Poli – 2 Varieties, 2 methods

Poli – 2 Varieties, 2 methods

It is a tradition in many households to prepare Poli (Obbattu/Holige) during the festival of Bogi or the previous day of Makara sankranthi.  Most of us find preparing Poli at home a tedious process but it actually is not so, or atleast, it need not be!  I agree, the preparation and making process is quite time-consuming but here’s how you can make it easily. Polis made in this recipe are as easy as making Parathas for Lunch, that’s it.  Before I get to the simple method, I will also show you how to make Polis the traditional way.

Polis can be prepared with a variety of fillings inside.  (As far as I know, there are 14 varieties of Poli recipes). Here, I am going to show you about two varieties; the traditional one using Jaggery, and another using Sugar. More posts will come soon ;). Now over to the recipe.
Read in Tamil

 

Ingredients:

For the outer dough:

2 ½ cup – All Purpose Flour / Maida

½ tsp – Salt

½ tsp – Turmeric Powder

4 to 6 tbsp – Cooking Oil

Water required to knead the dough.

For the fillings:

1 ½ cups – Bengal Gram (kadalaparuppu)

½ cup – Grated Jaggery

½ cup – Powdered Sugar

1 tsp – Cardamom Powder

2 to 3 tbsp – Desiccated Coconut

2 to 3 tbsp – Coconut Milk (optional)

¼ cup – Water

¼ cup (or as per need) – Melted Ghee

2 to 4 Banana Leaves or a couple of thick Polythene sheets

2 to 3 tbsp – Rice Flour

Method:

  1. Add salt and turmeric powder to the Flour and mix well.
  2. Add adequate water to knead to a stiff dough like that of chapatti dough. Grease your hands with oil and knead well.

Tips: Kneading in a Food Processor or in Mortar and Pestle helps the Polis without cracks.

  1. Add the remaining oil on top of the dough and let it rest for at least 3 hours. In the meantime, let us prepare the filling (Pooranam).

 

For the fillings/Pooranam:

  1. Wash and soak Bengal gram (kadalaiparuppu) in hot water for about an hour. Kadalaparuppu doesn’t take too much time to soak.
  2. Pressure cook the dal with adequate water for about 2 to 3 whistles.
  3. It is sufficient if the dal is just soft enough when pressed between two fingers. Leaving the dal to remain inside the cooker for a longer time makes it mushy. So switch off the stove and release the pressure immediately.
  4. Drain the cooked dal in a colander and leave it till completely cool.
  5. Once cool, blitz in a blender in pulse mode initially and then as per normal to a fine wet powder. Do this step in small batches for best results.
  6. Now the dal is ready. We have to prepare two different Pooranams using Jaggery and Powdered sugar.

 

Fillings for Chakkara poli:

  1. Powder the sugar in a mixie jar.
  2. Divide the powdered dal into two portions and add the powdered sugar to one. Add half of the cardamom powder to it and mix well using your hands. (if you find the filling too watery, stop adding powdered sugar)
  3. Now the Pooranam / filling is ready for the Chakkara poli.

 

Fillings for Vella Poli:

  1. Add ¼ cup water to the grated Jaggery and bring to a boil. Once the jaggery is dissolved completely, filter the impurities present in it.
  2. Add the remaining dal powder to the filtered syrup and stir well till it thickens.
  3. Add the remaining cardamom powder and the desiccated coconut to it and mix well. It is purely optional to use Desiccated coconut here.  You can use ground fresh coconut grates or coconut milk to it or simply leave it if you are not a fan of coconut.

Tips: Sometimes the jaggery filling might become hard when cool, if overcooked.  This can be fixed by adding a few spoons of powdered sugar to it or coconut milk to loosen the consistency.

  1. Now both the fillings are ready. The next step is to pat the Polis into discs.  This can be done two ways as follows.

 

First method – Flattening polis on a Banana leaf/or a Polythene sheet:

  1. Take a small piece of banana leaf. Wash and wipe to dry.  Grease the leaf with oil.
  2. Take gooseberry sized ball of the outer dough and flatten with greased fingers into a thick disc. Due to the gluten present in the flour, the shape will not be perfect.  But never mind.
  3. Keep a small portion of the filling rolled into a ball, in the center and gently pull the outer dough to wrap or enclose it. See to that the stuffing is not peeking out.

Tips: Flatten the filling a bit before enclosing or wrapping it with the outer dough.  Flattening the filling helps to spread the poli easily.

  1. Grease the fingers then and there and spread into a disc within the greased portion of the banana leaf.
  2. Heat a skillet on the stove and carefully transfer the Poli to it. This can be done easily on practice.
  3. Drizzle some melted ghee around each Poli till crisp and golden brown.
  4. Flip and repeat the same. Remove once done to a wide plate. Serve hot with melted ghee on top.

Tips: If you wish to store them for later use, the Polis should be placed side by side on a wider plate till cool, to avoid sticking to each other.  They can be microwaved before serving with melted ghee on top.

 

Second method – Flattening the Poli using a Rolling Pin:

  1. Take a lemon sized ball of the outer dough and spread with a rolling pin.
  2. Place a ball of the filling in the center and wrap it.
  3. Sprinkle some rice flour on the board as well as on the dough and spread to a disc using a rolling pin.
  4. Transfer to the hot griddle and fry like chapatti using ghee. Flip and repeat for the other side too.  This will be easier, dry and non-messy with a longer shelf life.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



சர்க்கரைப்போளி / வெல்லப்போளி – 2 முறையில் 2 வகை போளி:

 

 

போகிப்பண்டிகைக்கு போளி (Obbattu / Holige)  செய்வது பலர் வீடுகளில் வழக்கமா இருக்கு.  போளி செய்யணும்னா, இது நிறைய வேலை வாங்கு விஷயமாச்சேன்னு பலருக்கும் பயம் இருக்கும். அப்படியெல்லாம் இல்லை…நிறைய நேரம் எடுக்கும்னு வேணும்னா சொல்லலாம்…நாம் லஞ்சுக்கு பராத்தா செய்வது போல இதுவும் சுலபம்தான்.  போளிகள் பல விதத்தில் செய்யப் படுகிறது. (எனக்குத் தெரிந்து 14 வகை இருக்கு) வெல்லம் போட்டுச் செய்வது ட்ரெடிஷனல் வகை.  வெல்லம் பிடிக்காதுன்னா சர்க்கரை போடலாம். இங்கே அந்த ரெண்டு விதம்தான் சொல்லப் போறேன். தொடர்ந்து நேரம் கிடைக்கும்போது மற்ற வகைகளையும் ஒவ்வொண்ணா போடறேன்.

 

தேவையான பொருட்கள்:

மேல் மாவுக்கு:                              

2 ½ cup – மைதா

½ tsp – உப்பு

½ tsp – மஞ்சள்தூள்

4 to 6 tbsp – சமையல் எண்ணெய்

தண்ணீர் – மாவு பிசையத் தேவையான அளவு

பூரணத்துக்கு:

1 ½ cups – கடலைப்பருப்பு

½ cup – துருவிய வெல்லம்

½ cup – பொடித்த சர்க்கரை

1 tsp – ஏலத்தூள்

2 to 3 tbsp – கொப்பரைப் பொடி

2 to 3 tbsp – தேங்காய்ப்பால் (விரும்பினால்)

¼ cup – தண்ணீர்

¼ cup (அல்லது தேவைக்கேற்ப) – உருக்கிய நெய்

2 to 4 – வாழையிலை அல்லது திக் பாலிதீன் ஷீட்

2 to 3 tbsp – அரிசி மாவு

மேல் மாவு செய்முறை:

  1. மைதாவில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
  2. தேவையான அளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு போலப் பிசையவும். மைதா என்பதால் கையில் ஒட்டிக்கொள்ளும். அதனால் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு மாவு பிசையலாம்.

குறிப்பு:

வீட்டில் மாவு பிசையும் kneading blade இருந்தால் ஒரு முறை அதில் போட்டு பிசையலாம். அல்லது சின்ன அம்மியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்தால் போளிகள் விரிசல் விடாமல் தட்ட வரும்.

  1. மீதமுள்ள எண்ணெயை பிசைந்த மாவின் மேலே விட்டு குறைந்த பக்ஷம் மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும். மாவு அதிகம் ஊறுவதும் மிக முக்கியம். ஊறும் நேரத்தில் பூரணத்தை ரெடி பண்ணலாம்.

 

பூரணம் செய்முறை:

  1. கடலைப்பருப்பை நன்றாகக் கழுவிட்டு சுடுநீரில் ஊறவிடவும். கடலைப்பருப்பு ஊற நிறைய நேரம் தேவையில்லை.  சுமார் ஒரு மணி நேரம் வைத்தாலும் போதும்.
  2. ஏற்கனவே ஊறின பருப்பு என்பதால் குக்கரில் ரெண்டு அல்லது மூணு விசில் வைத்தால் பருப்பு சரியான பதத்தில் வெந்துவிடும். விரல்களுக்கு நடுவில் ஒரு பருப்பை வைத்து நசுக்கிப் பார்த்தால் பொடியாக ஆகவேண்டும். அதிக நேரம் பருப்பை குக்கரில் விட்டுவைத்தால் குழைந்து போகும் என்பதால் விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பிரஷர் ரிலீஸ் செய்துவிடலாம்.
  3. வெந்த பருப்பை வடிதட்டியில் கொட்டி வடிக்கவும். தண்ணீர் வடிந்து பருப்பு நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டுப் பொடிக்கவும். கொஞ்சகொஞ்சமாக மிக்சியில் போட்டு அரைத்தால் நைசாக மாவாகும். இந்த மாவு புட்டு போல பிடித்தால் பிடிக்கவும், விட்டால் உதிரவும் வேண்டும்.
  4. பருப்பு தயார் ஆகிவிட்டது. இதை சர்க்கரை போளிக்கும் வெல்லப்போளிக்கும் தயார் செய்யலாம்.

 

சர்க்கரைப்போளிக்கு பூரணம் செய்முறை:

  1. முதலில் சர்க்கரையைப் பொடிக்கவும்.
  2. பொடித்த பருப்பை ரெண்டு பகுதியாகப் பிரிக்கவும். ஒரு பகுதியில் சர்க்கரைப் பொடியைச் சேர்த்து அரை ஸ்பூன் ஏலத்தூளையும் சேர்த்து கைகளால் நன்றாகப் பிசையவும். ரொம்பவும் நீர்த்துப் போனால் சர்க்கரைப் பொடி சேர்ப்பதை நிறுத்திவிடலாம். சர்க்கரைப்போளிக்கு பூரணம் தயார். அடுத்து மீதமுள்ள பருப்பில் வெல்லப்பூரணம் தயார் செய்யலாம்.

 

வெல்லப்பூரணம் செய்முறை:

  1. துருவின வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்.
  2. வெல்லம் கரைந்ததும் கல் மண் போக வடிகட்டவும்.
  3. எடுத்துவைத்த பருப்புப் பொடியுடன் இந்த வெல்ல நீரையும் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.
  4. மீதமுள்ள அரை ஸ்பூன் ஏலத்தூளையும் சேர்த்து விரும்பினால் கொப்பரைப் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். இங்கே தேங்காய் பொடிக்கு பதில் பிரெஷ் தேங்காயை அரைத்துச் சேர்ப்பதோ, தேங்காய்ப்பால் சேர்ப்பதோ அவரவர் விருப்பம்.  தேங்காய் சுவையே விரும்பாதவர்கள் அப்படியே விட்டுவிடலாம்.

குறிப்பு:

ஆற ஆற வெல்லப்பூரணம் சில சமயம் கெட்டியாகும்.  அதை சரி செய்ய சில ஸ்பூன் சர்க்கரைப் பொடி சேர்த்துப் பிசையலாம் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துப் பிசையலாம்.

  1. இப்போது ரெண்டு வகைப் பூரணங்களும் தயார். இனி போளிகளை ரெண்டு விதமாக செய்யும் முறையைப் பார்க்கலாம்.

 

முதல் முறை – வாழையிலையில் போளி தட்டுவது:

  1. ஒரு சின்ன வாழையிலையை நன்றாகக் கழுவித் துடைத்துக் கொஞ்சம் எண்ணெயை தடவி வைக்கவும்.
  2. நெல்லிக்காய் அளவு மேல் மாவை எடுத்து கைகளால் தட்டிப் பரத்தவும். மைதாவில் உள்ள ஜவ்வுத்தன்மையால் ஷேப் சரியா வராது.  கண்டுக்காதீங்க…
  3. இதன் நடுவில் ஒரு சிறு உருண்டை பூரணத்தை வைத்து மேல் மாவால் சுற்றிலும் கவர் செய்யவும்.

குறிப்பு:

பூரணத்தை உருட்டி வைக்காமல் வடை போல கொஞ்சம் தட்டி வைத்தால் போளி தட்டும்போது சுலபமாக பரவும்.

  1. கைகளில் அவ்வப்போது எண்ணெய் தொட்டுக்கொண்டு தட்டித்தட்டி பெரிதாக செய்யவும். வாழையிலையில் எண்ணெய் தடவின பகுதியிலேயே தட்டினால் சுலபமாக இருக்கும்.
  2. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் வாழையிலையில் தட்டிவைத்த போளியை சிதையாமல் மாற்றவும். முதலில் சரியாக வராவிட்டாலும் சிறியதாகத் தட்டினால், பழகப் பழக சரியாக வந்துவிடும்.
  3. சுற்றிலும் நெய் விட்டு சப்பாத்தி போல இருபுறமும் மொறுமொறுவென்று செய்து எடுத்து வைக்கவும். போளிக்கு எண்ணெயை விட நெய்தான் நல்லது.
  4. சுடச்சுட போளியை மேலே நெய் தடவி பரிமாறலாம்.

டிப்ஸ்:

தயாரான போளியை ஒரு தட்டில் தனித்தனியே எடுத்து வைக்கவும்.  ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் ஆறினதும் ஒட்டிக்கொண்டுவிடும். அதேபோல பரிமாறும்போது சூடாக வேண்டும் என்றால் மைக்ரோவேவ் செய்து மேலே துளி நெய்யை தடவிப் பரிமாறலாம். மைக்ரோவேவ் இல்லையென்றால் தோசைக்கல்லில் லேசாக சுடவைத்து பரிமாறலாம்.

 

இரண்டாவது முறை – சப்பாத்தி ஸ்டைலில் செய்வது:

  1. இதற்கு எலுமிச்சை அளவு மேல் மாவை எடுத்து சப்பாத்தி போல தேய்க்கவும்.
  2. நடுவில் ஒரு உருண்டை பூரணத்தை வைத்து மேல் மாவால் மூடவும்.
  3. மேலே கொஞ்சம் அரிசிமாவைத் தூவி குழவியால் சப்பாத்தி போல பெரிதாகப் பரத்தவும்.
  4. தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் ஊற்றி எப்போதும் போல் போளி தயாரிக்கலாம். இது செய்வதற்கு சுலபமாகவும், கையில் கசகசவென்று ஒட்டாமல் மெல்லிதாக வரும்.  அதிக நாள் வைத்திருந்து சாப்பிடவும் ஏற்றது.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *