Mixed Flour Appam

Mixed Flour Appam

In our Indian Culture, we celebrate several festivals in a year.  Among them, there are three festivals for which making Appams is an absolute must – Avani Avittam, Sri Krishna Jayanthi and Karthigai.

Making Appams is a very versatile art.  You can see a different method of making appams in just about every household. Some add bananas to their Appam batter, some don’t.  There are a few who soak rice themselves to make the batter while others simply use store bought flour. Some may even shallow fry instead of deep frying.  Whichever be the method, our taste buds are in for a marvelous treat!

Let’s keep things fresh and try a different method and recipe for every occasion. We’ll start this off with this year’s Karthigai making mixed flour Appams. This recipe makes fool-proof appams that are truly the gold-standard of what every appam should be – perfectly round, fluffy and of the right sweetness – the kind that will make even the most diet-conscious people submit to the temptation and go for seconds and thirds…. even fourths! (Disclaimer: based on true story…. 🙂 )

 

Read in Tamil

 

Ingredients:

¼ cup – Maida

¼ cup – Rice Flour

¼ cup – Wheat Flour

¼ cup – Sooji (Semolina)

A pinch – Salt

½ cup – Grated Jaggery

½ to ¾ cup – Water

2 tbsp – Grated coconut or Desiccated Coconut

½ tsp – Cardamom Powder

Oil to fry

Method:

  1. Dissolve the Jaggery in half cup water (reserve the remaining ¼ cup water) and strain for impurities.
  2. Add all the four flours (Maida, Sooji, Rice and Wheat flour) to a bowl. Add a pinch of salt.  (adding a pinch of salt enhances the sweetness of the dish)
  3. Add the Cardamom Powder too to the flour mixture and mix well.
  4. Now pour the strained syrup to this and mix well using a whisk or fork, without any lumps.
  5. Add the grated coconut or desiccated coconut to it and mix.
  6. Close and soak for at least half an hour. You can soak upto one hour.
  7. After half an hour, the batter will be very thick. Add the reserved water little by little and bring it to a dosa batter consistency.  Stop adding water once this consistency is reached.
  8. Take oil in a small kadai. The kadai should not be flat bottomed.  The appams puff up fully without sticking to the bottom only when the pan is curved.  Likewise, since appams are fried one at a time, small curved Tadka pans work best.
  9. Heat the oil well. It should not be smoky, but the temperature of the oil should be high.  Once hot, reduce the heat to medium. Take a small ladle full of batter and pour in the center slowly.  If the oil temperature is perfect, the appam will raise up immediately. Keep shaking the oil using a ladle for even cooking.
  10. The appam will puff up like Puris. Flip and fry on the other side too.
  11. Remove when it is golden in color.
  12. Drain in an oil absorbent paper and store in a steel box.
  13. This appam stays good even for upto 4 days.

 

 

Tips:

See to that the oil temperature is medium till the end.  If you increase the heat, the appams turn brown quickly with uncooked centers.  The standing time is very much important for the appams to cook inside perfectly.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



கலவை மாவு அப்பம்:

 

 

வருடம் முழுக்க பல பண்டிகைகள் நமக்கு.  அதில் முக்கியமாக மூன்று பண்டிகைகளுக்கு (ஆவணி அவிட்டம், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை தீபம்) அப்பம் Must.

அப்பம் செய்ய சிலர் வாழைப்பழம் போட்டும், சிலர் போடாமலும், சிலர் அரிசியை ஊற வைத்து அரைத்தும், சிலர் அரைக்காமல் ரெடிமேட் மாவிலும், சிலர் எண்ணெயில் பொரித்தும், சிலர் குழிப்பணியாரக் கல்லில் shallow fry செய்தும்…. என்று செய்முறை வீட்டுக்கு வீடு மாறுபடும். ஆனால் எல்லா விதமுமே நன்றாகத்தான் இருக்கும்.

நாம ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதம் செய்வோமா? இந்த முறை யார் காலையும் வாராத, அப்பம்ன்னா என்ன லக்ஷணங்கள் உண்டோ அதுபடி குண்டு குண்டா நல்லா உப்பி, அதிக எண்ணையும் குடிக்காமல் ஒண்ணு சாப்பிட்டா போதும்னு நினைப்பவர்களையும் அட்லீஸ்ட் நாலாவது உள்ளே தள்ள வைக்கும் ஒரு ரெசிபியை முதலில் சொல்றேன்.

 

தேவையான பொருட்கள்:

¼ cup – மைதா

¼ cup – அரிசி மாவு

¼ cup – கோதுமை மாவு

¼ cup – பாம்பே ரவை

ஒரு சிட்டிகை – உப்பு

½ cup – அரை கப் வெல்லம் (துருவினது)

½ to ¾ cup – தண்ணீர்

2 tbsp – தேங்காய் துருவல் அல்லது  Desiccated Coconut

½ tsp – ஏலத்தூள்

பொரிக்கத் தேவையான எண்ணெய்

செய்முறை:

  1. அரை கப் துருவின வெல்லத்தை அரை கப் தண்ணீருடன் அடுப்பில் ஏற்றி கரையும் வரை கொதிக்க விடவும். (மீதி கால் கப் தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்). கரைந்த வெல்லத்தை வடிகட்டி வைக்கவும்.
  2. மைதா, அரிசிமாவு, கோதுமை மாவு மற்றும் ரவையை ஒரு பௌலில் கொட்டி அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வைக்கவும். (எந்த வகை ஸ்வீட் செய்தாலும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் அது இனிப்பை தூக்கிக்காட்டும்)
  3. இந்த மாவுக் கலவையில் ஏலத்தூளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  4. அடுத்து, கரைத்து வைத்துள்ள வெல்லக்கரைசலை மாவில் சேர்த்து கட்டிகளின்றி நன்றாகக் கலக்கவும். விஸ்க் அல்லது முள் கரண்டி அல்லது நம் கை விரல்கள் கட்டியின்றிக் கலக்க உதவும்.
  5. கலந்த மாவில் தேங்காய் துருவல் அல்லது டெசிகேடட் கோகனட்டை சேர்த்து கலக்கி அட்லீஸ்ட் அரை மணி (அல்லது ஒரு மணி நேரம் வரை) நேரத்துக்கு மூடி வைக்கவும். இப்படி ஊற வைப்பதால் ரவை ஊறி சீக்கிரம் வேகும்.
  6. அரை மணி நேரம் கழித்து மாவுகள் ஊறி கெட்டிப்பட்டிருக்கும். இதில் எடுத்து வைத்த கால் கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். நமக்கு வேண்டிய பதம் வந்ததும் தண்ணீர் சேர்ப்பதை நிறுத்திவிடலாம்.
  7. ஒரு சின்ன குழிவான வாணலியில் எண்ணெய் எடுக்கவும். (தாளிக்கும் வாணலி இருந்தால் அது பெஸ்ட்) வாணலியின் அடிப்பாகம் தட்டையாக இல்லாமல் குழிவாக இருந்தால் அப்பங்கள் அடியில் ஒட்டிக்கொள்ளாமல் அழகாக உப்பி வரும். அப்பம் ஒவ்வொன்றாகத் தான் செய்ய வேண்டும் என்பதால் சின்ன வாணலி என்றால் எண்ணையும் குறைவாக வைக்கலாம்.
  8. எண்ணெய் நன்றாகக் காயணும், ஆனா புகையக் கூடாது. எண்ணெய் சூடானதும் அடுப்பை மீடியம் ஆக்கிக் கொண்டு ஒரு சிறிய குழிக்கரண்டியால் மாவை எடுத்து வாணலி நடுவில் நிதானமாக ஒரே இடத்தில் விடவும். எண்ணெய் சூடு சரியாக இருந்தால் மாவு டக்கென்று எழும்பிப் பொரியும். சுற்றிலும் உள்ள எண்ணையை கரண்டியால் வாரி வாரி விட்டால் மேல் பக்கமும் வேகும்.
  9. பூரி போல அப்பம் குண்டாக உப்பியதும் திருப்பிவிட்டுப் பொரிக்கவும்.
  10. பொன்னிறம் ஆனதும் கரண்டியால் வடித்து எடுக்கலாம்.
  11. எண்ணெய் உறிஞ்சும் தாளில் (oil absorbent paper) எடுத்து வைத்து ஒரு ஸ்டீல் டப்பாவில் ஸ்டோர் பண்ணலாம்.
  12. நாலு நாள் ஆனாலும் கெடாமல் இருக்கும் இந்த அப்பம்.

 

 

டிப்ஸ்:

எண்ணெய் சூடு மிதமாக இருந்தால் அப்பம் சரியானபடி பொரியும்.  எண்ணெய் சூடு அதிகம் ஆனால் வெளியில் பொரிந்தது போலத் தெரிந்தாலும் உள்ளே வெந்திருக்காது.  அதேபோல அப்பம் பொரித்து எடுத்தபின்னும் உள்ளே வெந்து கொண்டிருக்கும் என்பதால் ஆறியதும் எடுத்து உள்ளே வைக்கலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



10 thoughts on “Mixed Flour Appam”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *