How to – Hacks

Pressure Cooker as Oven


Skip to read in Tamil

Convert your pressure cooker into your oven!

Place a metal coaster or a thick plate upside down, inside the cooker.

Keep the flame as low as you can.

If you are using the cooker’s lid, remember to remove the gasket and the weight. Or simply use any lid which covers the cooker.

Just close the lid and keep the flame as low as you can. Keep it on for ten minutes before you bake; this is equivalent to preheating an oven. You don’t need to heap salt or sand inside the cooker. You just need to place a metal coaster or a thick plate upside down inside the cooker. Just ensure that the cake tin does not come in direct contact with the base of the cooker.

I personally adore cakes baked in cookers because I find them softer and fluffier than traditionally baked cakes.

Most methods of baking in a cooker will ask you to heap sand or salt. However, in my experience, placing salt or sand blackens and spoils the cooker and the bakeware. So I simply place a coaster.

Aluminium bakeware works best for baking in a cooker. Don’t use dark metal bakeware because, in my experience, the cakes don’t turn out well in that. I would suggest you go out and buy aluminium bakeware that fits your cooker perfectly and you should be able to use it well for several years.

Although you can use any cooker to bake cakes, if you intend to bake in cookers regularly, use an old one. You may use the cooker you normally use everyday for baking but I wouldn’t advise it. Since pressure cookers aren’t designed for baking, we need not court the risk of pressure cooker accidents by using it for both purposes.

Further, when using an old cooker for baking, you need not use the cooker’s lid. As seen in the picture, you can use any lid that fits your cooker tightly without leaving any gap for the heat to escape.

When baking in a cooker, do take note that the baking time of a recipe does not matter. This is because we cannot adjust the flame or temperature. You simply need to check if your cake is done baking using the toothpick test.

A word of caution: resist the temptation to open and check on the cake every other minute because every time you remove the lid, the heat inside the cooker will escape and will not yield good results. So check on the cake not more than 4 or 5 times in the baking process.



வீட்டில் Oven இல்லையென்றாலும் பிரஷர் குக்கரில் கேக் செய்யலாம். குக்கரின் ரப்பர் கேஸ்கட், வெயிட் ரெண்டையும் முதலில் ஒளிச்சு வைச்சுடுங்க.  இது ரெண்டும் கூடவே கூடாது.  அல்லது படத்தில் காட்டியபடி குக்கரை மூடக்கூடிய எந்த தட்டு என்றாலும் பரவாயில்லை. குக்கரை சும்மா அதன் மூடியால் மூடி கேஸ் அடுப்பை எவ்வளவு குறைவான flameல் வைக்க முடியுமோ, அவ்வளவு குறைவா வைக்கவும். பத்து நிமிஷம் வரை வைப்பதுதான் Pre heating.

குக்கர் உள்ளே மணல், உப்பு என்று எதுவுமே தேவையில்லை.  படத்தில் காட்டியபடி ஒரு coaster வைக்கணும்.  அல்லது குக்கர் தட்டு இருந்தா அதையே கவிழ்த்து வைக்கலாம்.  குக்கர் baseஉடன் கேக் டின்னுக்கு contact இருக்கக் கூடாது.  அவ்வளவுதான் விஷயம்.  மணல், உப்பு எல்லாம் குக்கரை கருப்பா ஆக்கிடும்.

அலுமினியம் டின் நல்லா வொர்க் ஆகும்.  குக்கருக்கு ஏத்த சைசில் வாங்கிக் கொண்டால்  போதும்.  Oven கேக்கை விட குக்கர் கேக் soft ஆ வரும்.

Oven ஒவ்வொரு மேக்கும் ஒவ்வொரு விதம்.  நாம் படிக்கும் ரெசிபியில் சொன்ன ஹீட் எல்லாருக்கும் எல்லா அவனுக்கும் வொர்க் ஆகாது. குக்கரில் ஹீட்டை ஏத்தி இறக்க முடியாது.  குறைந்த தீயில் எவ்வளவு நேரம் ஆனாலும் நல்ல கேக் வரும்.  வீட்டில் பழைய குக்கர் இருந்தால் அதை கேக் செய்ய என்றே வைத்துக்கொள்ளலாம்.  வீட்டில் பயன்படுத்தும் குக்கரை அடிக்கடி இப்படி பயன் படுத்தவேண்டாம்.

குக்கரை அடிக்கடி திறந்து பார்ப்பதும் தவறு,  (நொடிக்கு ஒருமுறை என்ன ஆகிறது என்று பார்க்காமல் நாலைந்து முறை திறந்தால் தப்பில்லை). நேரம் அதிகம் ஆகும்.  கேக் தயாரானதும் வீடு முழுக்க நல்ல வாசனை வரும், அதை வைத்தே கேக் ஆனது என்று தெரிந்து கொள்ளலாம்.

How to prepare Rice Flour for Uppu Seedai


Skip to read in Tamil

 

 

Wash and soak 1 kg Raw rice for about 15 minutes.  Drain in a Colander and spread on a clean cloth for about 30 minutes.  Toast the drained rice in a pan for 2 minutes. Spread on a newspaper and grind to a fine powder.  Getting it ground in a Flourmill saves more time. Sieve and spread on a newspaper to cool. If grinding in a mixie, grind in small quantities, sieve and continue till the end.

Before starting to prepare the Seedais, it is always good to roast them lightly to avoid bursting while frying.

Tips: sometimes Seedais explode while frying in oil because of the moisture content in the flour.  Toasting the rice before grinding and toasting the flour again before kneading to a dough prevent them from exploding.

Note:  The flour prepared in the above manner is used in the preparations of Seedais, Murukkus, Thattais etc.

 

மாவு தயாரிக்கும்  முறை 

 

 
ஒரு கிலோ  பச்சரிசியை நன்கு களைந்து பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு பிறகு வடிய விடவும். துணியில் அரை மணி ஆறியதும் சூடான வாணலியில் ஒரு முறை பிரட்டிக்கொண்டு மிஷினில் கொடுத்து மாவாக்கிகொள்ளவும்.  (அல்லது வீட்டிலும் அரைக்கலாம்)

மாவு அரைத்தவுடன் ஒரு பேப்பரில் கொட்டி நன்கு ஆற விடவும்.  ஆறிய மாவை கட்டிகளின்றி சலிக்கவும்.

 (டிப்ஸ்: ஊறிய அரிசியை லேசாக வறுத்திருந்தாலும், வாணலியில் மாவை கோலம் போடும் பதத்திற்கு வறுத்தாலும் சீடைகள் வெடிக்காது.)

கை முறுக்கு, முள்ளு முறுக்கு, தட்டை, சீடை வகைகள் எல்லாவற்றிற்கும் இதே முறையில் மாவு தயாரித்தால் நன்றாக இருக்கும்.

How to prepare Roasted Urad Dal Flour


Skip to read in Tamil

 

 

Roast a cup of Whole Urad dal till nice aroma emanates.  By this time, the dals would have turned golden in color.  It is always better to roast them in medium heat as the dals tend to blacken soon.

Wait till it gets warm, grind to a fine powder and sieve.

This is the basic and binding ingredient necessary in the preparations of Seedais, Thattai, Murukku etc which gives crispiness to the dish.

 

உளுத்தமாவு தயாரிக்கும் முறை

 

 

ஒரு ஆழாக்கு உளுந்தை வாணலியில் நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.  இதை மிஷினிலோ மிக்ஸியிலோ நைசாக அரைக்கவும். அரைத்ததை நன்கு சலிக்கவும்.    இந்த உளுத்தமாவு  முறுக்கு, வெல்லச்சீடை, உப்புச்சீடை, முள்ளு முறுக்கு , தட்டை தயாரிக்க தேவையானது..  இது நல்ல crispnessஐயும்  தரும்.

How to roast Ground nuts in a Pan

Skip to read in Tamil

Roast the nuts in an Iron Pan for better results.

Roast in medium flame.

Keep stirring the nuts for even roasting.

If the skin of the nuts split separately, we can learn that the roasting is done.  Spread on a newspaper or a wide plate and cool.

Once cooled rub between your hands and remove the skin. Winnowing helps to remove the skin completely.

 

வாணலியில் கடலையை வறுப்பது எப்படி?

இரும்பு வாணலி என்றால் கடலை சுலபமாக வறுபடும்.

மிதமான சூட்டில் கடலையை வறுக்கலாம்.

கருகாமல் பதமாக வறுபட அடிக்கடி கிளறிவிட்டுக்கொண்டே இருக்கலாம்.

தோல் பிளந்து கொண்டால் அல்லது கையால் தேய்க்கும்போது தோல் கழண்டு வந்தால் கடலை வறுபட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒரு பேப்பரிலோ தாம்பாளத்திலோ பரவலாகக் கொட்டி ஆறவிடவும்.

ஆறியதும் கையால் கசக்கி, அல்லது முறத்தில் புடைத்து தோலை நீக்கவும்.

How to roast in OTG Ovens, Microwave Oven or in Air Fryer

Skip to read in Tamil

 

 

If using OTG Ovens, pre heat the Oven in 180 degrees for 5 minutes.

Spread the nuts on the Baking tray and roast.

For every 2 minutes open, stir with a wooden spatula and check whether it is done.  Normally it takes 5 to 6 minutes to roast half a kg of groundnuts in Ovens.  However the time differ between Ovens.

To know whether it is done or not, take a couple of nuts out, let it get cooled for a minute.  Rub between two fingers, if the skin comes off easily, it is done.  Leave on the tray for 2 more minutes.

In Microwave Ovens, place half a cup of nuts on the Glass table and Microwave on High Power for 1 minute.  Wait and check.  Repeat till done.  You can alter the time and Power according to your convenience.  You have to roast them in small quantities for better results.

In Air Fryers, pre heat for about 3 minutes, place the nuts in the basket and roast in 180 degrees.  My Air Fryer can hold upto 500 gms of nuts and roast them in 7 to 8 minutes.  For all the above three, Standing Time is very important.

 

OTG Oven, Microwave Oven மற்றும்  in Air Fryerல் வறுப்பது எப்படி?

 

 

OTG Oven என்றால் 180 டிகிரியில் ஐந்து நிமிடம் ப்ரீ ஹீட் செய்து கொண்டு பேகிங் ட்ரேயில் பரவலாகக் கொட்டி வறுக்கலாம்.

ரெண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை திறந்து மரக்கரண்டியால் திருப்பிவிட்டு வறுபட்டதா என்று செக் பண்ணலாம்.

பெரிய அவன் என்றால் அரை கிலோ கடலை ஐந்து முதல் ஆறு நிமிடங்களில் வறுத்துவிடலாம், என்றாலும் ‘அவனு’க்கு ‘அவன்’ நேரம் மாறுபட வாய்ப்பு இருக்கு.

கடலை வறுபட்டதா என்று அறிய ரெண்டொரு கடலையை எடுத்து ஆறியதும் இறண்டு விரல்களுக்கு இடையில் வைத்துத் தேய்க்கலாம்.  தோல் தனியாக வந்தால் கடலை வறுபட்டுவிட்டது என்று அர்த்தம்.  ட்ரேயிலேயே ரெண்டு நிமிடம் வைத்திருந்துவிட்டு வெளியில் எடுத்து ஆற விடவும்.

மைக்ரோவேவ் அவன் என்றால் கண்ணாடி தட்டில் அரை கப் அளவு கடலையை பரத்தி, ஹை பவரில் ஒரு நிமிடம் வைக்கலாம்.  திறந்து வறுபட்டதை அறிந்து கொண்டு மறுபடி தொடரலாம். கொஞ்ச கொஞ்சமாக வறுப்பதும், நேரத்தையும் பவரையும் மாற்றி வைப்பதும் நம் வசதிப்படி.

Air Fryer என்றால் மூன்று நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்தபின், கடலையை  உள்ளே கூடையில் அரை கிலோ வரை போட்டு ஏழெட்டு நிமிடங்களில் வறுக்கலாம்.  மேலே சொன்ன மூன்றுக்குமே ஸ்டாண்டிங் டைம் என்பது முக்கியம்.  அந்த நேரத்தில்தான் கடலை பதமாக வறுபடும்.