Milagu Puliyodharai / Pepper Tamarind Rice

Milagu Puliyodharai / Pepper Tamarind Rice

Iyengar puliyodharai is something very special in our south Indian culture. Memories of having puliyodharai as prasadam at temples come flooding back at the mention of the dish. It is also traditionally prepared for many an Iyengar festivals. And as we celebrate Kanu tomorrow, I thought it would be perfect to share a recipe for Pepper Puliyodharai. The peppery hint of the spice in the puliyodharai offers a fresh taste to the normal puliyodharai that is very very welcome especially for those who make puliyodharai very often.

Read in Tamil

 

Ingredients:

 

List 1 – To make Pulikaichal or Spicy Tamarind Paste:

Big Lemon sized – Tamarind (tightly rolled)

1 cup – Hot water

3 – Red Chillies

1 tbsp – Gingelly oil

1 tsp each – Mustard seeds, Urad dal and Channa dal

½ tsp – Asafetida Powder

1 tsp – Turmeric powder

1 sprig – Curry Leaves

1 tbsp (heaped) – Coarse Salt (powder the salt for better mixing)

 

List 2 – To roast and grind:

2 tsp – Fenugreek seeds

2 tbsp – Coriander seeds

6 – Whole Red Chillies (or to taste)

1 tbsp – Black Pepper

1 to 1 ½ tsp – Gingelly Oil

 

List 3 – For seasoning the rice:

2 tbsp – Gingelly oil

¼ cup – Raw Groundnuts

½ tsp – Mustard seeds

½ tsp – Urad dal

½ tsp – Channa dal

1 sprig – Curry leaves

¼ tsp – Asafetida powder

½ tsp – Turmeric powder

Salt to taste

And

A big bowl of cooked rice.

Method:

  1. Remove the fibers and seeds from the tamarind and soak in hot water along with 2 chillies for about 2 hours and grind to a fine paste along with the salt.
  2. Wash and cook rice with 2 ½ cups of water in the meantime. The rice should be non sticky.

Tips: Adding a spoon of lemon juice while cooking the rice ensures fluffy and pure white rice.

  1. Roast fenugreek seeds in a dry pan till golden in color. Grind to a powder (Spice 1).
  2. Add ¾ tsp oil to it and roast daniya (coriander) seeds and 6 chilies together to a golden color or till it emits nice aroma. Powder this coarsely (Spice 2).  (This powder can be used according to taste and can be stored in refridgerator for future use).
  3. Add the remaining ¾ tsp oil to the pan and roast the black pepper lightly. See to that the pepper doesn’t splatter or else it would change the flavor of the tamarind rice. Powder this coarsely. (Spice 3)
  4. Finally let us do the seasonings ready. You can use the oil given in the list according to necessity.  Add little oil to the pan and roast the groundnuts well.  Remove and season the mustard seeds, urad and channa dal together.  This gives a crispness to the Puliyodharai.  Next step is to prepare the Pulikaichal ready.
  5. Heat a pan and add oil. (The measurement is given in the Ingredients list 1 separately). Once hot, add the mustard seeds.  When it starts to spalatter, add the remaining 1 chili, urad and channa dal to it and roast until golden brown.  Add asafetida and curry leaves to it.
  6. Add the ground tamarind paste and saute till raw smell of the tamarind vanishes. This will take about 10 to 15 minutes.  Finally add 1 tsp of turmeric powder and half spoon roasted fenugreek powder (See Spice 1 above) to the paste.
  7. Switch off the stove when the oil starts to ooze out and the paste leaves the sides of the pan. You can choose to add more oil if necessary.  Pulikaichal is ready.

 

How to assemble everything?

  1. Spread the cooked rice in a broad pan or plate. Cool for a while.  Adding a spoon of gingelly oil helps the rice look separate and non sticky.
  2. Sprinkle turmeric powder, asafetida, ½ tsp of roasted fenugreek powder (Spice 1), roasted daniya + chili powder (Spice 2), roasted pepper powder (Spice 3), chopped curry leaves, seasoned mustard seeds and dals, roasted groundnuts and salt to taste one after another on top of the cooked rice.  (sorry for the long list)
  3. Finally add required amount of Pulikaichal and mix well. (I have taken 2 spoons of Pulikaichal here).
  4. Add salt. Remember that salt is already there in Pulikaichal. So add salt for the rice and spice powders used.
  5. Press in a container for about 30 minutes for the spices to infuse into the rice.
  6. Spicy, yummy, Pepper Puliyodharai is ready.
  7. Serve with Papads, Appalams or Chips.

Note:

  1. The pulikaichal can be prepared in advance and it doesn’t get spoilt even for weeks together.
  2. Similarly, the spice powders too do not loose their freshness if prepared in advance and stored in Refridgerator. These spice powders give a homemade effect even if store-bought Pulikaichal is used.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



மிளகுப் புளியோதரை:

 

 

புளியோதரை அல்லது புளிசாதம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? புளியோதரைன்னு சொன்னாலே பெருமாள் கோவில் பிரசாதம்தான் நினைவுக்கு வரும். அதிலும் ஐயங்கார் புளியோதரை என்றால் கொஞ்சம் ஸ்பெஷல்தான்.  நாளைக்கு கனுப்பண்டிகைக்கு ஒரு புளியோதரை பண்ணலாம்னு நினைச்சேன். சாதா புளியோதரையே சாப்பிட்டு அலுத்தவர்களுக்கு இந்த புளியோதரை கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்டா இருக்கும். இது மிளகு சேர்த்து செய்யும் மிளகுப் புளியோதரை. இந்த கனுப்பண்டிகைக்கு செய்து பார்க்கலாமே.

 

தேவையான பொருட்கள்:

 

List 1 – புளிக்காய்ச்சல் செய்யத் தேவையானவை:

பெரிய எலுமிச்சையளவு – புளி (அழுத்தமாக உருட்டியது)

1 cup – வெந்நீர்

3 – காய்ந்த மிளகாய்

1 tbsp – நல்லெண்ணெய்

1 tsp each – கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு

½ tsp – பெருங்காயத்தூள்

1 tsp – மஞ்சள்தூள்

1 ஆர்க்கு – கறிவேப்பிலை

1 tbsp (heaped) – கல்லுப்பு

 

List 2 – வறுத்து அரைக்க வேண்டியவை:

2 tsp – வெந்தயம்

2 tbsp – தனியா

6 – வரமிளகாய் (அல்லது காரத்துக்கு வேண்டியது)

1 tbsp – மிளகு

1 to 1 ½ tsp – நல்லெண்ணெய்

 

List 3 – சாதம் கலக்கத் தேவையானவை:

2 tbsp – நல்லெண்ணெய்

¼ cup – வேர்க்கடலை

½ tsp – கடுகு

½ tsp – உளுத்தம்பருப்பு

½ tsp – கடலைப்பருப்பு

1 ஆர்க்கு – கறிவேப்பிலை

¼ tsp – பெருங்காயத்தூள்

½ tsp – மஞ்சள்தூள்

சுவைக்கு வேண்டிய உப்பு

And

ஒரு பெரிய கிண்ணம் உதிராக வடித்த சாதம்

செய்முறை:

  1. புளியில் உள்ள கொட்டை, கோது நீக்கி ரெண்டு மிளகாயுடன் வெந்நீரில் ரெண்டு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் உப்பு சேர்த்து துவையல் போல அரைத்து வைக்கவும். (இது அவசரத்துக்கு உதவும் ஒரு மெதட்).
  2. புளி ஊறும்வரை சாதத்தை வடித்து வைக்கலாம். சாதம் உதிராக வரும்படி வடிக்கவும்.

டிப்ஸ்: சாதம் வடிக்கும்போது கொஞ்சம் எலுமிச்சை சாற்றை சேர்த்தால் சாதம் வெளுப்பாக, உதிர் உதிராக இருக்கும்.

  1. வறட்டு வாணலியில் வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும். (இது பொடி 1)
  2. அதே வாணலியில் முக்கால் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தனியா மற்றும் மிளகாய்களை நல்ல மணம் வரும்வரை வறுக்கவும். காரத்துக்கு வேண்டிய அளவு மிளகாய் எடுக்கலாம். இதுதான் புளிக்காய்ச்சலை புளியோதரையாக மாற்றும் உயிர் போன்ற பொடி (இது பொடி 2). எப்போது புளியோதரை செய்தாலும் இந்தப் பொடியைச் சேர்த்தால் வாசனை ஊரைக் கூட்டும்,
  3. மீதியுள்ள முக்கால் ஸ்பூன் எண்ணெயை சேர்த்து அதில் மிளகைப் போட்டு பொரிக்கவும். மிளகு படபடவென்று வெடிக்கும்வரை பொரியக்கூடாது, அப்படிப் பொரிந்தால் காரம் குறைந்து சுவை மாறிவிடும். இதையும் கொரகொரப்பாகப் பொடி செய்து வைக்கவும். (இது பொடி 3)
  4. இனி, லிஸ்ட் 3 கொடுத்துள்ளதன்படி சீசனிங் செய்யலாம். அதில் உள்ள எண்ணெயை தேவைப்பட்ட அளவு உபயோகித்துக்கொண்டு மீதியை சாதம் கலக்கும்போது உபயோகிக்கலாம்.
  5. முதலில் சிறிது எண்ணெயில் கடலையை வறுத்து வைக்கவும்.
  6. அடுத்து இன்னும் சிறிது எண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு வறுக்கவும். புளியோதரைக்கு crispness கொடுக்கக் கூடியவை இவை. இனி புளிக்காய்ச்சல் செய்யலாம்.
  7. வாணலியில் (லிஸ்ட் 1 ல் கொடுத்தபடி) எண்ணையில் கடுகு தாளித்து, மீதமுள்ள மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கணும்.
  8. இதில் அரைத்த புளி பேஸ்டை சேர்த்து புளிவாசனை போகும்வரை கிளறவும். இது சுமார் பத்து முதல் பதினைந்து நிமிடம் வரை ஆகும்.  கடைசியில் மஞ்சள் தூள் மற்றும் வறுத்த வெந்தயப் பொடி (பொடி 1) சேர்க்கவும்,
  9. வாணலியில் ஒட்டாமல் வந்து, சுற்றிலும் எண்ணெய் விட்டுக்கொண்டு வந்ததும் அடுப்பை அணைத்துவிடலாம். புளிக்காய்ச்சல் தயார்.

 

எப்படி சாதம் கலப்பது?

  1. உதிராக வடித்த சாதத்தை அகலமான தட்டில் / பாத்திரத்தில் போட்டு ஆற விடவும். மேலே ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வைத்தால் சாதம் உதிர் உதிராக பிரிந்துகொள்ளும்.
  2. அடுத்து மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் வெந்தயப்பொடி (பொடி 1), புளியோதரை பொடி (பொடி 2), வறுத்த மிளகு பொடி (பொடி 3), கறிவேப்பிலை, தாளித்த கடுகு மற்றும் பருப்புகால், வேர்க்கடலை, உப்பு என்று ஒவ்வொன்றாக சேர்க்கவும். (புளிக்காயச்சலில் உப்பு சேர்த்துள்ளதால் சாதத்துக்கும் மேல் பொடிகளுக்கும் வேண்டிய உப்பை மட்டும் சேர்க்கலாம்)
  3. கடைசியாக தேவையான அளவு புளிக்காய்ச்சல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். (இங்கே நான் ரெண்டு ஸ்பூன் அளவு சேர்த்துள்ளேன்).
  4. கலந்த புளியோதரையை அரை மணி நேரம் டப்பாவில் அழுத்தி வைத்தால் எல்லா சுவையும் சாதத்தில் இறங்கியிருக்கும்.
  5. சுவையான காரசாரமான மிளகுப் புளியோதரை தயார். பொறித்த அப்பளம் அல்லது சிப்ஸுடன் பரிமாறலாம்.

நோட்:

  1. புளிக்காயச்சலை முன்பே செய்து வைக்கலாம். இது பல வாரங்கள் ஆனாலும் கெடாது.
  2. அதே போல பொடிவகைகளும் கூட பிரிட்ஜில் செய்து வைத்துக்கொண்டால் freshness கெடாமல் இருக்கும்.
  3. கடையில் வாங்கிய புளிக்காய்ச்சல் என்றாலும் இந்தப் பொடிவகைகளை சேர்த்தால் வீட்டில் செய்த புளியோதரை போலவே இருக்கும்

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *