சில் முறுக்குகளாகப் பிழிந்து, துண்டு துண்டாக உடைத்து வெல்லப்பாகு சேர்த்து உருண்டை பிடிப்பது மனோகரம் எனப்படும்.  இதை உருண்டைகளாகவும் பருப்புத் தேங்காய் போல கோன் ஷேப்பிலும் வீடியோவில் செய்து காட்டியுள்ளேன்.

 

தேவையான பொருட்கள்:

2 cups – அரிசி மாவு

½ cup – உளுந்து மாவு

½ tsp – உப்பு

3 tbsp – வெண்ணெய் அல்லது நெய் அல்லது சூடான எண்ணெய்

பொரிக்கத் தேவையான எண்ணெய்

3 cups – துருவின வெல்லம்

½ tsp – ஏலத்தூள்

2 to 3 tsp – கையில் தடவிக்கொள்ள நெய்

 

 

செய்முறை:

  1. அரிசிமாவு, உளுந்து மாவு, இரண்டையும் தனித்தனியே சலித்து உப்பு சேர்த்துக் கலக்கவும். (அல்லது ரெண்டு கப் அரிசியுடன் அரை கப் உளுந்து சேர்த்து மாவு மில்லில் மாவு அரைத்துக்கொள்ளலாம்)
  2. இந்த மாவுக்கலவையில் வெண்ணெயை சேர்த்து நன்றாகக் கலக்கவும். (நான் வெண்ணையை உருக்கிச் சேர்த்துள்ளேன்)
  3. இந்த மாவை கொஞ்ச கொஞ்சமாக நீர் விட்டுப் பிசைந்து பிழியலாம். மொத்தமாக நீர் சேர்த்துப் பிசைந்தால் முறுக்கு சிவந்து போகும் என்பதால் மாவை நாலு பங்காகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு பங்கிலும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
  4. ஒரு முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி மாவை நிரப்பி எண்ணையில் தேன்குழல்களாகப் பிழியவும்.
  5. வாணலியில் எண்ணெய் வைத்து நன்றாக சூடானதும் அடுப்பை மிதமாக எரிய விட்டு பிறகு தேன்குழல்களைப் பிழிந்தால் கடைசிவரை வெள்ளை வெளேரென்று முறுக்கு கிடைக்கும்.
  6. இப்படிப் பிழிந்த தேன்குழல்களை சின்ன சின்னத் துண்டுகளாக உடைத்து வைக்கவும். சுலபமாகச் செய்ய ஒரு பாலிதீன் கவரில் போட்டு சப்பாத்திக் குழவியால் தேய்த்து உடைக்கலாம்.
  7. இனி, வெல்லத்தை பாகு வைக்க வேண்டும்.

இங்கே கொடுத்துள்ள வெல்ல அளவு சுமாராக சொன்ன அளவுதான். வெல்லப்பாகு பதம் தவறினாலோ, பாகின் அளவு குறைவாக இருந்தாலோ உருண்டை பிடிக்க வரவே வராது. அதனால் எப்போதும் உடைத்த முறுக்குத் துண்டுகளை அளந்துகொண்டு அதில் மூன்றில் ஒரு பங்கு அளவில் துருவின வெல்லத்தை அளந்து எடுக்கலாம். பாகு இருக்கும் அளவுக்கு முறுக்குத் துண்டுகளை சேர்த்து மீதியுள்ள முறுக்கு துண்டுகளுக்கு மீண்டும் பாகு வைத்து உருண்டை பிடிக்கலாம்.

  1. வெல்லத்தில் முழுகும் அளவு நீர் சேர்த்துக் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும். ஏலத்தூளையும் சேர்த்து கெட்டிப் பாகு (தண்ணீரில் விட்டால் கரையாமல் கைக்கு உருட்ட வரும் பதம்) வரும் வரை காய்ச்ச வேண்டும்.
  2. பாகை முறுக்குத் துண்டங்களின் மேலே ஊற்றி கலந்து உருண்டையாகவோ கோன் ஷேப்பில் பணியாரக்கா போலவோ பிடித்து வைக்கவும்.

 

 

டிப்ஸ்:

பாகை ஊற்றியதும் உடனே உருண்டை பிடிக்க அவசரப் படாமல் சற்று ஆறும் வரை நன்றாகக் கலந்து பிறகு உருண்டை பிடிக்கலாம். உருட்டும் போது கைகளில் நெய் தடவிக்கொண்டால் ஒட்டாமல் வரும்.

குறிப்பு:

தேன்குழல் செய்யும்போது வெண்ணெய் அல்லது நெய்யை அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் உடைப்பதும் சுலபம், சுவையிலும் அதிகம்.  அதே போல உப்பு சேர்த்து செய்யும் முறுக்கில் வெல்லச்சுவை சேர்க்கும்போது இனிப்பும் சரியாகத் தெரியும்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



1 thought on “Manogaram”

  • மனதை அள்ளுவதால் மனோகரம் என்று பெயர் பெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *