Eggless Coffee Brownies

Eggless Coffee Brownies

Brownies…. the wonderfully decadent squares of cocoa divinity. Who doesn’t know of them? And who, of those that know of them, has claimed to not like them?

Brownies are rich, chocolate desserts that are delicious to taste and easy to make. A small square goes a long way in filling our tummy (but never our desire), so it’s perfect for entertaining a lot of people. It’s very easy to make a large batch, just spread it out on a cookie sheet and bake all at once. If you’re not ready to serve yet, just pop it in the freezer and warm it up in the microwave before serving. Serve the hot slice of brownie with a drizzle of chocolate sauce and a scoop of vanilla ice cream on the side. Or cut it into long bars and wrap them up in parchment paper and it would make the perfect gift if you’re visiting your friends or family over the holidays or a cute snack to pack for your kids’ school.

Read in Tamil

Don’t have an oven? Don’t worry… You can make these Brownies with a Pressure Cooker, just as I’ve done in this recipe.

 

Pssstt! 🤫

If you’re looking for a more traditional recipe to ring in the New Year, stay tuned for a delicious Pal Kesari recipe, coming out tomorrow…

 

How is a Brownie different from a Cake?

Now you might wonder, what exactly is that makes a brownie different from a cake. Obviously, it tastes different, but what you should look out for is its distinct texture. Unlike cakes, brownies are not supposed to be light and fluffy. Brownies are fudgy or sometimes even crumbly with a flaky and crunchy layer on top. This is because a brownie recipe usually calls for more chocolate or cocoa and needs little to no baking soda or baking powder. Another reason is that, it has a lower flour to wet ingredients ratio than cake does.

 

Ingredients:

3 oz (or 3/8th cup) – chopped semi sweet baking chocolate

(3/8 cup means ¾ portion of a half cup. But since we want the Brownies so chocolaty, we have taken full ½ cup of the chopped chocolates)

5 tablespoons – Butter (preferably in room temperature)

2/3 cup – Sugar

1/3 cup – Milk

½ tsp – Vanilla essence

2 tablespoon – Home Brewed coffee or Decoction (You can also use Espresso powder/instant coffee powder or ½ tsp of coffee flavored essence)

1 tablespoon – cornstarch (corn flour)

¾ cup + 2 tablespoons – All Purpose flour or Maida

½ tsp – Baking powder

3 tablespoon – Cocoa powder

A pinch salt.

Method:

  1. Preheat the Oven to 350 F or 180 C for 10 minutes.
  2. Grease and dust a 8 X 8 square tin and keep ready. Brownies look best only in square tins. (Normally while making brownies, the tins are dusted using cocoa powder alone, but I have used a little maida and cocoa powder together to dust the tin)
  3. Sift together the flour, cocoa powder, baking powder and salt and keep ready.
  4. Place the chopped chocolate and butter in a microwave safe bowl and melt the chocolate in 50% Power for 1 ½ to 2 minutes or till the chocolate softens and mixes with the butter. This can be done in double boiler method too if you do not own a Microwave oven. Use a rubber spatula to mix the butter and melted chocolate. Stir until smooth.
  5. Add the sugar and mix again gently to combine all of them.
  6. In another bowl, whisk together the milk, cornstarch, instant coffee powder (I have added brewed coffee instead of coffee powder) and vanilla essence till foamy. (Mixing with a wire whisk makes it foamy. If you do not have one, use a fork spoon to make it foamy). Now add the melted chocolate mixture to it and mix with a rubber spatula.
  7. Fold the sifted flour mixture into this and mix gently. A few lumps are okay, but be careful not to overmix.
  8. Pour the batter into the greased and dusted pan. Then lightly smooth the batter to the edges of the pan with a rubber spatula or simply tap on the counter a few times. We do this to ensure the brownies bake with a level top.
  9. Bake for 20 – 25 minutes or till a toothpick when inserted in the center of the brownie comes out clear.
  10. Place the tin on a wire rack to cool completely. (If you like it more chocolaty, you can peel the chocolate bar using a knife or peeler and spread on the top when it is warm. You can enjoy the chunks of chocolate melting in your mouth)
  11. Slice them into squares and store in a tight jar.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



ப்ரௌனீஸ்  யாருக்குத்தான் பிடிக்காது?

 

 

இந்த குட்டி குட்டி சாக்லேட் தெய்வீகங்களை செய்வதும் சுலபம், சாப்பிடவும் சுலபம்.  கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும் என்றாலும் ஆசை மட்டும் அடங்காது. வீட்டில் ஒரு விஷேசம், விருந்து என்றால் நிறைய செய்து வைத்துவிடலாம், கெட்டுப் போகாது.  வேண்டிய போது சுடச்சுட மைக்ரோவேவ் செய்து மேலே சாக்லேட் சாஸ் ஊற்றியோ, ஜில்லென்ற ஐஸ் க்ரீமுடனோ பரிமாறலாம்.  விருந்தாளியாக செல்லும்போது ஒவ்வொரு துண்டையும் ஒரு parchment பேப்பரில் கட்டி சுவையான பரிசாக எடுத்துச் செல்லலாம். இங்கே சொல்ல வந்தது என்னன்னா, ப்ரௌனியை கையில் எடுத்தால் அது முடியும்வரை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் கவனம் போகாதுங்கறதுதான்.

அப்புறம் என்ன? இந்த புது வருஷத்தை பிரௌனியுடன் வரவேற்கலாமா?

ஷ்ஷ்….🤫…

இந்த பிரௌனியை வீட்டில் செய்ய முடியாது என்பவர்களுக்கு புது வருஷ வரவேற்ப்பாக பால் கேசரி செய்யும் ரெசிபியை நாளை எதிர்பாருங்க….

 

அதுக்கும் முன்னால இதுக்கும் கேக்ஸ்க்கும் என்ன வித்யாசம்ன்னு தெரிஞ்சிக்கலாமா?

கேக்குன்னா கொஞ்சம் soft, fluffy ஆ இருக்கும். இது fudge போல dense ஆ இருக்கும். காரணம் இதில் மாவு குறைவாகவும் சாக்லேட் அதிகமாகவும் தேவைப்படும். பல ரெசிப்பியில் பேகிங் சோடா, பேகிங் பவுடர் என்று எதுவுமே தேவைப்படாது. அப்படியே வேண்டியிருந்தாலும் மிகக் குறைவாகவே தேவைப்படும்.

இதெல்லாம் சரி, முக்கியமா ஒரு வித்யாசம் இருக்கு. கேக் போல இல்லாம, ப்ரௌனியை கையில் எடுத்து சாப்பிடலாம். (நாங்கெல்லாம் கேக்கையே கையில்தான் எடுத்து சாப்பிடுவோம்ன்னு சொல்றவங்க…ப்ரௌனியை மட்டும் விட்டுவைப்போமா?)

 

பிரௌனி செய்ய Oven இல்லையேன்னு கவலையா? பிரஷர் குக்கரில் செய்யும் முறையை இங்கே சொல்லியிருக்கேன், அதைப்போல செய்யலாமே…

 

தேவையான பொருட்கள்:

3 oz (அல்லது 3/8 cup) – சாக்லேட் துண்டுகள்

5 tablespoons – வெண்ணெய்

2/3 cup – சர்க்கரை

1/3 cup – பால்

½ tsp – வெனிலா எசன்ஸ்

2 tablespoon – Instant coffee powder  அல்லது ½ tsp of coffee flavored essence அல்லது பிரெஷ் காபி டிகாஷன்

1 tablespoon – சோளமாவு

¾ cup + 2 tablespoons – மைதா

½ tsp – பேகிங் பவுடர்

3 tablespoon – கோகோ பவுடர்

கால் ஸ்பூன் – உப்பு

Ingredients லிஸ்ட் பார்த்தாச்சா? சாக்லேட் அவுன்ஸ் கணக்கில் இருக்கே எப்படி அளக்கறதுன்னு கவலை வேண்டாம். துருவின Baking சாக்லேட் அவுன்ஸ் கணக்கில் மூணு என்றால் கப் கணக்கில் 3/8 cup வரும். இது என்னடா கணக்குப்பாடம்னு கவலைப்படாமல் ஒரு கால் கப்பும் அதே கால் கப்பில் பாதியும் எடுப்பது 3/8 cup ஆகும். நமக்கு சாக்லேட் எவ்வளவு போட்டாலும் திகட்டாது என்பதால் முழு அரை கப்பாகவே எடுக்கலாம். தப்பில்லை.

அதேபோல இன்ஸ்டன்ட் காபி பொடி, எசன்ஸ் எல்லாம் இல்லாட்டாலும் Thick காபி decoction இருந்தால் போதும். அதுவும் நன்றாகவே வரும். இங்கே நான் காபி டிகாஷன் யூஸ் பண்ணித்தான் செய்திருக்கேன்.

செய்முறை:

  1. முதலில் Oven ஐ preheat பண்ணவும். (180 C for 10 minutes.)
  2. அடுத்து 8X8 கேக் டின் (சதுர டின் என்றால் நல்லது) கிரீஸ் செய்து டஸ்ட் செய்து வைக்கவும். Dusting என்றால் எண்ணெய் அல்லது வெண்ணை தடவி மேலே ஒரு ஸ்பூன் மைதாவை போட்டு கை படாமல் சுழற்றி மாவை coat பண்ணுவது. இது கேக் ஒட்டாமல் வர உதவும். அல்லது Parchment பேப்பர் போடலாம். இங்கே ஒரு குறிப்புண்டு. எப்போதுமே ப்ரௌனியை Dust செய்யும்போது மாவுக்கு பதில் கோகோ பவுடரையே உபயோகிப்பது நல்லது. நான் இங்கே மாவுடன் கலந்த கோகோ பவுடரால் டஸ்ட் செய்திருக்கேன்.
  3. மைதா + கோகோ பவுடர் + பேகிங் பவுடர் + உப்பு சேர்த்து சலித்து வைக்கவும். எல்லாவற்றையும் சேர்த்து சலிப்பது நன்றாகக் கலக்க உதவும்.
  4. அடுத்து ஒரு மைக்ரோவேவ் அடுப்பில் துருவின சாக்லேட்டுடன் வெண்ணையை சேர்த்து (50% Power for 1 ½ to 2 minutes) சாக்லேட் soft ஆகும்வரை உருக்கவும். அதிகம் உருக்கி நெய்யாக்கிவிடாமல் பார்க்கணும். இதை Double Boiler method இலும் செய்யலாம்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்கும்போது மேலே இன்னொரு பாத்திரத்தில் சாக்லேட் + வெண்ணை வைத்து உருக்குவது. Spatula வால் தொடர்ந்து கலக்க சரியான பதத்தில் உருகிக்கலக்கும்.

இப்படிக் கலந்ததை இறக்கிவைத்து சர்க்கரை சேர்த்து ஜென்டிலா கலந்து வைக்கவும்.

  1. இன்னொரு சின்ன பௌலில் பால் + cornflour + எசன்ஸ் + காபி decoction அல்லது இன்ஸ்டன்ட் பவுடர் சேர்த்து wire whisk ஆல் நுரைவர அடிக்கவும். இங்கே Whisk இல்லையென்றால் முள்கரண்டியை உபயோகிக்கலாம் அல்லது தயிர் கடையும் மத்து கூட ஓகேதான். நன்கு நுரை வரவேண்டியது அவசியம்.
  2. இப்படிக் கலந்த கலவையுடன் உருக்கின சாக்லேட் கலவையையும் சேர்த்து நிதானமாகக் கலக்கவும். இப்போது மத்து உபயோகிக்காமல் Spatula அல்லது மரக்கரண்டியை உபயோகிக்கலாம்.
  3. இதில் சலித்துவைத்த மாவுகளைக் கலக்கவும். நிதானமாக ஒரே Directionல் கலக்கலாம். மாவில் கட்டி விழாமல் இருக்கணும். செய்யப்போவது ப்ரௌனி என்பதால் ஒரு சில கட்டிகள் இருந்தால் பரவாயில்லை, வேகும்போது அட்ஜஸ்ட் ஆகும்.
  4. கலவையை டஸ்ட் செய்த டின்னில் ஊற்றி ரப்பர் spatula வால் மேல்புறத்தை சமன் படுத்தலாம் அல்லது டின்னை தட்டினால் தானே சமன் ஆகும்.
  5. Oven ல் வைத்து 20 to 25 minutes வரை வேகவிடவும். அல்லது ஒரு டூத்பிக்கை குத்தினால் நடுப்புறம் ஒட்டாமல் வரவேண்டும். ப்ரௌனி என்பது அதன் இயல்புக்கு ஏத்தமாதிரி கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும் பதத்தில்தான் இருக்கும். கேக் போல ஒட்டாமல் வராது. அதனால் டூத் பிக்கில் கொஞ்சம் ஒட்டினாலும் நடுவில் வெந்தால் போதும். அடுப்பை விட்டு வெளியே எடுத்து ஆறவிடவும். ஆற ஆற மீதி குக்கிங் நடந்துவிடும்.
  6. ப்ரௌனி கொஞ்சம் ஆறியதும் (சூடு கொஞ்சம் இருக்கும்போதே) மேலே இன்னுமொரு கட்டி சாக்லேட்டை Peeler அல்லது கத்தியால் சீவி போட்டால் பார்க்கவும் அழகு. அந்தச் சூட்டிலேயே சாக்லேட் உருகியும் உருகாமலும் இருக்கும்.
  7. இனி, நன்றாக ஆறியதும் வில்லைகளாக கட் செய்து மூடி வைக்கவும்.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 



3 thoughts on “Eggless Coffee Brownies”

  • அடடா! நீண்ட நாளாக பதிவு ஏதும் இல்லையே என்று நினைத்தேன். லேட்டஸ்டாக காபி ப்ரௌனீ செய்து அசத்தினது பிரமாதம்!! பெயரில் புதுமை. வாழ்க வளமுடன்!!!

  • அது என்ன? முட்டை இல்லாமல் பிரௌனி? இதிலும் முட்டை போடுவார்கள் என்று தெரிகிறது. எனக்கு முட்டை வேண்டாம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *