Couscous Burrito with an Indian Twist

Couscous Burrito with an Indian Twist

Recently, we were having burritos for dinner and I had this idea for a NONG (No Onion No Garlic) substitute for habanero sauce. This recipe comes from my own kitchen. A few days later, I tried to implement my idea and it has received a green flag from my daughters. So here’s my take on a classic veggie burrito with couscous and an aromatic and spicy tomato sauce.

Burrito is a Mexican dish. It is essentially a round flat-bread called tortilla wrapped with fresh vegetables, meat and/or beans for protein and some kind of flavored rice for carbs, topped with a spicy sauce.

Read in Tamil

Tortillas and the sauces are readily available at any supermarket. If you can’t find tortillas in a store near you, you can just use chapathis. Do remember to make the chapathis thin, soft and slightly larger than you usually would. In this recipe, I chose to add couscous for the carbs. Couscous is a morocco grain made with durum wheat. It is small and pebble-like, much like sago and tastes like semiya. If you can’t find couscous, then you can use fragrant coriander or mint flavoured rice (just add a few leaves of coriander or mint to the water while you boil rice. If you’re feeling more traditional, you can even use jeera rice!). You don’t need the rice to be strongly tinted, it’ll do as long as it has a strong flavor. If you don’t particularly want to use white rice, you can very well substitute it with more healthier options such as quinoa or millet rice.

In place of the habanero sauce, I have used my homemade Instant gravy sauce. Check out this page for the recipe I’ve used.

Now, on with the Burrito!

 

Ingredients:

4 – tortillas or wraps,

¼ cup – couscous

A little less than ½ cup – water

1 tsp – butter

¼ tsp – salt

½ cup – homemade instant gravy sauce

½ cup – shredded cabbage

½ cup – finely diced tomatoes

½ cup-  broccoli florets, steamed

1 – avocado, sliced

4 – olives sliced

Salt to taste

1 tbsp – lemon juice

Method:

  1. Defrost your store-bought tortillas for about 15 minutes.
  2. Let’s start with preparing the couscous. Boil ½ cup of water in a sauce pan. Add the butter and salt to it and let it boil.
  3. Once the water starts boiling, add the couscous and cover the pan. Check every few minutes. The couscous will grow three times its size and will absorb most of the water added. Turn off the heat when there’s little water left. Cover and let the couscous rest until we assemble.
  4. Meanwhile, cut your broccoli into little florets and steam it. While it steams, chop the cabbage and tomatoes and slice the avocado and olives.
  5. Lay the tortilla on a flat surface and start assembling the fillings. Make sure to add your fillings in a horizontal line to the edge closest to you (as seen in the video).
  6. Start with the base, which is couscous in this recipe. Top the couscous with some homemade instant gravy sauce.
  7. Follow that with the sliced veggies. Sprinkle the veggies with salt, and a squeeze of lemon juice. Add another layer of the homemade instant gravy sauce finally.
  8. Now it’s time to roll the burrito. It’s normal to struggle a bit in the first try but you’ll quickly master it by your second or your third try. Pick up the edge that’s closest to you and tuck it over the fillings tightly. Start rolling it away from you. When you’ve rolled about halfway, fold the sides and tuck in inwards and continue to roll all the way. Once you’ve rolled fully, seat the burrito with the seam on the bottom.
  9. Now place the rolled burritos, still seam side down, on a gridle (Tawa) or grill. Brush the burrito with very little oil and toast it lightly, just to warm it up. Keep in mind not to grill for too long as the tortilla will turn crunchy very quickly.

 

 

Just a word of caution: Avocado might give out a slightly strange taste when introduced to heat. Add very little avocado to the burrito. Or you can even choose to make guacamole with the avocado and use it as a dip instead of adding it to the burrito.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



இந்திய முறையில் குஸ்குஸ் பரிட்டோ:

 

 

பரிட்டோ என்பது மெக்ஸிகன் நாட்டு உணவு. சுலபமாகப் புரியவேண்டும் என்றால், இந்த பரிட்டோ என்பது ஒரு சப்பாத்திக்குள் சில பச்சைக் காய்கறிகள், அல்லது மாமிசம், சில வகை சாஸ்கள் (நம் நாட்டைப் போலவே அங்கேயும் ஸ்பைஸஸ் அதிகம் உபயோகிப்பார்களாம்) அல்லது சட்னிகள், Carbsக்கு ஏதாவது flavored சாதம் அல்லது குஸ்குஸ் எனப்படும் ஒரு வித கோதுமை ரவை சேர்த்து சுருட்டி அடுப்பில் வைத்து சுடவைத்துச் சாப்பிடுவது.

 

சமீபத்தில் என் மகள்கள் டின்னருக்கு இந்த பரிட்டோவை ஆர்டர் செய்தபோது அந்தக் கடையில் அதை எப்படி செய்கிறார்கள் என்று அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அதை எப்படி நம் நாட்டில் கிடைக்கும் பொருள்களை வைத்து நம் இந்திய முறைப்படி செய்யலாம் என்று மனதில் தோன்றியதை வீட்டில் செய்து பார்த்தேன். பரவாயில்லை… பாஸ் மார்க் வாங்கிவிட்டதாக feedback கிடைத்துவிட்டது.

 

இந்த டார்டியாஸ் (Tortillas) மற்றும் சாஸ்கள் எல்லாம் கடைகளில் ரெடிமேட்டாக கிடைக்கின்றன.  இல்லை என்றாலும் வீட்டில் கொஞ்சம் மிருதுவாக, மெல்லிதாக, பெரிய சப்பாத்தி செய்து கொண்டாலும் போதும்.  . மொரோக்கோ நாட்டின் முக்கிய உணவான குஸ்குஸ் என்பது பார்வைக்கு ஜவ்வரிசி போலவும் சாப்பிட சேமியா போலவும் இருக்கும். அது கிடைக்காதவர்கள் ஜீரா ரைஸ் அல்லது வெறும் புதினா அல்லது கொத்தமல்லி இலைகளுடன் சமைத்த ப்ளைன் சாதத்தை உபயோகிக்கலாம்.  சாதம் வெளுப்பாகவும் புதினா அல்லது கொத்தமல்லியின் வாசனையுடனும் இருந்தால் போதும்.

 

சாதம் வேண்டாம் என்றால் சமைத்த கீனுவா அல்லது சிறுதானிய சாதம் வைத்தாலும் நன்றாகவே இருக்கும்.

 

நான் habanero sauce க்கு பதில் வீட்டில் செய்த இன்ஸ்டன்ட் கிரேவி சாஸ் உபயோகித்து செய்திருக்கிறேன்.  அதன் ரெசிபிக்கு இங்கே கிளிக் செய்யலாம்.

இனி ரெசிபிக்கு போகலாம்தானே?

 

தேவையான பொருட்கள்:

4 – tortillas or wraps,

¼ cup  – குஸ்குஸ்

½ cupக்கும் சற்று குறைவாக – தண்ணீர்

1 tsp – வெண்ணெய்

¼ tsp – உப்பு

½ cup – ஹோம்மேட் இன்ஸ்டன்ட் கிரேவி சாஸ்

½ cup – நறுக்கிய கேபேஜ்

½ cup – நறுக்கிய தக்காளி

½ cup – வேக வைத்த பிராக்கலி

1 – ஸ்லைஸ் செய்த அவகாடோ

4 – ஸ்லைஸ் செய்த ஆலிவ்ஸ்

சுவைக்கான உப்பு

1 tbsp – எலுமிச்சை சாறு

செய்முறை:

  1. முதலில் wrap அல்லது டார்டியாஸ் பிரிட்ஜில் இருந்தால் எடுத்து வெளியில் வைத்துவிடவும்.
  2. அடுத்து குஸ்குஸ் தயார் செய்ய வேண்டும். குஸ்குஸ் என்பது மிகவும் விரைவாக வேகக்கூடிய ஒன்று.
  3. ஒரு பங்கு குஸ்குஸ்க்கு சுமார் ரெண்டு பங்கு நீர் தேவை. தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  4. கொதிக்கும்போது அதில் குஸ்குசையும் சேர்த்து மூடி வைத்து விடவும். சில நிமிடங்களில் தண்ணீர் உறிஞ்சப்பட்டுவிடும். அதனால் கொஞ்சம் தண்ணீர் மிச்சம் இருக்கும்போதே அடுப்பை அணைத்துவிட்டால் உள்ளே உள்ள சூட்டில் பதமாக வெந்துவிடும். நாம் எல்லாவற்றையும் அசெம்பிள் பண்ணும் வரை இது இப்படியே இருக்கட்டும்.
  5. இனி காய்கறிகளை நறுக்கி தயார் செய்யலாம். முதலில் பிராக்கலியை பூக்களாகப் பிய்த்து கொதிநீரில் போட்டு soft ஆனதும் எடுத்து வடியவிடவும்.  மற்ற காய்கறிகளையும், ஆலிவ்ஸ்-ஐயும் நறுக்கி வைக்கவும்.
  6. கிச்சன் கவுண்டரில் ஒரு டார்டியாவை பரத்தவும். இனி ஒவ்வொன்றாக உள்ளே வைக்கலாம். (குறிப்பு: எல்லாவற்றையும் மிகக் குறைந்த அளவில், ஒரு ஓரத்தில் படுக்கைவாக்கில் arrange செய்தால் stuffings வெளியில் வராமல் இருக்கும். விவரங்களுக்கு வீடியோவைப் பார்க்கவும்.)
  7. இங்கே குஸ்குஸ் தான் பேஸ் என்பதால் பேஸிலிருந்து ஆரம்பிக்கலாம். ஒரு ஸ்பூன் குஸ்குஸ் வைத்து கூடவே ஹோம்மேட் சாஸ் வைக்கவும்.
  8. அடுத்து ஒவ்வொரு காயாக சிறிய அளவில் வைத்து, சுவைக்காக உப்பு, எலுமிச்சை சாறு தூவி மறுபடி சாஸ் வைக்கவும்.
  9. இனி, பரிட்டோவை சுருட்டும் நேரம். உள்ளே வைத்த stuffings வெளியில் வராதபடி (உங்கள் அருகில் இருக்கும் ஓரத்தை) பாய் சுருட்டுவது போல நிதானமாக சுருட்டவும்.  பாதி சுருட்டியதும் இரண்டு புற ஓரங்களை உள்ளே மடித்து டக் இன் செய்து மீதியையும் சுருட்டி, விளிம்பு கீழ்ப்புறம் இருப்பது போல ஒரு தவாவில் வைத்து அடுக்கவும்.  (முதல் wrap க்கு தடுமாறினாலும் அடுத்தடுத்து மாஸ்டர் பண்ணிக்கலாம்…;) )
  10. சுருட்டிவைத்த பரிட்டோக்களின் மேலே மிக மிகக் குறைவான எண்ணெயை பிரஷ் செய்து லேசாக சுடும் வரை அடுப்பில் வைத்து திருப்பிவிடவும். அதிக நேரம் சூடாக்கினால் டார்டியாக்கள் கிறிஸ்பாகி உடைந்துவிடும் என்பதால் சூடானதும் எடுத்துவிடலாம்.

 

 

குறிப்பு:

அவகாடோவை சூடு படுத்தும்போது சுவையில் ஒரு வித வேறுபாடு வரும்.  அதை விரும்பாதவர்கள் உள்ளே அவகாடோவை வைக்காமல் Guacamole என்கிற டிப் தனியாக செய்து பரிட்டோவுடன் சாப்பிடலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *