Nellikai (Gooseberry) Rice

Nellikai (Gooseberry) Rice

Gooseberry is a highly nutritious fruity. It’s rich in vitamin C, high in water and fiber content which improves digestion and bowel movements. But more importantly, I’m pretty sure you’ve seen it listed on several brands of shampoos in India. So, it must be good for our hair!

Long story short, it is very good for our health…but, it may not taste great. It’s a little sour/bitter eaten on its own. Kids probably won’t enjoy them. Some might be game if it is gooseberry pickle but not all.

Here’s a recipe for a wholesome dish that can be made with gooseberry called…. (you guessed it!) Gooseberry Rice!

It’s simple to make, needs very few ingredients and tastes delicious all the same. Your kids won’t be able to tell otherwise!

 

Read in Tamil

 

Ingredients:

2 – Indian Gooseberries

½ tsp – Red chili Powder

I inch long – Young ginger

¼ tsp – Asafetida Powder

¼ tsp – Turmeric Powder

Handful of Cooked Whole Green Gram (Or any other grains of your choice)

1 big bowl – cooked rice

2 tsp – Gingelly oil

Salt to taste

Juice of Half Lemon

Chopped coriander leaves to garnish

For seasoning:

2 tsp – cooking oil

½ tsp – Mustard Seeds

1 tsp – Urad dal

2 tsp – Bengal gram

Handful – Cashews or Groundnuts

1 sprig – Curry Leaves

Method:

  1. Cool a big bowl of rice on a plate. Adding 2 spoons of gingelly oil over it makes the rice non mushy.
  2. Soak a handful of Green gram the previous night or at least 3 hours before you prepare this rice and cook till done. (Boiling on very high temperature for 2 minutes is enough to cook a handful of green gram).
  3. Cut the flesh of the gooseberries leaving the seeds. Peel and chop the ginger and add.  Grind them coarsely along with chili powder. No need to add water for grinding.
  4. In a wide pan or a kadai, add the oil and season with Mustard seeds, Urad dal and Bengal gram. Add the cashews or groundnuts and saute for a while.  Add asafetida powder, turmeric powder and curry leaves to it.
  5. Next add the ground mixture to the seasonings and stir for a while. Gooseberries do not take much time to cook.
  6. To this, add the rice, cooked green gram and salt to taste and mix well.
  7. Squeeze the juice of half a lemon over it and switch off the heat. Garnish with chopped coriander leaves.
  8. Once done, press the rice on the Kadai tightly till warm. Doing so ensures a fluffy rice.
  9. Healthy Gooseberry rice is ready. This can be an easy lunch box recipe.

 

 

Footnote:

You can add green chilies instead of chili powder.  I have added white ginger in place of normal ginger here.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



 

நெல்லிக்காய் சாதம்:

 

 

நெல்லிக்காய் என்பது வைட்டமின் சி நிறைந்தது.  நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்துக்கு ரொம்பவே சௌகர்யம்.  நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலுக்கு டாட்டா காட்டலாம். தலை முடி வளர, இள நரை போக…ன்னு எத்தனை ஷாம்பூ Ad பார்த்திருப்போம்….இத்தனை ஏன், உடம்புக்கு நல்லது… அவ்வளவுதான் விஷயம்.

ஆனா துவர்க்கும் இதை குழந்தைகள் சாப்பிட விரும்புவார்களா? நெல்லிக்காய் ஊறுகாய்ன்னா சிலர் ஆட்டத்துக்கு வருவார்கள்.  அதுக்காக ஊறுகாயையே எப்போதும் செய்து சாப்பிட முடியுமா? கொஞ்சம் சுவையான விதத்தில் சமைத்து குழந்தைகளையும் இதன்பக்கம் கவர்ந்திழுக்கலாமா? இந்த நெல்லிக்காய் சாதம் ஒரு சுலபமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

 

தேவையான பொருட்கள்:

2 – பெரிய நெல்லிக்காய்

½ tsp – சிவப்பு மிளகாய் தூள்

I இன்ச் நீள – இஞ்சி

¼ tsp – பெருங்காயப் பொடி

¼ tsp – மஞ்சள் பொடி

ஒரு பிடி – வெந்த பச்சைப் பயறு

1 பெரிய கப் – சாதம்

2 tsp – நல்லெண்ணெய்

சுவைக்கு வேண்டிய உப்பு

அரை எலுமிச்சையின் சாறு

அலங்கரிக்க – கொத்தமல்லி

தாளிக்க:

2 tsp – எண்ணெய்

½ tsp – கடுகு

1 tsp – உளுத்தம்பருப்பு

2 tsp – கடலைப்பருப்பு

ஒரு கைப்பிடி – முந்திரி அல்லது வேர்க்கடலை

1 ஆர்க்கு – கறிவேப்பிலை

செய்முறை:

  1. சாதத்தை உதிராக வடித்து மேலே ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து ஆறவிடவும். சூடாக இருக்கும்போது எண்ணெய் சேர்ப்பதால் சாதம் உதிர் உதிராக இருக்கும்.
  2. பாசிப்பயறையும் முதல் நாளோ அல்லது சாதம் செய்வதற்கு மூன்று மணி நேரம் முன்போ ஊற வைத்து வேக வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் ஊறின பயறை சேர்த்து ரெண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டாலே பயறு வெந்துவிடும்.
  3. நெல்லிக்காயை கொட்டை நீங்கலாக சிறு துண்டாக நறுக்கவும். இதில் ஒரு துண்டு இஞ்சியையும் தோல் சீவி சேர்க்கவும்.  காரத்துக்கு வேண்டிய மிளகாய் தூளையும் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.  அரைக்கும் போது தண்ணீர் எதுவும் வேண்டாம்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் பருப்புகள், முந்திரி அல்லது வேர்க்கடலை சேர்த்து, பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  5. அடுத்து அரைத்த விழுதையும் சேர்த்து ஒரு முறை வதக்கலாம். நெல்லிக்காய்க்கு அதிகம் வதக்க வேண்டிய அவசியமில்லை.
  6. வதக்கிய கலவையில் ஆறின சாதத்தையும், வெந்த பாசிப்பயறையும் சேர்த்து, சுவைக்கு வேண்டிய உப்பு சேர்த்து, மேலே அரை மூடி எலுமிச்சம் பழத்தையும் பிழிந்துவிட்டு கொத்தமல்லித் தழைகளை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.
  7. சாதம் கலந்ததும் வாணலியிலேயே சாதத்தை குவித்து அழுத்தி வைக்கலாம். சூடு ஆறும்வரை இப்படி அழுத்தி வைத்துவிட்டு எடுத்து உதிரத்தால் உதிர் உதிராக நெல்லிக்காய் சாதம் தயார்.
  8. நெல்லிக்காயின் மருத்துவ குணங்களுடன் பார்வைக்கும் சுவைக்கும் எலுமிச்சை சாதம் போல இருக்கும் இது.

 

 

குறிப்பு:

மிளகாய் தூளுக்கு பதில் பச்சை மிளகாய் சேர்க்கலாம். அதேபோல இஞ்சிக்கு பதில் நான் மாங்காய் இஞ்சி சேர்த்துள்ளேன்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



4 thoughts on “Nellikai (Gooseberry) Rice”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *