Quick Vegetable Sabzi with Instant Gravy Sauce

Quick Vegetable Sabzi with Instant Gravy Sauce

I had shared the recipe for my Homemade Instant Gravy Sauce recently. Today, I’m going to show you how to make a quick sabzi for chapattis using this Sauce.

If you’re one of those who feel it’s way easier to make chapattis than a sabzi, then you’ll adore this recipe! Takes hardly 15 minutes to make this sabzi.

Office-goers, housewives, bachelors who cook or just anyone who is under a time crunch in the kitchen can prepare this side dish for chapattis and other flatbreads using my Instant Gravy Sauce. Ok, shall we move on to the recipe?

 

Read in Tamil

 

Ingredients:

1 cup – Instant Gravy Sauce

1 tsp – finely chopped ginger + green chili (or Paste)

1 cup – Beans, Peas, Cauliflower, carrots or vegetables of your choice

2 – Medium sized Potatoes

1 tsp – Finely chopped green chili

1 – Bay Leaf

1 – Cinnamon stick

½ to ¾ tsp – Garam Masala Powder

½ tsp – Turmeric Powder

½ to ¾ tsp – Salt

¾ cup – Water

2 tsp – Cooking Oil

Method:

  1. Cut the vegetables you have in your pantry and measure to one full cup.
  2. Wash and peel the potatoes and chop into medium sized dices. Peeling helps in quickening the cooking process. Moreover it will be easier to mash the peeled potatoes.
  3. Add half a cup of water to a 3 liter pressure cooker along with 2 teaspoons of oil.
  4. Add the chopped vegetables to it and spread evenly.
  5. Layer the peeled and diced potatoes on top of the veggies.

Tips:

Working ladies can pre-boil and refrigerate the potatoes for later use.  This can be stored upto 1 week.  Whenever needed, the potatoes can be dipped into hot water and peeled.  This step will further lessen the cooking time.

  1. Add a whole Bay leaf and a stick of cinnamon broken into pieces for a nice flavor. Add the chopped green chili too now.
  2. The next step is to add the Instant gravy sauce to it.
  3. Sprinkle Garam masala, salt and Turmeric powder on top. (Remember, we have added salt already to the sauce.  Salt and masala powder is added here for the vegetables only.  I have added Turmeric powder here to give a bright color to the Gravy)
  4. Close the cooker and cook for 3 to 4 whistles. If using boiled potatoes, it is enough to cook for 2 whistles on high heat.
  5. Switch off the cooker and wait for 5 to 8 minutes and release the pressure to open the cooker. If you find it watery, you can switch it on again, mash the vegetables and cook for few more minutes till the desired consistency is reached.
  6. This super quick sabzi is a perfect match for idli, dosas and rotis.

 

 

Variations:

To make it rich, add 2 spoons of fresh cream or a ladle of boiled milk or coconut milk on top before serving.  Or add a layer of cottage cheese (Paneer) on top of the vegetables before cooking.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



இன்ஸ்டன்ட் கிரேவி சாஸில் ஒரு க்விக் சைட் டிஷ்:

 

 

ரீசன்ட்டா இன்ஸ்டன்ட் கிரேவி சாஸ்ன்னு ஒரு ரெசிபி சொல்லியிருந்தேன்.  அதை வைச்சு என்ன பண்ணலாம்னு இங்கே ஒரு சாம்பிள் பார்க்கலாம்.

லஞ்சுக்கு சப்பாத்தி கூட பண்ணிடலாம்…ஆனா தொட்டுக்க சப்ஜி பண்ணும்போதுதான் நிறைய நேரம் எடுக்கும்னு feel பண்றவங்களுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும். (ஆமாம்…பதினைஞ்சு நிமிஷத்துல வேலை முடிஞ்சுடும்.)

வேலைக்குப் போகும் பெண்களோ, வீட்டில் உள்ள பெண்களோ, தாங்களே சமைத்து சாப்பிடும் ஆண்களோ, (இவங்க சப்பாத்தியை மட்டும் சுலபமா பண்ணிடுவாங்களா?ன்னு கேக்கக்கூடாது…அவங்க frozen rotis வாங்கிடுவாங்க… J ) அல்லது சமையலறையில் அதிக நேரம் செலவிட முடியாதவங்க யாராயிருந்தாலும் சுலபமா சைட் டிஷ் பண்ணலாம்.

சரி, இப்போ இன்ஸ்டன்ட் கிரேவி சாஸை உபயோகித்து ஒரு சூப்பர் க்விக் சைட்டிஷ் தயாரிக்கலாமா?

 

தேவையான பொருட்கள்:

1 cup – இன்ஸ்டன்ட் கிரேவி சாஸ்

1 tsp – இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது (அல்லது பேஸ்ட்)

1 cup – பீன்ஸ், பட்டாணி, காலிபிளவர், காரட் (அல்லது விரும்பிய காய்கறிகள்)

2 – உருளைக்கிழங்கு

1 tsp – பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்

1 – பிரிஞ்சி இலை

ஒரு துண்டு – பட்டை

½ to ¾ tsp – கரம் மசாலா தூள்

½ tsp – மஞ்சள் தூள்

½ to ¾ tsp – உப்பு

¾ cup – தண்ணீர்

2 tsp – எண்ணெய்

செய்முறை:

  1. முதலில் கைவசம் உள்ள காய்கறிகளை பொடியாக நறுக்கி 1 கப் வரும் அளவு எடுத்து வைக்கவும்.
  2. கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தோல் சீவிவிட்டு நறுக்கி வேக வைத்தால் சீக்கிரம் வேகுவதோடு மசிக்கவும் சுலபமாக இருக்கும்.
  3. குக்கரில் அரை கப் தண்ணீர் விட்டு ரெண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
  4. அதில் நறுக்கிவைத்த காய்கறிகளை பரவலாகப் போடவும்.
  5. கடைசியில் தோல் சீவிய கிழங்கை போடலாம்.

டிப்ஸ்:

வேலைக்கு போகும் பெண்கள் உருளைக்கிழங்கை தோலுடன் வேக வைத்து நன்றாக ஆறியதும் பிரிட்ஜில் வைத்துக்கொண்டால் (தோலுடன் ஒரு வாரம் வரை கூட பிரிட்ஜில் நன்றாகவே இருக்கும்) தேவைப்படும்போது கொதிநீரில் போட்டு தோல் உரித்து கையால் மசித்துச் சேர்க்கலாம். இதில் இன்னும் வேலை சுலபம்.

  1. பிரெஷ் ஸ்பைசைசுக்காக மேலே ஒரு பிரிஞ்சி இலை மற்றும் பட்டைத் துண்டு சேர்க்கலாம். இத்துடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாயையும் சேர்த்து விடலாம்.
  2. அடுத்ததாக இன்ஸ்டன்ட் கிரேவி சாஸையும் சேர்க்கவும்.
  3. மேலே கரம் மசாலா தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். (நாம் கிரேவி சாஸில் உப்பு, மசாலா தூள் எல்லாம் சேர்த்திருக்கிறோம் என்பதால் இங்கே காய்கறிகளுக்கு தேவையான உப்பு மற்றும் மசாலா தூளும் சேர்த்தால் போதும். நல்ல நிறத்துக்காக நான் மஞ்சள் தூள் சேர்த்திருக்கிறேன்.)
  4. குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் வரும்வரை வைத்து அடுப்பை அணைக்கவும். வெந்த கிழங்கை உபயோகிப்பதானால் ஹை ஹீட்டில் ரெண்டு விசில் வந்தாலும் கூடப் போதும்.
  5. அடுப்பை அணைத்ததும் 5 to 8 நிமிடங்கள் கழித்து பிரஷர் ரிலீஸ் செய்து குக்கரைத் திறந்து காய்கறிகளை மசிக்கவும். தேவைப்பட்டால் அடுப்பை ஆன் செய்து சற்று நேரம் கிளறலாம்.
  6. நமக்கு வேண்டிய consistency வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சூப்பர் க்விக் சைட் டிஷ் with இன்ஸ்டன்ட் கிரேவி சாஸ் தயார். இது சப்பாத்தி தோசை பூரி என்று எல்லாவற்றுக்கும் ஏற்றது.

 

 

Variations:

இந்த சைட் டிஷ்ஷை இன்னும் ரிச்சாக மாற்ற மேலே 2 ஸ்பூன் பிரெஷ் க்ரீம் அல்லது ஒரு கரண்டி காய்ச்சின பால் அல்லது தேங்காய் பால் சேர்க்கலாம். விரும்பினால் காய்கறிகளுக்கு மேலே பனீர் துண்டங்களையும் போட்டு குக்கரை ஆன் செய்யலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



2 thoughts on “Quick Vegetable Sabzi with Instant Gravy Sauce”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *