Palak Paneer in Pressure cooker

Palak Paneer in Pressure cooker

Palak Paneer is just one of those side dishes that we immediately order as soon as we see it in any restaurant menu. It’s loved by all because it’s nutritious, tasty and visually attractive! But, no matter how much we love, most of us shy away from making it at home and relegate it to a restaurant dish because we fear the preparation takes too much time and effort.

Well, in this recipe, I’m going to break that misbelief and show you how to make it in 15 mins… well, 30 minutes including all the prep!

Read in Tamil

 

Ingredients:

1 Bunch – Palak Spinach

1 tsp – Cumin seeds

1 big – Tomato

¼ tsp pinch – Salt

½ tsp – Sugar

½ inch long – Ginger

1 small – Green chili

2 tsp – oil

1 tsp – Garam masala (or Whole Spices)

Salt to taste

A handful of Paneer Cubes

For Prior Preparation:

  1. Wash the Palak (spinach) thoroughly and remove the roots.
  2. Chop them finely.
  3. Add ¼ tsp salt to the frozen paneer cubes and immerse them in hot water. This step makes the paneer so soft and fresh.
  4. Take a spoon of oil in a pan and add the chopped spinach to it.
  5. Add ¼ tsp of salt and ½ spoon sugar to it and saute well. Salt is being added to speed up the cooking process and sugar is added to retain its green color.
  6. Add ½ tsp cumin seeds while sautéing. Let the spinach reduce to half its quantity.
  7. Let it cool.
  8. Once cooled, add green chili, peeled ginger and 1 big tomato (chopped) to it and grind to a fine paste. It is not wrong to add a little water while grinding.

Note:

Leafy vegetables are salty in nature.  So, add very little salt while sautéing.  Similarly, leafy vegetables do not tolerate too much spice added to it.  So reduce the quantity of chilies if preparing in No onion No garlic version like me.  If onions are added while sautéing you can increase the number of chilies and tomatoes.

Similarly, if you prefer low oil version, simply boil the chopped Palak in a little water and proceed the same way as above.

Cooking method:

  1. Take a small pressure cooker and add 3 to 4 tablespoon of water to it.
  2. Add a teaspoon of cooking oil to it and add the Palak Puree to it.
  3. Add the remaining cumin seeds, asafetida if preferred and garam masala to it.
  4. Add salt to taste. Remember we have added salt while sautéing the spinach which will be enough for the Palak.  The salt we are going to add now is only for the tomatoes and chilies we have taken.
  5. Finally add the Paneer cubes above all and close the lid.
  6. Cook on high flames for 3 whistles.
  7. Switch off the stove and release pressure.
  8. Open the lid and mix well. Your palak paneer is ready in minutes.
  9. Decorate with fresh cream or a dollop of butter on top for a rich taste.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



பிரஷர் குக்கரில் பாலக் பனீர்:

 

 

பாலக் பனீர் என்பது எல்லா ரெஸ்டாரண்ட்களிலும் மிகச் சாதாரணமாகக் கிடைப்பது. பாலக் கீரையின் சத்தும், கண்ணைக் கவரும் நிறமும், அதன் சுவையும் தனிதான். ஆனால் வீட்டில் பாலக் பனீரை செய்வது என்றால் பெரிய மலையைப் புரட்டும் வேலை என்பதாக பலரும் நினைக்கலாம்.

அப்படியெல்லாம் இல்லைங்க… கால் மணி நேரத்தில்…இல்லையில்லை…Prep time எல்லாம் சேர்த்து அதிகபட்சம் அரை மணியில் சுலபமாகச் செய்யும் முறையை இங்கே சொல்கிறேன்.

 

தேவையான பொருட்கள்:

1 கட்டு – பாலக் கீரை

1 tsp – சீரகம்

1 – பெரிய தக்காளி

¼ tsp – உப்பு

½ tsp – சர்க்கரை

½ இன்ச் நீள – இஞ்சி

1 – சிறிய பச்சை மிளகாய்

2 tsp – எண்ணெய்

1 tsp – கரம் மசாலா (அல்லது முழு மசாலாக்கள்)

சுவைக்கேற்ப உப்பு

ஒரு கை நிறைய பனீர் துண்டுகள்

For Prior Preparation:

  1. கீரையை நன்றாகக் கழுவி வேர்களை வெட்டிவிட்டு நறுக்கி வைக்கவும்.
  2. பனீரை கால் ஸ்பூன் உப்புடன் கொதிநீரில் போட்டு வைத்தால் பிரெஷ் பனீர் போல மிருதுவாகும்.
  3. ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கவும்.
  4. கீரை வதங்கும்போது ¼ டீஸ்பூன் உப்பும், அரை ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து வதக்கலாம். உப்பு சேர்த்தால் கீரை சுலபமாக வதங்கும், சர்க்கரை சேர்த்தால் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
  5. கீரை பாதியளவாக சுருங்கும் வரை வதக்கலாம். அடுத்து அரை ஸ்பூன் சீரகத்தை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  6. ஆறியதும் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் ஒரு பெரிய தக்காளியையும் நறுக்கி சேர்த்து நைசாக அரைக்கவும். அரைக்கும்போது கொஞ்சம் தண்ணீர் சேர்த்தாலும் தப்பில்லை.

நோட்:

கீரை போன்ற இலைவகைக் காய்கறிகள் இயற்கையாகவே உப்புச் சுவை கொண்டது என்பதால் வதக்கும்போது மிகக் குறைவாக உப்பு சேர்க்கலாம். அதே போல கீரை வகைகளுக்கு அதிகக் காரமும் தேவையில்லை.  என்னைப்போல வெங்காயம் பூண்டு சேர்க்காமல் செய்தால் பச்சை மிளகாயை குறைவாக சேர்ப்பதே நல்லது. வெங்காயம் பூண்டு சேர்க்க நினைப்பவர்கள் வேண்டுமானால் மிளகாய் தக்காளியை அதிகரித்துக்கொள்ளலாம்.

அதேபோல எண்ணெய் குறைவாக சேர்க்க நினைப்பவர்கள் கீரையை வதக்குவதற்கு பதில் அரைக்கச் சேர்க்கும் நீருடன் கீரையை வேக வைத்தும் அரைக்கலாம்.

செய்முறை:

  1. ஒரு சிறிய பிரஷர் குக்கரில் 3 to 4 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய்யையும் சேர்க்கவும்.
  2. கீரை விழுதை அதன் மேலே சேர்க்கவும். எதையும் கலக்கவே வேண்டாம்.
  3. மீதியுள்ள சீரகம், பெருங்காயம் (சேர்ப்பதாக இருந்தால்) மற்றும் கரம் மசாலாவையும் சேர்க்கவும்.
  4. சுவைக்கு வேண்டிய உப்பை மட்டும் சேர்க்கவும். (நாம் கீரை வதக்கும்போது கொஞ்சமாக உப்பு சேர்த்துள்ளதால் இப்போது சேர்க்கும் உப்பு தக்காளி மற்றும் மிளகாய்க்கு ஏற்றபடி இருக்கட்டும்)
  5. கடைசியாக வெந்நீரில் இருக்கும் பனீர் துண்டுகளை வடித்து எடுத்து மேலாக சேர்க்கவும்.
  6. குக்கரை மூடி அதிக சூட்டில் 3 விசில் வரும்வரை வைத்து அடுப்பை அணைக்கவும்.
  7. ஒரு கரண்டியால் குக்கரின் வெயிட்டை தூக்கி ப்ரேஷரை ரிலீஸ் செய்யவும்.
  8. உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் பாலக் பனீர் கண்ணைப் பறிக்கும் பச்சை நிறத்தில் தயார்.
  9. விரும்பினால் மேலே பிரெஷ் க்ரீம் அல்லது ஒரு துண்டு வெண்ணெய் சேர்த்து பரிமாறலாம்.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 



2 thoughts on “Palak Paneer in Pressure cooker”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *